வெளிநாடுகளில் கார் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

Written By:

அயல் நாட்டில் போய் சொந்தமாக கார் ஓட்டிச் செல்வது பலருக்கும் விருப்பமான விஷயமாக இருக்கிறது. ஆனால், அந்நாட்டு விதிமுறை மற்றும் இடதுபக்க டிரைவிங் செய்யும்போது ஏற்படும் பிரச்னைகள் என பல நடைமுறை சவால்கள் இருக்கின்றன.

இருப்பினும், அங்கு போயும் கார் ஓட்டுவது என்பது த்ரில்லானதும், சந்தோஷம், திருப்தியை தரும் விஷயமாகவே அமையும். இந்த நிலையில், இங்கு சில வெளிநாடுகளில் இருக்கும் சில சுவாரஸ்ய விதிமுறைகள் மற்றும் இதர விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

 01. சவூதி அரேபியா

01. சவூதி அரேபியா

உலகிலேயே பெண்கள் கார் ஓட்ட தடை விதித்திருக்கும் நாடு சவூதி அரேபியா. தற்போது இங்கு தமிழர்கள் அதிகம் வசிக்கும் நிலையில், இங்கு கடைப்பிடிக்கப்படும் விதிகளை கவனமாக தெரிந்துகொண்டு பின்னர் கார் ஓட்டுவது அவசியம். மேலும், நம் நாட்டு டிரைவிங் லைசென்ஸுடன் அங்கு கார் ஓட்டுவதற்கு பல கட்டுப்பாடுகளும் உண்டு.

02. தென் ஆப்ரிக்கா

02. தென் ஆப்ரிக்கா

நகரங்களுக்கு இடையிலான தூரம் அதிகமாக காணப்படுவதுடன், வழியில் எரிபொருள் நிலையங்களும் குறைவாக இருக்கும். எனவே, காரை எடுப்பதற்கு முன் போதுமான எரிபொருள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டே ஏற வேண்டும். வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும், வனப்பகுதி வழியாக செல்லும்போது விலங்குகளுக்கு உணவளிப்பதையும் தவிர்த்தல் அவசியம். ஏனெனில், வன விலங்குகளுக்கு உணவளித்தால், அதிகப்படியான அபாரதம் விதிக்கப்படுகிறது என்பதை மனதில் கொள்க.

03. நியூஸிலாந்து

03. நியூஸிலாந்து

மக்கள் தொகைக்கும், கார்களின் எண்ணிக்கைக்கும் இடையில் உலகிலேயே அதிக விகிதாச்சாரம் கொண்ட நாடு நியூஸிலாந்து. அந்நாட்டில் 4 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில், 2.5 மில்லியன் கார்கள் இருக்கின்றன. மேலும், நியூசிலாந்து நாட்டில் சாலையின் எதிர்புறத்தில் கார்களை பார்க்கிங் செய்வது குற்றம். அப்படி பார்க்கிங் செய்தால், காரை போலீசார் இழுத்துச் சென்றுவிடுவர். மேலும், நம் நாட்டு டிரைவிங் லைசென்ஸை இங்கு 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

04. ஆஸ்திரேலியா

04. ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் நகர்ப்புறங்களை தாண்டி விட்டால் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும். எனவே, ஃபுல் டேங்க் அடித்து புறப்படுவதுடன், உணவு, போதுமான அளவு தண்ணீர் பாட்டில்களையும் கையில் எடுத்துச் செல்வது அவசியம். இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் இருந்தால் மட்டுமே இங்கு இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார் ஓட்ட முடியும்.

05. சீனா

05. சீனா

பகலில் ஹெட்லைட்டை ஒளிர விட்டால் சீனாவில் கணிசமான அபராதம் விதிக்கப்படும். மேலும், சீனாவில் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார் ஓட்ட முடியாது. அப்படி ஓட்ட ஆசைப்பட்டால், அங்கு புதிதாக உரிமம் எடுக்க விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், நம்மூர் மாதிரி வீட்டிலிருந்தபடி, காசை அடித்து லைசென்ஸ் பெற முடியாது. அங்கு டிரைவிங் லைசென்ஸ் பெறுவது குதிரை கொம்பான விஷயம். உதாரணத்திற்கு ஸென்ஸன் நகரில் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கான தேர்வில் வெறும் 4 சதவீதத்தினர் மட்டுமே வெற்றி பெறுகிறார்களாம்.

