இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

நவீன கார்கள் குறித்து நீங்கள் படிக்கும் போது இன்போடெயின்மெண்ட் என்ற ஒரு அம்சம் இருப்பதாக குறிப்பிடுவர், பலருக்கு இந்த இன்போடெயின்மெண்ட் என்றால் என்ன என்று தெரியாது.

டிரைவர்களுக்கு தகவல்களையும் (இன்பர்மெஷன்) பயணிகளுக்கு பொழுதுபோக்கையும் (என்டர்டெயிண்மெண்ட்) தரும் கருவியின் பெயர்தான் இன்போடெயின் மெண்ட். இது கார் டிரைவரின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கருவி.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

முன்பு கார்களில் பொழுதுபோக்க சி.டி. பிளேயர்களை மாட்டதுவங்கினர். பின்னர் பென்டிரைவ் மூலம் பாடல் கேட்க துவங்கினர். அடுத்ததாக டிரைவர்களுக்கு ரூட் தெரிய தனியாக ஒரு டேப்லெட் போன்ற ஒரு கருவியை வாங்கி காரில் பொருத்தினர்.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

இதற்கிடையில் காரின் பின்பக்கம் கேமரா பொருத்தி அதை டிரைவர் பகுதியில் உள்ள டேப்லெட்டில் கனெக்ட் செய்தனர். இதன் மூலம் டிரைவர் காரை பின்னாடி எடுக்கும் போது பின்புறம் என்ன இருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

இப்படி ஒவ்வொன்றிற்குள் தனித்தனிக்கருவியாக கார் ஓனர்களே வாங்கி பொருத்தி வந்ததை அறிந்து அவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக இன்போடெயிண்மெண்ட் என்ற ஒன்றை கார் நிறுவனங்கள் தற்போது கொண்டு வந்துள்ளன.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

இந்த கருவி மூலம் காரில் பாட்டு கேட்கலாம் , காரை ரிவர்சில் எடுக்கும் போது காரின் பின்புறம் உள்ள கேமரா மூலம் அங்கு எவ்வளவு இடம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

சேட்டிலைட் மூலம் கார் மேப்களை பார்த்து செல்லும் இடத்தை குறித்து அப்பகுதிக்கு செல்லலாம், இன்டர்நெட் வசதியிருந்தால் நாம் செல்லும் ரோட்டில் உள்ள டிராபிக் குறித்த தகவல்களை பெறலாம்.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

நீங்கள் கார் ஓட்டி கொண்டிருக்கும் போதே உங்கள் மொபைலில் வரும் மெசெஜ்களை ப்ளூடூத் மூலம் இதன் திரையில் பார்க்கலாம். பயணத்தின் போது ரேடியோவை கனெக்ட் செய்து டிஜிட்டல் ரேடியோ கேட்கலாம்.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

காரை பார்க் செய்துவிட்டு நீங்கள் ஓய்வெடுக்கும் சமயத்தில் டி.வி., பார்க்கலாம், உங்கள் மொபைல் அல்லது டேப்லெட்டில் உள்ள ஸ்கிரினை நேரடியாக இதில் மீரர் செய்து பயன்படுத்தலாம்

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

இந்த அனைத்து வசதிகளும் ஒரே கருவியில் உங்கள் காரின் டேஷ்போர்டிலேயே வருவது தான் இன்போடெயின்மெண்ட். இது முழுவதும் டச் ஸ்கீரின் தொழிற்நுட்பத்துடனேயே வருவதால் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பட்டன் என உங்கள் டேஷ் போர்டை பட்டன்களால் நிறைக்காது.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

மேலும் சில கார் நிறுவனங்கள் கையசைவுகளாளேயே செயல்படும் கெஸ்டர் தொழிற்நுட்பத்துடனும் வருகிறது. அதாவது நீங்கள் கையை மேலே தூக்கினால் பாட்டின் சத்தத்தை உயர்த்த கூறுகிறீர்கள் என அதுவே உணர்ந்து காரின் சத்தத்தை கூட்டும்.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

ஏசி அளவை கூட்ட குறைக்கவும், ஏ.சி. கண்ட்ரோலை திருகுவது போன்ற செய்கை செய்தாலே அதற்கு தகுந்தாற் போல் ஏசி அளவு கூடி குறையும்.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

சில முக்கிய தகவல்கள் கார் டிரைவரின் ஸ்டியரிங்கிற்கு பின்புறம் உள்ள பெட்ரோல் அளவு, ஸ்பீடை காட்டும் பினாக்கிலேயே தெரியும். இதன் மூலம் டிரைவரின் கவனம் ரோட்டில் இருந்து திசை திரும்பாது.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

சில கார்களில் நம் குரல் மூலமே அதை கட்டுப்படுத்தும் வசதியையும் வழங்குகின்றனர். இது உயர்ரக கார்களில் மட்டுமே வரும் வசதியாக இருக்கிறது.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

இந்த தொழிற்நுட்பம் ஒவ்வொரு காரிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. பி.எம்.டபிள்யூ நிறுவனம் அதற்கு ஐ-டிரைவ் எனவும், ஆடி கார் நிறுவனம் எம்எம்ஐ எனவும், மெர்ஸிடியஸ் கார் நிறுவனம் கமெண்ட் எனவும் அழைத்து வருகின்றனர்.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

மொத்தத்தில் இந்த இன்போடெயிண்மெண்ட் என்பது உங்கள் காரில் உள்ள அம்சங்களை ஸ்மார்ட்டாக கையாள உதவும் கருவி. இதை பயன்படுத்தி நீங்கள் நிச்சயம் சிறந்த பயண அனுபவத்தை பெறமுடியும்.

இன்போடெயின்மெண்ட் சாதனம் என்றால் என்ன தெரியுமா?

உங்கள் காரில் உள்ள இன்போடெயிண்மென்ட் இயங்கும் இயங்குதளங்களுக்கு ஏற்பட பல ஆப்ஸ்கள் வந்துட்டது. அதையும் நிச்சயம் டவுண்லோடு செய்து பயன்படுத்த தவறிவிடாதீர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
What is infotainment?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X