Just In
- 1 hr ago
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- 15 hrs ago
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்... இந்தியாவில் பலரும் காத்து கிடந்த கார் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- 15 hrs ago
செம்மையான வேகத்தில் போக விரும்புபவர்களுக்கு ஏற்ற கார்... போர்ஷே 718 கேமேன் ஜிடி4 ஆர்எஸ் அறிமுகம்...
- 16 hrs ago
ஐடில் ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம் புதுசா கொடுத்திருக்காங்க... புதிய அவதாரத்தில் அறிமுகமானது ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்!
Don't Miss!
- Movies
12th Man movie Review...மோகன்லாலின் மிரட்டல் நடிப்பில் 12th man எப்படி இருக்கு?
- News
பாலியல் தொழிலாளர்களும் மனிதர்கள் தானே..! ஆதார் கார்ட் கொடுங்க.. அதிரடி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!
- Sports
ஃபார்ம்க்கு திரும்பியது எப்படி? கோலி கூறிய ரகசியம்.. 90 நிமிட பயிற்சி குறித்து விளக்கம்
- Finance
மதுரை அலுவலகத்தினை விரிவாக்கம் செய்யும் ஹனிவெல் டெக்.. இனி வேற லெவல்..!
- Lifestyle
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாகனத்தின் இன்ஜின் பவருக்கும் குதிரைக்கும் இவ்வளவு தொடர்புகள் இருக்கிறதா? வியக்க வைக்கும் விளக்கம்
ஒரு இன்ஜினின் திறனை குதிரை திறனிலும் திருப்புதல் திறனிலும் தான் கணக்கிடப்படுகிறது. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது குதிரைக்கும் கார் இன்ஜினிற்கும் என்ன தொடர்பு முழு விபரங்களை காணலாம் வாருங்கள்

சமீபகாலமாக மோட்டார் துறை பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. முக்கியமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் இன்ஜின்களின் வாகனங்களுக்குக் கொண்டு வருகின்றனர். பெட்ரோல் விலையேற்றம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை கருதிக் கொண்டு மக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் துவங்கிவிட்டனர்.

எந்த வாகனமாக இருந்தாலும் அதன் இன்ஜின் திறனைப் பொருத்து தான் அதன் செயல்திறன் இருக்கும். சிறப்பான இன்ஜின் செயல்பாடு கொண்ட வாகனங்கள் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தும் இன்ஜின் திறன் என்பது சர்வதேச அளவில் குதிரைப்பவர் என்ற கணக்கில் கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு குதிரை எவ்வளவு இழுவை பவரை தரும் எனக் கணக்கிட்டுக் குறிப்பிட்ட அந்த இன்ஜின் எத்தனை குதிரைகளுக்குச் சமம் எனக் கணக்கிடுகின்றனர்.

இன்ஜினிற்கும் குதிரைக்கும் என்ன தொடர்பு ஏன் குதிரையின் பவரை இன்ஜின் உடன் ஒப்பிடுகிறார்கள் என உங்களுக்குக் கேள்வி எழும்பலாம். அதற்கு விடைகாண நாம் இன்ஜின் என்ற ஒருவிஷயம் தயாரித்த காலத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு தான் முதன் முதலில் இன்ஜின் பவர் குதிரையின் பவர் உடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

உலகின் முதன் முதலாக ஸ்டீம் இன்ஜினை தயாரித்தவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வாட், 1782ம் ஆண்டுஇவர் ஸ்டீம் இன்ஜினை தயாரித்தார். இந்த இன்ஜின் அதிக திறன் கொண்டது என மக்களுக்குச் சொல்ல விரும்பினார். ஆனால் மக்கள் எவ்வளவு திறன் எனக் கேள்வி கேட்டனர். இதன் திறனை எப்படிக் கணக்கிடுவது என் முறை இருவருக்குத் தெரியவில்லை.

மக்களுக்கு இந்த இன்ஜின் திறன் என்பது தெளிவாகப் புரியவேண்டும் அப்படியான ஒரு விஷயத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும் எனக் கருதினார். இந்த யோசனையில் இருக்கும் போது தான் இவர் ஒரு விஷயத்தைக் கவனிக்கத் துவங்கினார். இவர் ஸ்டீம் இன்ஜின் தயாரித்த காலத்தில் மக்கள் போக்குவரத்திற்குக் குதிரை வண்டிகளையே அதிகம் பயன்படுத்தினர்.

