தீயணைப்பு வாகனங்கள் ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

மக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் இந்த தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு நிறத்தில் மட்டும் வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது தெரியுமா? மேலும் இந்த நிறம் தான் எல்லா நாடுகளிலும் இருக்கிறதா?

தீ விபத்து ஏற்பட்டாலோ ஆபத்து காலங்களிலோ நமக்கு உதவ வருவது தீயணைப்பு வீரர்கள் தான். ரோட்டில் தீயனைப்பு வாகனம் செல்லும் போது எல்லோரும் என்ன நடந்தது என்று பதற்றப்படுவர்.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

இப்படியா மக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் இந்த தீயணைப்பு வாகனம் ஏன் சிவப்பு நிறத்தில் மட்டும் வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது தெரியுமா? மேலும் இந்த நிறம் தான் எல்லா நாடுகளிலும் இருக்கிறதா? வாருங்கள் கீழே இது குறித்து தெளிவாக அலசுவோம்

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

சிவப்பு நிறம் குறித்த வரலாறு

தீயனணப்பு வாகனங்களுக்கு பல ஆண்டு வரலாறு உள்ளது. முதன் முதலில் தயார் செய்யப்பட்ட தீயனணப்பு வாகனம் சிவப்பு நிறத்தில் இருந்ததால் அதே நிறமே தொடர்ந்து கடைபிடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

1900மாவது ஆண்டு ஹென்றி போர்டு என்பவர் தீயனைப்பு வாகனத்தை கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்ய பரிந்துரைத்தார் அதற்க பெயிண்டிற்கான செலவும் குறைவாக இருந்தது.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

ஆனால் சில நாடுகள் இந்த வாகனத்தை மிக அதிகமாக பராமரிக்கும் பொருட்டு உயர்ந்த விலை பெயிண்ட்டையே பயன்படுத்தினர். அந்த காலகட்டத்தில் சிவப்பு நில பெயிண்ட் தான் உயர்ந்த விலையிலும் இருந்தது.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

வரலாறு எப்படியோ ஆனால் அது அறிவியல் பூர்வமாகவும் பல இடங்களில் ஒத்துப்போகிறது. இதனால் பல நாடுகளில் சிவப்பு நிறத்திலேயே தீயனணப்பு வாகனங்களில் பெயிண்ட் செய்துள்ளனர்.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

அறிவியல் பூர்வ தகவல்கள்

2004ம் ஆண்டு ஜேம்ஸ் டி வெல்ஸ் என்பவர் புளோரிடா ஹைவே பேட்ரோலுக்காக நடத்திய ஆய்வில் சிவப்பு மற்றும் நீல நிறம் தான் மக்கள் கண்களுக்கு எளிதாக தெரியும் என தெரிவித்திருந்தார். ஆனால் சிவப்பு நிறம் பகல் நேரத்தில் தான் தெளிவாக தெரியும் இரவு நேரங்களில் மங்களாகிவிடுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

1965ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கல்லூரியில் நடந்த ஆய்வில் எலுமிச்சை கலர் அல்லது அடர் மஞ்சள் கலர் தான் இரவு நேரம் உட்பட எல்லா நேரங்களிலும் தெளிவாக தெரியும் என அறிவித்திருந்தார்.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

ஆமெரிக்காவில் ஒவ்வொரு மாகணங்களிலும் ஒவ்வொரு கலரில் தீயனணப்பு வாகனங்கள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. அதன் படி நியூயார்க்கை சேர்ந்த ஸ்டீபன் சாலமன் என்பவர் நடத்திய ஆய்வில் சிவப்பு நிறம் மிக குறைந்த அளவிலேயே மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட தீயனணப்பு வாகனங்களை விட சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட வாகனங்கள் அதிக அளவில் விபத்தில் சிக்கியதாகவும் கூறியுள்ளார்.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

இன்று உலகில் சிவப்பு, மஞ்சள், கருப்பு, நீலம் ,பச்சை, வெள்ளை என பல வண்ணங்களில் தீயனணப்பு வாகனங்கள் செயல்பட்டு தான் வருகின்றன. ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு காரணங்கள் சொல்லப்படுகிறது.

தீயனணப்பு வாகனங்கள ஏன் சிவப்பு கலரில் இருக்கிறது தெரியுமா?

ஆனால் கலருக்கான மக்களிடம் உள்ள எண்ணம் நாட்டிற்கு நாடு மாறுபடுவதால் இந்த மாறுபட்ட பார்வையை ஒவ்வொருவரும் முன்வைக்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை சிவப்பு எச்சரிக்கையின் நிறமாக மக்கள் மனதில் இருப்பதால் சிவப்பு நிறமே இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Why are fire trucks red?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X