வாகனங்களின் முன்சக்கரத்தில் மட்டுமே டிஸ்க் பிரேக் பொருத்தப்படுவதற்கான சூட்சமம் இதுதான்..!!

வாகனங்களின் முன்சக்கரத்தில் மட்டுமே டிஸ்க் பிரேக் பொருத்தப்படுவதற்கான சூட்சமம் இதுதான்..!!

பெரும்பாலான இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்களில் டிஸ்க் பிரேக் அமைப்பு முன்பக்க சக்கரத்தில் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இதற்கான காரணங்கள் என்ன என்பதை இயற்பியல் தளத்தோடு தொடர்ப்புப்படுத்தி விரிவாக பார்க்கலாம்.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

இயற்பியல் துறையில் உலகளவில் மிகவும் புகழடைந்தவர் நியூட்டன். இவரது இயக்க விதி கோட்பாடுகளை அறிந்திராதவர் யாரும் இருக்க முடியாது. குறிப்பாக நியூட்டனின் மூன்றாம் விதி உலகளவில் பிரபலமானது.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

ஆனால் நியூட்டனின் இந்த இயக்க விதிகளில் முதல் இரண்டு விதிகளை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. அதில் முதலாவது தான் law of inertia (நிலைமை விதி).

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

"ஒரு பொருளின் மீது புறவிசை செயல்படாதவரை அந்த பொருள் ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது" என்று கூறுகிறது முதல் விதி.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

பைக் அல்லது கார் என்ற நகரும் தன்மை கொண்ட பொருளில், பிரேக் என்ற புறவிசை பயன்படுத்தப்படும். அப்போது வாகனத்தின் மொத்த எடையும் மாறிவிடும்.

இந்த அழுத்தம் வாகனத்தின் முன் மற்றும் பின்புற ஏக்சைல்களில் சமமாக விநியோகிக்கப்படும். எனினும் முன்சக்கரத்திற்கு அழுத்தம் கூடுதலாகவே செல்கிறது.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

வாகனத்தில் எடையில் இப்படியொரு மாற்றம் நிகழும் போது, கார் அல்லது பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷனில் அழுத்தம் அதிகரிக்கிறது. இது இறுதியில் வாகனத்தின் முன்பக்க பிடிமானத்தை அதிகரித்தும், பின்பக்க பிடிமானத்தை குறைத்தும் வழங்குகிறது.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

இந்த செயல்பாடு உலகளவில் உள்ள தினசரி பயன்பாட்டில் உள்ள வாகனங்கள், வணிகரீதியான வாகனங்கள், மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகனங்கள் என அனைத்திற்கும் பொறுந்தும்.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

இதன்காரணமாகவே வாகன தயாரிப்பாளர்கள், வாகனங்களின் உருவாக்க பணிகளில் பின்பக்க சக்கரத்தை விட முன்பக்க சக்கரத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதிக வலிமைப்பெற்ற பிரேக்குகளை அமைக்கிறார்கள்.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

டிரம் பிரேக் அமைப்பை விட டிஸ்க் பிரேக் செட்-அப் மிகவும் வலிமையானது மற்றும் திறன் பெற்றது. காரணம், டிஸ்க் பிரேக் என்பது ஹைட்ராலிக் அழுத்தத்தை சார்ந்தது. டிரம் பிரேக் என்பது வாகனத்தின் இயந்திர வலிமையை முழுக்க சார்ந்தது.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

இதுதவிர, டிஸ்க் பிரேக் வேகமாக குளிர்வடையும் திறன் பெற்றவை மற்றும் விரைவாக வெப்பத்தை நீக்கிவிடும். இந்த சிறப்பியல்புகளால் அவை நீண்டகாலத்திற்கு அதன் செயல்திறனை தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

டிரம் பிரேக்குகளை விட டிஸ்க் பிரேக்குகளுக்கு இந்த இயல்பு இருப்பதால், அதனுடைய செயல்பாடு மற்றும் தோற்றப்பொலிவு அவ்வளவு எளிதில் குறையாது.

வாகனங்களில் இரண்டு பக்கங்களிலும் பிரேக் இருந்தாலும், பின்பக்க சக்கரத்தை விட முன்பகுதியில் உள்ள சக்கரத்திற்கு தான் அதிக வலிமை பெற்ற பிரேக் கட்டமைப்பு தேவைப்படுகிறது.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

இதனால் தான் இயற்பியலை அதிகமாக விரும்பி படிப்பவர்கள் பள்ளிக்காலங்கள் 'பெரிய படிப்ஸ் நீ' என்று சுட்டிக்காட்டப்படுகிறார்கள். காரணம் நமது அன்றாட வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளிலும் இயற்பியல் இணைந்துள்ளது.

வாகனங்களில் இடம்பெறும் டிஸ்க் பிரேக் பற்றிய சுவாரஸ்யங்கள்..!

தவிர, பைக் வாங்க விரும்புபவர்கள் முன்பக்க பிரேக் குறித்த தகவல்களை விசாரிப்பது மிக மிக அவசியம். செயல்திறனுக்கு பிறகு எல்லா வாடிக்கையாளர்களும் கவனம் செலுத்த வேண்டியது பாதுகாப்பு கட்டமைப்பில் தான். அதற்கே இந்த செய்தி...

Most Read Articles
English summary
Read in Tamil: Most Vehicles Have Disc Brakes Only At The Front Physics Explained. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X