Just In
- 16 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 38 min ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 2 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Sports
900 விக்கெட்டுகளை பூர்த்தி செஞ்சிருக்காரு ஆண்டர்சன்... மெக்கிராத்,அக்ரம் வரிசையில் 3வது வீரராக சாதனை
- Movies
சட்டையைக் கழற்றி .. சும்மா தெறிக்க விட்ட ஷிவானி.. செம கெட்டப்!
- News
பாஜக பிரமுகர் "கோட்டைக்குள்" களமிறங்கும் மமதா பானர்ஜி.. நந்திகிராமில் போட்டி.. அதிரடி அறிவிப்பு
- Lifestyle
சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...
- Finance
மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெட்ரோல் காரில் டீசலும், டீசல் காரில் பெட்ரோலும் போட்டால் என்ன ஆகும்?
கார்களில் டீசல் கார்கள், பெட்ரோல் கார்கள் என இரண்டு விதமாக இருப்பதால் பெட்ரோல், காரில் டீசலை போடுவது, டீசல் காரில் பெட்ரோலை போடுவது என இந்த குழப்பம் அடிக்கடி நடந்து விடுகிறது. பலர் தெரியாமல் மாற்றி போட்டு விட்டு பெரும் சிக்கலுக்கு உள்ளாகி விடுகின்றனர்.

அப்படி பெட்ரோல் காரில் டீசல் போட்டால் என்ன பண்ண வேண்டும் என்பதை நாம் முதலில் பார்த்து விடுவோம். நவீன கார்கள் மிகவும் சென்சிடிவ் ஆனது. தவறான எரிபொருள் இன்ஜினிற்குள் சென்று விட்டால் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும். நீங்கள் தவறான எரிபொருளை நிரப்பியது எரிபொருளை நிரப்பிய உடனேயே உங்களுக்கு தெரிந்து விட்டால் காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள்.

மாறாக அங்கிருப்பவர்களின் உதவியுடன் காரை நகர்த்தி ஒரு ஓரமாக பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு, சர்வீஸ் சென்டருக்க கால் செய்யங்கள் அவர்கள் உங்கள் டேங்கின் இன்ஜினை கழற்றி அதை சுத்தமாக கிளின் செய்து இன்ஜினிற்கு பாதிப்பில்லாமல் செய்து கொடுப்பர் அதன் பின் நீங்கள் பெட்ரோல் பில் செய்து வழக்கம் போல பயன்படுத்தலாம்.

ஒரு வேலை பெட்ரோல் பங்கிலேயே நீங்கள் கவனிக்காமல் காரை எடுத்து விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

அறிகுறிகள்
டீசல், பெட்ரோலைவிட அதிக பிசுபிசுப்பு தன்மையும், அதிக அடர்த்தியும் கொண்டது. பியூயல் பில்டருக்கும் செல்லும் போது அதில் அதில் பெரும்பாலான பகுதியில் டீசல் அடைத்து வீடும் மீதம் இருக்கும் இடம் வழியாக கம்பஷன் சேம்பருக்குள் சென்று , கம்பஷன் நடந்து எக்ஸாட் வழியாக வெள்ளை கலரில் புகை வெளியேறும்.

பெட்ரோல் இன்ஜின் ஸ்பார்க் பிளக்கால் டீசலை முழுமையாக எரிக்க முடியாது. இவ்வாறாக கம்பஷன் நடக்கும் போது இன்ஜினில் அடைப்புகளும் ஜெர்க்குகளும் ஏற்படும். இதன் மூலம் நீங்கள் காரில் தவறான எரிபொருள் அடைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.

ஆனல் டீசல் காரில் பெட்ரோலை போட்டு விட்டால் எளிதில் கண்டு பிடிக்கமுடியாது. டீசல் இன்ஜினில் சில எரிபொருளை இன்ஜெக்ட்செய்ய பல மெக்கானிஷம் சார்ந்த பொருட்கள் இருக்கும். மேலும் டீசலை விட பெட்ரோல் எளிதில் தீப்பற்றக்குடியது. இன்ஜிற்குள் சென்றவுடன் பிரஷர் ஏற்பட்டு எரியும்.

ஆனால் சில கிலோமீட்டர்கள் சென்ற பின் தான் அதன் அறிகுறி நமக்கு தெரியும் அடர் கருப்பு நிறத்தில் புகை வெளியேறும். பொதுவாக ஸ்பார்க் இல்லாமல் பெட்ரோல் எரியாது. ஆனால் டீசல் பிரஷரிலேயே எரியகூடியது. இதனால் டீசல் காரில் போடப்பட்ட பெட்ரோல்கள் எரியாமலேயே உள்ளே தங்கி விடும். தொடர்ந்து காரை இயக்க முயற்சிதால் இன்ஜின் செயல் இழந்து விடும்.

இவ்வாறான நேரங்களில் நீங்கள் முன்னதாகவே உணர்ந்து இன்ஜினை நிறுத்தி விட்டால் இன்ஜின் பாழாவதில் இருந்து தப்பிக்கலாம். இவ்வறான நேரங்களில் டேங்கில் உள்ள ஒட்டு மொத்த தவறான எரிபொருளை மெக்கானிக் ஒரு சொட்டு கூட விடாமல் நீக்கி விடுவார். தவறான எரிபொருள் இன்ஜிற்குள் செல்லாமல் தவிர்க்கப்படும்.

அவ்வாறு டீசல்இன்ஜினிற்குள் சென்று விட்டாலும், மெக்கானிக் முழு இன்ஜினையும் கழற்றி அதில் உள்ள தவறான எரிபொருள் ஒரு சொட்டு கூட இல்லாத அளவிற்கு எடுத்து விடுவார் அதன் பின் சரியான எரிபொருளை அடைத்து விட்டு சென்றால் எந்த பிரச்னையும் இல்லாமல் கார் இயங்கும்.

அதே நேரத்தில் இவ்வாறாக நடந்து விட்டால் பெட்ரோல் இன்ஜின் பியூயல் பில்டர் மற்றும் ஸ்பார்க் பிளக்களை மாற்ற வேண்டும். டீசல் இன்ஜினை பொருத்த வரை இன்ஜினிற்கு கிழே உள்ள பிளக் மூலம் அதில் உள்ள எரி பொருளை ஒரு சொட்டு வெளியேற்றி ட பின்னர் டீசலை போட்டு பயன்படுத்த வேண்டும்.