குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது என்பதற்கான காரணங்கள்!

எரிபொருள் டேங்க்கில் குறைவான எரிபொருளுடன் பலர் காரை இயக்குவதை அன்றாடம் காண முடிகிறது. இதுபோன்று குறைவான எரிபொருளுடன் காரை இயக்குவது மிக மோசமான விஷயம் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

குறைவான எரிபொருளுடன் இயக்கும்போது, எஞ்சினுக்கு எரிபொருளை செலுத்தும் ஃப்யூவல் பம்ப் அமைப்பில் பாதிப்புகளை ஏற்படும். பெட்ரோல், டீசலில் உள்ள உயவுத்தன்மையே, ஃப்யூவல் பம்ப்பிற்கான உயவுப் பொருளாகவும், குளிர்விப்பு பொருளாகவும் இருக்கிறது.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

குறைவான அளவு இருக்கும்போது போதிய எரிபொருள் பம்ப் அமைப்பில் காற்று உறிஞ்சப்பட்டு அதிக வெப்பம் ஏற்படும். இதனால், எரிபொருள் பம்ப் சீக்கிரமாகவே பாதிப்படையும். ஃப்யூவல் பம்ப் மிகவும் துல்லியமான அமைப்பு என்பதால், இதில் பாதிப்புகள் ஏற்படும்போது, அதிக செலவு வைத்துவிடும்.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

அடுத்து, எரிபொருள் டேங்கின் கீழ் பாகத்தில் தங்கியிருக்கும் கசடுகள் உறிஞ்சப்படும்போது, அது வடிகட்டி அமைப்பிலும் பிரச்னை ஏற்படுத்தும். வடிகட்டி அமைப்பில் எரிபொருள் சீராக இல்லாமல் கசடுகள் தங்கி தடை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி ஃபில்டரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். இதுவும் பாக்கெட்டை பதம் பார்க்கும் விஷயமாக மாறும்.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

வடிகட்டி அமைப்பில் எரிபொருள் தடைபட்டு சீராக செல்ல இயலாமல் போகும்போது, அது கார் எஞ்சினுக்கும் பிரச்னை தரும். இதனால், கார் எஞ்சினின் ஆயுட்காலம் சீக்கிரமாகவே குறையும் என்பதுடன், அடிக்கடி பராமரிப்பு தேவை என்பதால், செலவீனமும் கூடுதலாகும்.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

தற்போது வரும் கார்களில் சென்சார்கள் மூலமாக கசடுகள் தடுக்கப்படும் நுட்பமும், இரண்டு ஃபில்டர்கள் மூலமாகவும் வடிகட்டும் அமைப்பும், எரிபொருள் செலுத்தும் அமைப்பும் சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டவை. இருந்தாலும்,பிரச்னையை தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்த வழி.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

இவை எல்லாவற்றையும்விட, ஒரு நம்பிக்கையில் குறைவான எரிபொருளுடன் செல்லும்போது காரில் எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்து நின்று போனால், மீண்டும் எரிபொருள் நிரப்பி சரிசெய்வதர்கான ரிப்பேர் செலவும் அதிகமாகும். குறிப்பாக, டீசல் கார்களின் எஞ்சினில் காற்று சென்றுவிட்டால், அதனை சரிசெய்வதற்கு அதிக செலவாகும்.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

அது நிச்சயம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் நின்றுபோனால் அல்லாட வைத்துவிடும். அதேபோன்று, ஆள் அரவமற்ற இடங்களில் நின்றுபோனாலும் கஷ்டம் என்பதும் நடைமுறை சிக்கல்.

சில வழிமுறைகள்...

சில வழிமுறைகள்...

இதுபோன்ற தடங்கல்களையும், செலவீனத்தையும் தவிர்த்துக் கொள்வதற்கு சில எளிய உபாயங்களை கடைபிடித்தால் போதுமானது. கால் டேங்க் இருக்கும்போதே எரிபொருளை நிரப்பி விடுங்கள்.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லும் போன்ற கணக்கீடு தகவல்களை முழுவதுமாக நம்ப வேண்டாம். உங்களது கார் ஓட்டும்முறைக்கு தக்கவாறு, காரின் எரிபொருள் செலவு அமையும். நீங்கள் எதிர்பார்த்ததைவிட அது விரைவாக குறையும்.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

எரிபொருள் டேங்க்கில் கால் பங்கு பெட்ரோல் அல்லது டீசல் இருக்கும்போதே, மீண்டும் எரிபொருள் நிரப்பி வைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதுதான் மிகவும் சிம்பிளான வழி. ஒரு வாரத்திற்கு இவ்வளவுதான் தேவைப்படும் என்ற நீங்களாக ஒரு கணக்குப்போட்டு, பார்க்க வேண்டாம்.

குறைவான எரிபொருளுடன் காரை ஓட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

எரிபொருள் இல்லாதது குறித்து எச்சரிக்கை விளக்கு ஒளிர துவங்கிய உடன் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்பி விடுங்கள். வெளியூர் செல்லும்போது இவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால், மொபைல்போன் அப்ளிகேஷன் அல்லது கூகுள் மேப் மூலமாக அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களை கண்டறிந்து எரிபொருள் நிரப்புங்கள்.

Most Read Articles

English summary
Why you shouldn’t drive around with your Car With low fuel.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X