டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

உங்கள் பைக்கிற்கு டிஸ்க் பிரேக் சிறந்ததா? டிரம் பிரேக் சிறந்ததா? எந்த டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதிலை இங்கு நாம் செய்தியாக காண்போம்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

தற்போது வெளியாகி வரும் பைக்குகள் அதிக வேகமாகவும், அதிக பவர் உடனும் வருகிறது. மக்களும் அந்த மாதிரியான பைக்குகளையே வாங்கி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் இந்தியாவில் ரோடுகளில் தரமும் அதிகளவில் பராமரிக்கப்பட்டு சிறந்த ரோடாக மாற்றப்பட்டு வருகிறது.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

இந்தியாவில் ரோடுகள் என்னதான் மாற்றப்பட்டாலும் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இன்னும் சாலை விதிகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. நீங்கள் வேகமாக வரும் போது பலர் சாலை குறுக்கே விதிகளை மீறி வரக்கூடும். ஆகையால் இந்தியாவில் ஓடும் பைக்குகளுக்கு பிரேக் என்பது மிக கட்டாயம்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

இந்தியாவில் மொத்தம் டிரம் மற்றும் டிஸ்க் ஆகிய இரண்டு விதமான பிரேக்குகளில் மட்டுமே பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த இரண்டில் டிஸ்க் பிரேக் தான் சிறந்தது. இது தான் பைக்கில் செல்பவர்களுக்கும், எதிரே வருபவர்களுக்கு அதிக பாதுகாப்பை தருகிறது. டிஸ்க் பிரேக் தான் சிறந்தது. என்பதை கீழே அலசுவோம் வாருங்கள்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

நவீன காலத்தில் தயாரிக்கப்படும் டிஸ்க் பிரேக்குகள் சிறப்பாக செலாற்றுகிறது. பொதுவாக டிஸ்க் பிரேக்குகள் பைக்கின் வலது புறத்தில் அமைக்கப்படும். அந்த டிஸ்கின் ஒரு பகுதியில் பேடு அமைக்கப்பட்டிருக்கும். அந்த பேடு பகுதி கனமான டியூப் மூலம் பிரேக்குடன் ஹேண்டில் உடன் இனணக்கப்பட்டிருக்கும். கனமான டியூப் முழுவதும் பிரேக் ஆயிலால் நிரப்பப்பட்டிருக்கும்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

பிரேக் பிடிக்கப்படும் போது கனமான டியூபில் நிரப்பபட்ட ஆயிலில் அழுத்தம் ஏற்பட்டு டிஸ்க் பிரேக் பேடில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அது டிஸ்க் உடன் உராய்வை ஏற்படுத்தி பைக்கின் வேகத்தை குறைக்கும் அல்லது நிறுத்தும்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

சில சூப்பர் பைக்களில் இரண்டு டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டிருக்கும். அதில் 4 பிரேக் பேடுகள் அமைக்கப்பட்டிருக்கும் இதன் மூலம் பிரேக்கின் பவர் அதிகமாகி விரைவாக வேகத்தை கட்டுப்படுத்தும் அல்லது பைக்கை நிறுத்தும்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

4 பேட் மூலம் பிரேக் பிடிக்கப்படும். போது டிஸ்க் உடன் பேடு உரசும் இடம் அதிகமாக இருக்கும் அதனால் டிஸ்க் சுழலுவது பிரேக் பிடிக்கப்படும் போது வேகமாக கட்டுப்படும். அதனால் தான் இரண்டு டிஸ்க் மற்றம் 4 பிரேக் பேடு ஆகிய வசதிகள் சில பைக்குகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதகங்கள்

1. விரைவாக நிறுத்தும் பவர் : டிஸ்க் பிரேக்கில் அதிக அளவு பேடுகளை பொருத்த முடியும் என்பால் டிரம் பிரேக்கை காட்டிலும் அதிக பிரேக் பவர் இருக்கும். இதனால் பைக்கை விரைவாக நிறுத்தி விடலாம்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

