Just In
- 8 hrs ago
விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹோண்டா!! 4 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்து அசத்தல்!
- 8 hrs ago
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காருக்கு முன்பதிவு தொடங்கியது... விரைவில் விற்பனைக்கு அறிமுகம்!
- 9 hrs ago
மீண்டும் சோதனை ஓட்டத்தில் டாடா மோட்டார்ஸின் சிஎன்ஜி கார்கள்!! வழக்கமான பெட்ரோல் என்ஜினில் மாற்றம் இருக்குமா?
- 10 hrs ago
சேல்ஸ் எங்கயோ போயிருச்சு... முன்னெப்போதும் இல்லாத வகையில் கார்களை விற்று தள்ளிய எம்ஜி மோட்டார்!
Don't Miss!
- News
அமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Movies
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆட்டோ கியர் கார்களில் எப்பொழுது மேனுவல் கியரை பயன்படுத்த வேண்டும் என உங்களுக்கு தெரியுமா?
தற்போது வரும் பெரும்பாலான ஆட்டோ கியர் கார்களில் மேனுவல் கியர் வசதிகளுக்கும் இருக்கிறது. ஆட்டோ கியர் கார்களில் மெனுவல் கியர்களை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என உங்களுக்கு தெரியுமா

ஆட்டோ கியர் கார்களில் மேனுவல் கியர்கள் காருக்கு தகுந்தாற் போல் சாதாரண கார்களில் உள்ள கியர் லிவர் வகையிலும், மற்றும் ரேஸ் கார்களில் உள்ளது போல் ஸ்டியரிங் வீலுக்கு பின்புறம் உள்ள பேடில் ஷிஃப்டர் வகையிலும் கிடைக்கிறது.

இவ்விரு வகை மேனுவல் கியர்களையும் பயன்படுத்த கிளட்ச் தேவையில்லை, இவ்விரு கியர்களுக்கும் கியர்களை மாற்ற எலெக்ட்ரிக் சிக்னல்களையே அனுப்புவதால் ஆட்டோ கியர் கார்களில் கிளட்சிற்கு வேலையே இல்லை.

ஆட்டோ கியர் கார்களுக்கு வரப்போகும் மலையேற்றமோ, கொண்டை ஊசிவளைவுகள் குறித்து தெரியாது ஆனால் அந்த சமயங்களில் நாம் மேனுவல் கியருக்கு மாற்றி காரை இயக்குவது மூலம் நாம் சிக்கல் இல்லாத பயணத்தை மேற்கொள்ளமுடியும்.

அடுத்ததாக அதிக எடையுள்ள காரையோ மற்ற வாகனத்தையோ நம் காரில் டோ செய்து இழுக்கும் போதும், இன்ஜினில் இருந்து அதிக பவர் தேவை படுவதால் மேனுவல் கியரை பயன்படுத்த வேண்டும்.

சகதிகளிலிலோ, குழி அல்லது மணல்களிலோ நம் கார் வீல் மாட்டிக்கொள்ளும் நிலையில் நாம் மேனுவல் கியரை உபயோகிக்க வேண்டும். அதன் மூலம் வீல்கள் சுற்றிக்கொண்டு காரை எடுக்க முடியாமல் மாற்றிக்கொள்வதில் இருந்து தப்பிக்கலாம்.

உங்கள் காரில் பனியில் டிரைவ் செய்யும் மோடு இருந்தால் அந்த கார்களில் மெனுவலுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை அந்த மோடை பயன்படுத்தி காரை மீட்கலாம்.

ஆட்டோ கியாரில் கார் சென்று கொண்டிருக்கும் போது நாம் எப்பொழுது வேண்டுமானாலும் கியரை மேனுவலுக்கு மாற்றலாம், மேனுவலில் எந்த கியரில் இருக்கிறது என்பது குறித்து அச்சப்பட தேவையில்லை, இது நாம் ஓவர் டேக் செய்யும் போது மெனுவல் கியர் இன்ஜினுக்கு அதிக பவர் கொடுக்க வசதியாக இருக்கும்.

மேலும் நாம் மேனுவல் கியருக்கு மாற்றும் போது அதிக ரேஸிங், அல்லது குறைவான ரேஸிங் ஏற்பட்டாலோ, கார் நிற்கும் நிலைக்கு சென்றாலோ ரேவ் லிமிட்டர் எனும் நுட்பம் மூலம் தானாக ஆட்டோ கியருக்கு மாற்றும் வசதியும் இருக்கிறது. இது இன்ஜின் சேதத்தில் இருந்தும் பாதுகாக்கும்.

மேனுவல் மோடு என்பது சில கார்களில் எஸ் என்ற குறியீட்டுடனோ அல்லது எம் என்ற குறியீட்டுடனோ அமைந்திருக்கும். பேடில் ஷிஃப்டரை பொருத்தவரை நம் வலது கை ஓரம் கியரை அதிகரிக்கும் பெடலும்"+" என்ற குறியீடுடவும், இடது கை ஓரம் கியரை குறைக்கும் பேடில் "-"என்ற குறியீடுடனும் அமைந்திருக்கும்.

கியர் லிவரை பொருத்தவரையில் கியர் லிவரிலேயே "+" "-" என்ற குறியீடு இருக்கும் அதை பயன்படுத்தி கியர்களை மாற்றி கொள்ளலாம். பெரும்பாலான கார்களில் முன்புறம் கியர் அதிகரிக்கும் ஆப்சனும், பின்புறம் கியர் குறைக்கும் ஆப்சனும் அமைந்திருக்கும். எனினும் சில கார்களில் இது மாறுபடுகிறது.

பெரும்பாலும் கியர் மாற்றம் என்பது நம் காரை 1500 ல் இருந்து 2500 ஆர்.பி.எம். இல் காரை இயக்கும் போது மாற்ற வேண்டும். முழு பவருடன் காரை இயக்க விரும்பினால் சிவப்பு கோடு வரை ஆர்.பி.எம். சென்ற பின் கியரை மாற்றலாம். அதற்கு ரேவ் லிமிட்டர் அனுமதிக்கும்.