குதிரைகள் தான் சுமைகளைச் சுமப்பது, அதிக எடை கொண்ட விஷயங்களைத் தூக்குவது போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதைக் கவனித்த அவர் தான் தயாரித்த இன்ஜின் இத்தனை குதிரைகளுக்குச் சமம் என மக்களுக்குச் சொன்னால் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என நினைத்தார்.

இதையடுத்து அவர் குதிரைகளின் இழுவை திறனை அறிந்தார். ஒரு குதிரை 33,000 lb/ft திறனைச் சராசரியாக வெளிப்படுத்துவதாகக் கணக்கிட்டார். இதை அவர் குதிரைபவர் எனக் குறிப்பிட்டு தன் இன்ஜின் எத்தனை குதிரை பவர்களை கொண்டது என கணக்கிட்டு சொன்னார் மக்களுக்கும் அந்த விஷயம் எளிதாகப் புரிந்து மக்கள் இந்த இன்ஜினை ரசிக்கத் துவங்கினர்.

இன்றும் மோட்டார் வாகன இன்ஜினை பொருத்தவரை எத்தனை குதிரைபவர் என்று தான் இன்றும் கணக்கிடப்படுகிறது. ஆனால் இன்று வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இன்றென்பவரைக் குறிப்பிடும் போது BHP எனக் குறிப்பிடுகின்றனர். இதன் விரிவாக்கம் Brake Horse power, இந்த பிரேக் என்ற வார்த்தை ஏன் இந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் காருக்கான டார்க் பவரை பற்றித் தெரிந்து கொள்வோம்.

டார்க் என்பது திருப்புதல் திறன், குதிரை பவர் என்பது ஒட்டு மொத்த இன்ஜினின் பவர் அந்த பவர் எப்பொழுதும் இன்ஜினால் வெளிப்படுத்த முடியும். டார்க் திறன் என்பது இன்ஜின் கிராங்ஃசாப்ட்டை எவ்வளவு திறனுடன் திருப்புகிறது என்பதாகும். இந்த டார்க் திறன் என்றால் என்னவென புரிந்து கொள்ள ஒரு உதாரணம் ஒன்றைப் பார்க்கலாம்

நீங்கள் வீட்டில் ஒரு கதவில் ஸ்க்ரூ ஒன்றை திருப்புளியைப் பொருத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஏற்கனவே துளையிட்ட ஒரு இடத்தில் ஸ்ரூவை உங்கள் குழந்தையிடம் கொடுத்து மாட்டச் சொல்கிறீர்கள் என்றால் அது எளிமையாக ஸ்ரூவை மாட்டி விடும். திருப்புளியில் குறைவான அழுத்தம் கொடுத்தாலே ஸ்ரூ ஓட்டைக்குள் சென்றுவிடும். ஆனால் ஓட்டை இல்லாத இடத்தில் உங்கள் குழந்தையால் மாட்ட முடியாது. அது தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் மாட்ட முடியாது. ஆனால் அதை நீங்கள் மாட்ட முயன்றால் மாட்டலாம். அதற்குக் காரணம் உங்கள் குழந்தையின் அதிகபட்ச திறனைவிட உங்களால் அதிக திருப்பு விசையை கொடுக்க முடியும்.

இதுதான் இன்ஜினின் டார்க் திறன். ஒரு கார் சாதாரணமாக ரோட்டில் இருக்கும் போது இன்ஜின் சாதாரணமான திறனை கொடுத்தாலே வாகனம் நகரும், ஆனால் ஒரு கார் ஏற்றமான பகுதியில் நிற்கிறது. என்றால் வழக்கத்தைவிட அதிகமான திறனை இன்ஜின் கொடுத்தால் தான் கார் நகரும் இந்த காரின் காராங்ஃசாப்ட்டை கணக்கிடும் முறையைத் தான் டார்க் திறன் எனக் கணக்கிடுகின்றனர். ஒரு இன்ஜின் வெளிப்படுத்து அதிகபட்ச திருப்பு விசை தான் டார்க் திறன் என அழைக்கப்படுகிறது.