06. ஹாங்காங்

06. ஹாங்காங்

ஹாங்காங் நகரில் கார்கள் 6 ஆண்டுகள் பழமையாகிவிட்டால், ஆண்டுதோறும் சாலையில் ஓட்டுவதற்கான தகுதி இருக்கிறதா என்பதற்கான சோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும், இங்கு 12 மாதங்களுக்கு மட்டுமே இந்திய டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியாகும்.

07. ஜப்பான்

07. ஜப்பான்

ஜப்பானில் கார் வாங்க வேண்டுமெனில், காரை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடத்திற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். அதேபோன்று, காரை விற்கும்போதும், வாங்குபவரிடம் பார்க்கிங் ஸ்பேஸ் சான்று இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய முடியும். இந்நாட்டில் 12 மாதங்களுக்கு மட்டுமே இந்திய டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியாகும்.

08. ரஷ்யா

08. ரஷ்யா

ரஷ்யாவில் தூசி, தும்பட்டிகள் படிந்த காரை ஓட்டுவது குற்றம். அதேபோன்று, வழியில் லிஃப்ட் கேட்பவர்களை ஏற்றிச் செல்வதும் தவறு. இதற்கு கணிசமான அபாரதமும் அந்நாட்டில் விதிக்கப்படுகிறது. இந்நாட்டில் எந்தவொரு சோதனைகளும் இல்லாமல் 6 மாதங்கள் வரை இந்திய டிரைவிங் லைசென்ஸை பயன்படுத்தி கார் ஓட்ட முடியும்.

09. பின்லாந்து

09. பின்லாந்து

சீனாவில் பகலில் ஹெட்லைட் போட்டால் அபராதம். ஆனால், பின்லாந்து நாட்டில் காரில் எப்போதுமே முகப்பு விளக்குகள் எரிவது கட்டாயம். இந்நாட்டில் வாகனங்களில் மான்கள் அடிபட்டு உயிரிழப்பதை தடுப்பதற்காக, அதன் கொம்புகளில் ஒளிரும் தன்மையுடைய விசேஷ ரசாயனம் பூசப்படுகிறது. அந்நாட்டில் நடக்கும் டிரைவிங் டெஸ்ட்டில் பாஸ் செய்துவிட்டால், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து ஓர் ஆண்டு கார் ஓட்ட முடியும்.

10. ஸ்வீடன்

10. ஸ்வீடன்

ஸ்வீடன் நாட்டிலும் பகலில் கூட முகப்பு விளக்குகள் ஒளிரவிட வேண்டும். ஆனால், குறைந்த தூரத்திற்கு வெளிச்சத்தை தரும் டிப் ஆப்ஷனில் வைத்து ஓட்ட வேண்டும். இந்நாட்டில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், 1967ம் ஆண்டு வரை இங்கு இடதுபக்க டிரைவிங் கொண்ட வாகனங்கள் இருந்தன. அதன்பிறகு, வலது பக்க டிரைவிங் கொண்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஸ்வீடனில் இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் சர்வதேச ஓட்டுனர் பர்மிட்டும் இருத்தல் அவசியம்.

 11. ஜெர்மனி

11. ஜெர்மனி

ஜெர்மனியில் உள்ள ஆட்டோபான் விரைவு சாலையில் ஓட்டுவதை கனவாக கொண்ட பலர் இந்நாட்டுக்கு செல்கின்றனர். இந்த நிலையில், ஆட்டோபானில் எரிபொருள் இல்லாமல் கார் நின்றுவிட்டால், கார் ஓட்டுனர் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். ஆட்டோபான் சாலை கட்டமைப்பில் இருக்கும் பாதி விரைவு சாலைகளில் வேக வரம்பு இல்லை. அதேநேரத்தில், மணிக்கு 130 கிமீ வேகத்துக்கு மிகாமல் ஓட்டுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். டிரைவிங் டெஸ்ட்டில் பாஸ் செய்துவிட்டால், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து 6 மாதங்களுக்கு அங்கு கார் ஓட்ட முடியும்.

