3rd பார்டி இன்சூரன்ஸ்ல இதுலாம் தான் கவர் ஆகுமா? யாருக்குமே தெரியாத ரகசியம்!

இந்தியாவில் 3rd பார்டி இன்சூரன்ஸில் எது எல்லாம் கவர் ஆகும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

இந்தியச் சாலைகளில் ஓடும் அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் என்பது கட்டாயம். இந்திய மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி இந்தியாவில் ஓடும் வாகனங்களுக்குக் குறைந்த பட்சம் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் இருந்தாலே போதுமானது. இன்சூரன்ஸ்களில் பல வகை இருந்தாலும் கட்டாயம் என்பது மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் தான். இது தான் குறைந்த அளவு பிரிமியம் கட்ட வேண்டிய இன்சூரன்ஸ் தொகையாகும்.

3rd

இப்படியாக நாம் நம் வாகனத்திற்கு மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸை மட்டும் எடுத்துள்ள நிலையில் நம் வாகனம் விபத்தில் சிக்கினால் எவ்வளவு பணம் இன்சூரன்ஸிலிருந்து கிடைக்கும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. இந்த பதிவில் நாம் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது ஒரு நபருக்கு ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் அந்த விபத்தில் குறிப்பிட்ட வாகனத்தால் வேறு யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான நஷ்டத்தை ஈடு செய்வது தான் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ், இதில் சொந்த வாகனத்திற்கான பாதிப்பு உள்ளடங்காது. மூன்றாம் நபருக்கான பாதிப்பு என்றால் உயிரிழப்பு, காயம், ஊனம், மற்றும் பொருள் சேதாரம் ஆகியவை உள்ளடங்கும்.

இதில் பொருள் சேதாரத்திற்கு மட்டும் ரூ7.5 லட்சம் வரை இன்சூரன்ஸ் உச்ச வரம்பு இருக்கிறது. மற்ற வகையான பாதிப்புகளுக்கு உச்ச வரம்பு கிடையாது. குறிப்பிட்ட நபர் கோரும் காரணத்திற்கு ஏற்ப கோர்ட் இதை முடிவு செய்யும். இந்த இன்சூரன்ஸ் இருந்தால் ஒரு நபரின் வாகனம் விபத்தில் சிக்கினால் அந்த விபத்தால் ஏற்படும் நஷ்டத்திற்கு அவர் பொறுப்பாக வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர் வாகனம் மற்றும் அவர் அந்த விபத்தில் பாதிக்கப்பட்டால் அந்த பாதிப்பிற்கு அவரே பொறுப்பாவார்.

அதனால் மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் மட்டும் நீங்கள் வைத்துள்ளீர்கள் இந்த நேரத்தில் உங்கள் வாகனம் விபத்தில் சிக்கி சேதமாகிவிட்டால் நீங்கள் தான் இந்த வாகனத்தை ரிப்பேர் செய்வதற்கான செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரம் உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கும் நீங்களே பொறுப்பு மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸில், இன்சூரன்ஸ் நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்காது.

அத்தனை விதமான பாதிப்புகளையும் உள்ளடக்கும் காம்ப்ரீஹென்ஸிவ் இன்சூரன்ஸ் என ஒரு விஷயம் மார்கெட்டில் இருக்கிறது. இது ஒரு வாகனம் விபத்தில் சிக்கினால் அந்த விபத்தால் பாதிப்படைந்தவர்களுக்கான நஷ்ட ஈடு, விபத்தில் சிக்கிய வாகனத்தைச் சரி செய்வதற்கான செலவு, மற்றும் அந்த வாகனத்தில் பயணித்தவருக்கான நஷ்ட ஈடு எல்லாம் இந்த வகையான இன்சூரன்ஸில் சேர்ந்துவிடும். ஆனால் இதற்கான பிரிமியம் தொகை அதிகமாகும்.

என்றுமே நீங்கள் ஒரு கார் வைத்திருக்கிறீர்கள் என்றால் காம்பிஹென்ஸிவ் இன்சூரன்ஸை எடுப்பதே சிறந்தது. அனைத்து வகையான நஷ்டங்களையும் ஈடு செய்யும்.இதற்குச் சற்று பிரிமியம் அதிகமாக இருந்தாலும் இதற்காகக் கிடைக்கும் பாதுகாப்பும் அதிகம், விபத்தில் சிக்கினால் நாம் செலவு செய்ததற்குக் கிடைக்கும் பணமும் அதிகம். உங்கள் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போதும் புதுப்பிக்கும் போதும் காம்பிஹென்ஸிவ் இன்சூரன்ஸ் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Most Read Articles
English summary
What is third party insurance what all cover in this
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X