இந்த திருப்பு விசை ஒரே இன்ஜினை கொண்டிருக்கும் வேறு வேறு மாடல் காராக இருந்தாலும் மாறுபடும். இதற்கு ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். நீங்கள் கார் டயர் பஞ்சர் ஆனால் ஸ்பனேரை கொண்டு கார் டயலை கழட்டுவீர்கள். ஆனால் பெரிய டயர்களை கழட்டும்போது சிலர் சற்று நீளமான ஸ்னேர்களை பயன்படுத்துவார்கள். அதாவது ஸ்பனர்களின் நீளத்திற்கு ஏற்ப திருப்புதல் திறன் மாறுபடும். இதனால் ஒரே இன்ஜினாக இருந்தாலும் அதில் பொருத்தப்படும் மற்ற பாகங்களைப் பொருத்து டார்க் மாறுபடும்.

இந்த பிரேக் என்ற சொல் வாகனத்தின் பொருத்தப்படும் பிரேக் பேண்டை குறிக்கிறது. இது வாகனத்தின் இன்ஜின் கிராங்க்ஃசாப்ட் உடன் உராய்வை ஏற்படுத்தி அதைச் சுற்றி வைக்கிறது. இந்த உராய்வின் தன்மையை வைத்து டார்க் திறன் அளவிடப்படுகிறது. ஒரு இன்ஜினின் குதிரை பவர் என்பவர் அதன் பிரேக் பேண்ட் பகுதியில் எவ்வளாக இருக்கிறது என்பதைக் கணக்கிடுவதாகும் அதைக் குறிப்பிடவே BHP எனக் குறிப்பிடுகின்றனர்.

இந்த குதிரைபவரை சில ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனங்கள் PS எனக் குறிப்பிடுகின்றனர். அதன் முழு அர்த்தம் Pferdestarke இதை குதிரைபவர் என்றும் சொல்லலாம். அவர்கள் மொழியில் Pferdestarke எனக் குறிப்பிடுகின்றனர். PS மற்றும் HP இந்த இரண்டும் ஒன்று தான். இனி இந்த குதிரைத் திறன் பவர் கொண்ட வித்தியாசமான இன்ஜின்களை காணலாம்.

இந்த உலகின் குறைவான குதிரைத் திறன் கொண்ட கார் என்றால் அது அய்க்ஸம் ரேஞ்ச் என்ற காரை சொல்லலாம். இந்த கார் வெறும் 20 பிஎச்பி திறனைத் தான் வெளிப்படுத்தும் இன்று பைக்குக்கள் கூட அதை விட அதிக திறனை வெளிப்படுத்துகிறது. இந்த கார் அதிகபட்சமாக வெறும் 28 கி.மீ வேகத்தில் தான் செல்லும்

உலகின் அதிக குதிரைபவர் கொண்ட இன்ஜின் என்றால் Wartsila RT-flex96C என்ற இன்ஜின் தான். இது கப்பல்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசல் இன்ஜின் ஆகும். 14 சிலிண்டர்களுடன் 27 மீட்டர் நீளம், 13 மீட்டர் உயரம் கொண்ட இந்த இன்ஜின் 102 ஆர்பிஎம்க்கு 1,08,920 குதிரை திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

கார்களை பொருத்தவரை அதிக குதிராபவர் கொண்ட கார் என்றால் SSC Ultimate Aero TT என்ற காரை சொல்லலாம். இந்த கார் 6.3 லிட்டர் வி8 இன்ஜினை கொண்டுள்ளது. இது அதிகபட்சமாக 1,183 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் அதிகபட்சமாக 410 கி.மீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டது. இன்ஜின் குதிரை பவர், மற்றும் டார்க் திறன் குறித்து உங்களுக்குத் தெளிவாக இதுவரை இல்லாமல் இருந்திருந்தால் இதைப் படித்த பின்பு புரிந்திருக்கும் என நம்புகிறோம். இதில் மேலும் உங்களுக்குச் சந்தேகங்கள் இருந்தால் அதை கமெண்டில் சொல்லுங்கள்
-
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
-
காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம்... லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு...
-
சூரிய வெளிச்சத்திலும் சார்ஜ் ஆகும் சூப்பரான எலெக்ட்ரிக் கார்... விலை எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!