பழைய காரை புதிது போல மாற்ற 5 எளிய வழிகள்..!!

நமது வசதிக்கு தான் கார் என்பதில் எந்தவிதமாக மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும் போது நமக்குள் ஒரு கவலை எழத்தான் செய்யும்.

அதுவும் இன்றைய காலத்தில் கொத்தமல்லியில் ஆரம்பித்து, கொடைக்கானல் போகும் வரை அனைத்திற்கு நமக்கு கார் தான் தேவைப்படுகிறது.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பார்த்து பார்த்து ஆசை ஆசையாய் வாங்கிய கார் சீக்கிரமே டல் அடிக்க ஆரம்பித்து விடும்.

அப்போது வரும் கவலைகளுக்கு அளவே இருக்காது. ஒரு சிலருக்கு இது மன அழுத்தமாக மாறி பெரிய மனச்சேர்வையே உண்டாகிவிடும்.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

சிறுக சிறுக காசு சேர்ந்து வாங்கி பொருள் இப்படி அடிப்பட்டு மிதிப்பட்டு இருப்பது போல இருந்தால் யாருக்குத்தான் கவலை வராது.

என்றும் காரை இளமை மாறாமல் வைத்திருக்கு சில முக்கிய டிப்ஸுகள் உள்ளன. அதை நாம் பின்பற்றினாலே போதுமானது தான்.

மிதியடிகள்

மிதியடிகள்

நமது காரில் முதலில் அழுக்கடைவது ஃபிளோர் மேட்டில் தான். சில கார்களில் தயாரிப்பு நிறுவனங்கள் உயர் தர ஃபிளோர் மேட்டுகளை இடம்பெற செய்திருக்கும்.

அவற்றை நீங்கள் பாழாக்கக்கூடாது என்று நினைத்தால், அதை உடனே மாற்றி, அவசர தேவைக்கான மேட்டுகளை பயன்படுத்தலாம்.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறான ரப்பர் ஃபிளோர் மேட்டுகள் தற்போது மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை நீங்கள் தாரளமாக வாங்கி கார்களின் கீழ் இடம்பெற செய்யலாம்.

இது அதிகமாக அழுக்குகளை வைத்துக்கொள்ளமாலும், சுத்தம் செய்ய எளிதாகவும் இருக்கும் திறன் பெற்றவை. குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், ரப்பர் ஃபிளோர் மேட்டுகள் மிகவும் விலைக்குறைவானவை.

விண்ட்ஷீல்டு வைபர்கள்

விண்ட்ஷீல்டு வைபர்கள்

நாம் வாழும் பகுதிகளுக்கு ஏற்றவாறு தட்பவெட்ப நிலைகளை அறிந்து, அதற்கு ஏற்றவாறு வைபர்களை தான் பராமரிப்பது மிக முக்கியம்.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

குறைந்தது 2 மாதத்திற்கு ஒருமுறையாவது, வைபர்களில் உள்ள பிளேடுகளை மாற்றுவதும், மைக்ரோஃபைபர் துணிகளால் பிளேடுகளை சுத்தம் செய்ய வேண்டும்.

சீட் கவர்கள்

சீட் கவர்கள்

காருக்குள் கட்டமைப்பில் பெரிய குளறுபடியே இருந்தாலும், சீட் கவர்களின் தோற்றமும், அதிலுள்ள குஷன் அமைப்பும் அனைத்து குறைகளையும் மறக்கடிக்க செய்துவிடும்.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

எப்போது சீட் கவர்களை சுத்தப்படுத்திக்கொண்டே வாருங்கள். ஒருவேளை அதிலுள்ள நாறுகள் கிழிய தொடங்கினால், அதை அகற்றுவதில் அக்கறை காட்டுங்கள்.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

மேலும், புதிய சீட்கவர்களை வாங்கும்போது, அழுக்கள் நுழைய முடியாதபடியான வேலைப்பாடுகள் கொண்ட கவரை தேர்வு செய்யுங்கள்.

கூடவே எப்போதும், சீட் கவர்களை கண்கவர் வண்ணங்களை விட, காரின் நிறத்திற்கு ஏற்றவாறு வேறுப்படுத்தி காட்டும் நிறங்களை தேர்வு செய்யுங்கள்.

அலாய் சக்கரங்கள்

அலாய் சக்கரங்கள்

வெளித்தோற்றத்தில் கார்களில் நாம் அலாய் சக்கரங்களை பொருத்திருந்தால், அதுவே போதுமானது. காரின் தோற்றப்பொலிவு நமக்கே ஆச்சர்யத்தை தந்துவிடும்.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

அலாய் சக்கரங்கள் ஏற்றவாறு அதனுடைய பிடிமானமும் இருந்தால், பழைய கார் கூட புதிய டிரெண்டிங்கில் இடம்பெறும் என்பது கவனிக்கப்பட வேண்டிய உண்மை.

ஸ்பாய்லர் விங்க்ஸ்

ஸ்பாய்லர் விங்க்ஸ்

அதிக செயல்திறன் மற்றும் வேகத்திறன் கொண்ட கார் என்பதை காட்டுவதற்கு பல மாடல்களில் இந்த ஸ்பாய்லர் விங்க்ஸ் எனப்படும் துணை பொருள் காரின் பின்பகுதியில் இடம்பெறும்.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

காரின் பின்பகுதியில் வேகத்திறன் பாதிக்காமல் இருக்க, உதவுவது தான் இந்த ஸ்பாய்லர் விங்க்ஸ். இது தற்போது காருக்கான பிரத்யேக ஆபரணமாக மாறி வருகிறது.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

ஸ்பாய்லர்கள் செடான், ஹேட்ச்பேக் மற்றும் எஸ்.யூ.விக்கள் என அனைத்து அளவிலான கார்களுக்கு ஏற்றவாறு சந்தையில் கிடைக்கிறது. மிகவும் பொருத்தமானதை நாம் தேர்வு செய்தால் போதுமானது.

பழைய காரை புதிய காராக மாற்ற 5 எளிய டிப்ஸ்..!!

இந்த டிப்ஸுகளை பயன்படுத்தி எந்தவித கார்களையும் புதுவித தோற்றத்திற்கு மாற்ற முடியும். பழைய கார் புதிய கார் என்றில்லாமல், அனைத்து தர கார்களும் இந்த டிப்ஸுகள் பயன்படும்.

Most Read Articles

English summary
Read in Tamil: Ways to Make your Old Car as New Car. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X