2. சூடு விரைவாக குறையும் : பிரேக் டிஸ்க்குகள் பிரேக் பிடிக்கும் போது அதிகமாக சூடாகும். மிக அதிகமாக சூடானால் பிரேக் பெயலியர் ஏற்படும். ஆனால் டிஸ்க் பிரேக்கில் கேலிபருக்கு உள்ளே இருக்கும் பகுதி தவிர மற்ற பாகங்கள் நேரடியாக காற்றில் படும் படி இருப்பதால் டிஸ்க்குகள் விரைவாக குளிர்ச்சியடையும்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

3.வீலுக்கு பாதகத்தை ஏற்படுத்தாது: டிரம் பிரேக்கில் பொருத்தப்பட்ட பிரேக்குகள் ஸ்பிரிங் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனால் அந்த ஸ்பிரிங் பைக் போடும் போது டிரம்மில் உரசி மொத்த வீலுக்குமே பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் டிஸ்க் பிரேக்கில் இந்த பிரச்னை இல்லை.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

4. சுலபமான பாரமரிப்பு: டிஸ்க் பிரேக்குகள் விலை விட்டு வெளியில் இருப்பதால் அதை எளிதாக கழட்டி பராமிரித்து விடலாம் ஆனால் டிரம் பிரேக் வீலிற்கு உள்ளே இருப்பதால் அதை பராமரிக்க மொத்த வீலையும் கழற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

5.குறைந்த விலை உதிரிபாகம்: டிஸ்க் பிரேக்கில் உள்ள பிரேக் பேடை மாற்றுவதற்கான செலவு டிரம் பிரேக்கை மாற்றும் செலவை காட்டிலும் குறைவு தான் மொத்த டிஸ்க் பிரேக்கை மாற்றினாலும் அதுவும் டிரம் பிரேக் வீலிற்கு ஆக்கும் தேய்மானத்தை கணக்கிடும் போது குறைவாகதான் வரும்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

6.புதிய தொழிற்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும்: டிஸ்க் பிரேக்கை பொருத்தவரை அது மெக்கானிக்கல் சப்போர்ட் தான். அதனால் புதிய தொழிற்நுட்பமான ஏ.பி.எஸ். போன்ற தொழிற்நுட்பத்தை டிஸ்க் பிரேக்கில் மட்டுமே பொருத்த முடியும். டிரம் பிரேக்குகள் முழுக்க முழுக்க மெக்கானிக்கலால் இயங்குவதால் அதில் புதிய தொழிற்நுட்பத்தை பொருத்த முடியாது.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

டிஸ்க் பிரேக்கில் உள்ள பாதகங்கள்

1. ஏ.பி.எஸ் பொருத்தப்படாத டிஸ்க் பிரேக்குகள் அவசர காலத்தில் பிரேக் பிடிக்கும் போது ஸ்கிட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

2. டிஸ்க் பிரேக்குகள் உள்ள பைக்குகள் வாங்கும் போது விற்பனை விலை அதிகமாக உள்ளது.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

3. டிஸ்க் பிரேக் உடன் இணைக்கப்பட்டுள்ள கனமான பைப்பில் உள்ள பிரேக் ஆயில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறும் பட்சத்தில் பிரேக் பெயிலியர் ஏற்படும்.

4. நீண்ட நாட்களாக பைக் ஓரே இடத்தில் நின்றால் பைக்கில் உள்ள பிரேக் ஆயில் அதன் பிசகு தன்மையை இழந்து விடும். அதை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.

டிஸ்க் பிரேக்கில் உள்ள சாதக பாதகமான விஷயங்கள் என்ன?

டிஸ்க் பிரேக்கில் உள்ள பாதகங்களை எளிதாக சமாளித்து விடலாம். ஆனால் அதில் பல நன்மைகள் இருப்பதால் நீங்கள் டிஸ்க் பிரேக் உள்ள வாகனத்தை பயன்படுத்துவதே சிறந்தது. ஏ.பி.எஸ். இருந்தாலும் இல்லாவிட்டாலும் டிஸ்க் பிரேக் தான் நல்ல ரிசல்டை தரும்.

Most Read Articles

English summary
Why Disc Brakes Are Better Than Drum Brakes?. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X