12. பெல்ஜியம்

12. பெல்ஜியம்

பெல்ஜியம் நாட்டில் ஒவ்வொரு காரிலும் வெய்ஸ்ட்கோட் எனப்படும் மேல் அங்கியை வைத்திருக்க வேண்டும். நம்மூரில் போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் அதே மேல் சட்டைதான் அது. பழுது உள்ளிட்ட காரணங்களால் ஒருவேளை கார் நடுரோட்டில் நின்றுவிட்டால், இந்த மேல் அங்கியை அணிந்துகொண்டுதான் வெளியே வர வேண்டும். தூரத்திலிருந்து வாகனங்களுக்கு ஆள் நிற்பதை எளிதாக கண்டுகொள்ளத்தான் இந்த விதி. மீறினால் கணிசமான அபாரதத்தை தண்டம் அழ வேண்டியிருக்கும். மேலும், பெல்ஜியம் நாட்டின் நெடுஞ்சாலைகள் இரவு நேரத்தில் மின்னொளியில் மிதக்கின்றன. இதனால், விளக்கொளியில் மின்னும் பெல்ஜியம் நெடுஞ்சாலைகளை நிலவிலிருந்தும் காண முடிகிறதாம். இங்கு டிரைவிங் டெஸ்ட்டில் பாஸ் செய்தால், 6 மாதங்களுக்கு இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து பயன்படுத்த முடியும்.

13. பிரான்ஸ்

13. பிரான்ஸ்

2012ம் ஆண்டிலிருந்து பிரான்ஸ் நாட்டில் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் ஒவ்வொருவரும் கையோடு ப்ரீத் அனலைசர் எனப்படும் மது குடித்திருக்கும் அளவை காட்டும் கருவியை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டது. எடுத்துச் செல்லவில்லையெனில், ஸ்பாட் ஃபைன் கட்ட வேண்டும். மற்றொரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா? பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒரேயொரு நில் என்ற எச்சரிக்கை பலகை மட்டுமே உள்ளதாம். அங்கு நடத்தப்படும் டிரைவிங் டெஸ்ட்டில் பாஸ் செய்துவிட்டால், ஓர் ஆண்டுக்கு இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார் ஓட்ட முடியும்.

14. சுவிட்சர்லாந்து

14. சுவிட்சர்லாந்து

ஹனிமூன் என்றில்லை, இப்போது வெளிநாட்டு டூர் திட்டங்கள் வைத்திருக்கும் அனைவரின் வாழ்நாள் கனவு சுவிட்சர்லாந்து டிரிப். அங்கு கார் ஓட்டுவதற்கு இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் மற்றும் இந்திய டிரைவிங் லைசென்ஸ் இருத்தல் அவசியம். இங்கு சுவாரஸ்யம் என்னெவனில், ஞாயிற்றுக்கிழமையில் ஓய்வாக காரை கழுவிக்கொள்ளலாம் என்றால் அது முடியாது. ஆம். சுவிட்சர்லாந்தில் சப்த மாசுபாட்டை குறைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் கார் கழுவுவதற்கு தடை உள்ளது.

15. இத்தாலி

15. இத்தாலி

இத்தாலியிலும் ஒளிரும் தன்மை கொண்ட மேல் அங்கிகளை கையில் வைத்திருப்பது அவசியம். மேலும், விதிகளை மீறுவோரை பிடிப்பதற்காக லம்போர்கினி சூப்பர் காரையும் அந்நாட்டு போலீசார் பயன்டுத்துகின்றனர் என்பதையும் கவனத்தில்கொள்வது நல்லது. இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் இருந்தால், இங்கு இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார் ஓட்டலாம்.

