எக்ஸாஸ்ட் பைப்ல இப்படி ஒரு விஷயத்தை பாத்தீங்கன்னா இன்ஜின் சீஸ் ஆக போகுதுன்னு அர்த்தம்!

இன்று கார் பைக் வைத்திருக்கும் பலருக்கு இந்த ரகசியம் தெரியாது. கார் பைக்கில் எக்ஸாஸ்ட் பைப்பில் தண்ணீர் வந்தால் அதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கிறதாம். அதை எப்படிக் கண்டுபிடிப்பது இதனால் ஆபத்தா எனக் காணலாம் வாருங்கள்.

இன்று கார், பைக் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. வாகனம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருளாகிவிட்டது. இந்நிலையில் அதைப் பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. நாம் வாகனங்களை முறையாகப் பராமரிக்காமல் விட்டாலோ அல்லது, அதில் ஏதாவது பிரச்சனை இருந்தாலே சில அறிகுறிகள் மட்டும் தெரியவரும். இப்படியான ஒரு விஷயத்தைப் பற்றித் தான் இங்குக் காணப்போகிறோம்.

எக்ஸாஸ்ட் பைப்ல இப்படி ஒரு விஷயத்தை பாத்தீங்கன்னா இன்ஜின் சீஸ் ஆக போகுதுன்னு அர்த்தம்!

நாம் கார் அல்லது பைக்கின் எக்ஸாஸ்ட் வழியாக சில நேரம் தண்ணீர் வருவதை பார்த்திருப்போம், தண்ணீர் என்றால் பைப்பில் வருவது போல அல்ல, உட்புறமாக ஈரமாக இருப்பதைக் கவனித்திருப்போம். இது ஏதோ மழை பெய்ததால் நடந்தது எனப் பலர் பெரிய அளவில் இதைக் கண்டு கொள்வதில்லை. இதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தையும் உணருவதில்லை. இப்படியாக வாகனத்தின் எக்ஸாஸ்டில் தண்ணீர் இருந்தால் அதற்கு என்ன அர்த்தம்? அதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்து என்ன? முழு விபரங்களைக் காணலாம்.

கன்டன்சேஷன்

இன்ஜின் செயல்பாட்டிலிருக்கும் போது அதிலிருந்து புகை வெளியேறிக்கொண்டிருக்கும். இன்ஜின் ஆஃப் ஆனவுடன் எக்ஸாஸ்டில் உள்ள புகை வெளியேறாமல் அங்கேயே இருக்கும். புகை சூடாக இருக்கும். ஆனால் வெளியில் வெப்பம் குறைவாக இருந்தால் கண்டன்சேஷன் ஏற்பட்டு இந்த புகை கூலாகி அது கார்பன் கலந்த தண்ணீராக மாற வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக நடந்தால் எக்ஸாட் முனையில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் நிற்பதையோ வழிவதையோ காண முடியும்.

கேட்டலிஸ்ட் கன்வெர்டர் தயாரிப்பு

வாகனங்களில் கேட்டலிஸ்ட் கன்வெர்ட்ர் பயன்படுத்தப்படும். இது வாகனத்திலிருந்து வெளியேறும் மாசு நிறைந்த புகையில் மாசுவை குறைக்கும் ஒரு கருவியாகும். மாசுவை குறைக்கும் முயற்சியில் குறைவான அளவு வாட்டர் வேப்பர் உற்பத்தியாகும். இது கூட எக்ஸாட் வழியாகத் தான் வழியே வரும் இது எல்லாம் சாதாரணமாக ஒரு விஷயம் தான் இதைப் பற்றிப் பயப்பட வேண்டிய தேவையில்லை.

ஹாட் இன்ஜின் கன்டன்ஷேசன்

ஒரு வாகனத்தின் ஹீட்டிங் புராசஸ் என்பது இன்ஜின் ஸ்டார்ட் ஆகும். போது இன்ஜினில் துவங்கி மெல்ல மெல்ல எக்ஸாஸ்ட் வரை வரும். அப்படியான நேரங்களில் எக்ஸாஸ்ட் வழியாகத் தண்ணீர் வெளியே வருவது சாதாரண விஷயம் தான் ஆனால் நீண்ட நேரம் வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் போது தண்ணீர் எக்ஸாஸ்ட் வழியாக வெளியே வந்தால் வாகனத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என அர்த்தம் நீங்கள் உடனடியாக அதற்கான டாக்டரை பார்க்க வேண்டியதுதான்.

வாசம்

தண்ணீர் வெளியேறும் போது அதன் தன்மை மற்றும் வாசனையை வைத்தே என்ன பிரச்சனை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். புகை வெளியேறும் பைப்பில் தண்ணீர் வந்தால். அந்த தண்ணீரில் எரியும் எண்ணெய் வாசத்திலிருந்தால் இது வாகனத்தின் இன்ஜின் ரிங் செயல் இழந்துவிட்டது அல்லது வாகனத்தின் பிஸ்டனில் கிராக் உள்ளது அல்லது இன்ஜினிற்குள் கூலண்ட் லீக் ஆகிறது என அர்த்தம் உடனடியாக இன்ஜினை சரி செய்ய வேண்டும்.

இதுவே புகை வெளியேற்றும் பைப் வழியாகத் தண்ணீர் வெளியேறினால் அந்த தண்ணீரில் ஸ்வீட் ஸ்மெல் வந்தாலும் அது வாகனத்தின் இன்ஜினில் பிரச்சனை இருப்பதாகவே அர்த்தம், ஆனால் இப்படியான வாசனை எதுவும் இல்லாமல் தண்ணீர் அதுவும் நீண்ட நேரமாக இன்ஜின் ஓடும் போது வராமல் ஆரம்பத்தில் மட்டும் குறைவாக வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை இது சாதாரண கண்டன்ஷேசன் விஷயம் தான். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
What is the reason why water coming out of the vehicle silencer
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X