16. ஸ்பெயின்

16. ஸ்பெயின்

மூக்கு கண்ணாடி அணிபவர்கள் கட்டாயம் கூடுதலாக ஒரு மூக்குக் கண்ணாடியையும் காரில் வைத்திருப்பது அவசியம். விபத்து அல்லது மூக்குக் கண்ணாடியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், மற்றொன்றை பயன்படுத்துவதற்காகத்தான் இந்த விதி. இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட்டுடன் இங்கு கார் ஓட்டலாம்.

17. இங்கிலாந்து

17. இங்கிலாந்து

இரவு 11.30 மணி முதல் காலை 7 மணி வரை இங்கிலாந்து நாட்டில் ஹாரன் பயன்படுத்தக்கூடாது. மீறினால் கணிசமான தண்டம் அழ வேண்டியிருக்கும். இங்கிலாந்து நாட்டில் ஒருவருக்கு 2 வாகனங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு வைக்கப்படும் டிரைவிங் டெஸ்ட்டில் பாஸ் செய்துவிட்டால், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து ஓர் ஆண்டுக்கு வண்டி ஓடடலாம்.

18. கனடா

18. கனடா

கனடா நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது வலது பக்கம் வாகனத்தை திருப்புவதற்கு அனுமதியுண்டு. அதாவது, நம்மூர் ஃப்ரீ லெப்ட் போன்று. ஆனால், க்யூபெக் நகரில் இது விதிமீறலான செயல். இங்கு நடத்தப்படும் டிரைவிங் டெஸ்ட்டில் பாஸ் செய்துவிட்டால், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார் ஓட்டுவதற்கு 6 மாதங்கள் வரை அனுமதிக்கப்படுகிறது.

19. அமெரிக்கா

19. அமெரிக்கா

சகோதரன், சகோதரி, நண்பர்கள், உறவினர்கள் வழியாக அமெரிக்கா சுற்றி வரச் செல்பவர்கள் சில விஷயங்களை மனதில் வைக்க வேண்டும். இங்கும் சிவப்பு விளக்கு எரியும்போது சாலையின் வலது பக்கம் திரும்புவதற்கு அனுமதியுண்டு. ஆனால், வலது பக்கம் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை எச்சரிக்கை பலகையை பார்த்த பிறகே திருப்ப வேண்டும். இங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது.

 20. மெக்ஸிகோ

20. மெக்ஸிகோ

எதிரே வரும் வாகனம் ஹெட்லைட் மூலமாக எச்சரிக்கை கொடுத்தால், உங்கள் வாகனம் செல்லும் சாலையின் முன்னே அபாயம் இருப்பதாக அர்த்தம். எனவே, வேகத்தை குறைத்து கவனமாக செல்ல வேண்டும். மெக்ஸிகோவிலும் டிரைவிங் டெஸ்ட்டை பாஸ் செய்துவிட்டால், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார் ஓட்ட முடியும்.

 21. பிரேசில்

21. பிரேசில்

பிரேசில் நாட்டில் திரும்புவதற்கு மட்டும் இன்டிகேட்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை. பாதுகாப்பாக கடக்க முடியாது என்பதை பின்னால் வரும் வாகனங்களுக்கு தெரிவிப்பதற்கும் இன்டிகேட்டர் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சாலையில் தாறுமாறாக ஓட்டினாலும், முழங்கையை ஜன்னலில் வைத்துக் கொண்டு ஓட்டினாலும் அபராதம் விதிக்கப்படும். அங்கு நடத்தப்படும் டிரைவிங் டெஸ்ட்டில் பாஸ் செய்துவிட்டால், இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து கார் ஓட்ட முடியும்.

ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சில சுவாரஸ்யமான சாலை விதிகள்!

ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சில சுவாரஸ்யமான சாலை விதிகள்!

 
English summary
You Need To Know Some Rules When You're Driving in Abroad.
Story first published: Thursday, July 21, 2016, 13:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark