10 கார் கிளீனிங் ரகசியங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

வீட்டில் முயற்சிக்க வேண்டிய 10 கார் கிளீனிங் ரகசியங்கள் என்ன என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

எப்படிபட்ட நடைமுறைகள் பின்பற்றி நமது கார்களை சுத்தமாக வைத்து கொள்ளலாம் என தெரிந்து கொள்வோம்.

காரையோ அல்லது எந்த ஒரு அட்டோமொபைல்களையும் சொந்தமாக்கி கொள்வதிலேயே மிக முக்கியமான பொறுப்பு, அவற்றை சுத்தமாக வைத்து கொள்வதில் தான் உள்ளது.

வீட்டில் முயற்சி செய்யகூடிய 10 கார் கிளீனிங் ரகசியங்கள் பற்றிய விரிவான தகவலகள் இதோ உங்கள் பார்வைக்கு வழங்கப்படுகிறது.

1) தண்ணீர் மற்றும் சுத்தம் செய்யும் பொருட்கள்;

1) தண்ணீர் மற்றும் சுத்தம் செய்யும் பொருட்கள்;

கார்களை சுத்தம் செய்வதற்கு, தண்ணீர் மிக முக்கியமான விஷயமாக உள்ளது. வழக்கமாக 1 அல்லது 2 பக்கெட் தண்ணீர் போதும் என்று நினைத்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது. ஆனால், அது போதுமானதாக இருக்காது.

சுத்தம் செய்யும் நேரத்தில், உபயோகித்த தண்ணீரிலேயே ஸ்பாஞ்ஜை, முக்கி முக்கி காரை சுத்தம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. அப்படி செய்வதனால், உபயோகிக்கபட்ட நீரில் இருக்கும் அழுக்குகள் ஸ்பாஞ்ஜில் ஒட்டி கொள்கிறது. அந்த அழுக்கு நிரம்பிய ஸ்பாஞ்ஜுடன் காரை சுத்தம் செய்ய முயற்சிக்கும் நேரத்தில் காரின் மீது கீறல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இதனால், காரை சுத்தம் செய்யும் மோது, சற்று கூடுதல் அளவிலான தண்ணிரை உபயோகிக்க தயங்காமல் இருந்தால் மிகுந்த நன்மை பயக்கும்.

2) சுத்தபடுத்த உபயோக்கிக்கும் பொருட்கள்;

2) சுத்தபடுத்த உபயோக்கிக்கும் பொருட்கள்;

நமது காரை சுத்தம் செய்ய, நாம் உபயோகிக்கும் சோப்கள், லிக்விட், ஸ்பெஷல் ஷாம்பூ போன்ற பொருட்கள், நமது காருக்கு பாதுகாப்பானவையா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சுத்தம் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பற்றி முழு விவரம் தெரியாமல் உபயோகிப்பதனால், காரின் பெயிண்ட் பாதிக்கப்பட கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதற்கு சிறந்த யோசனை, நமது ஆட்டோமொபைல் டீலரிடம், நமது காருக்கு ஏற்ற சுத்தபடுத்தும் பொருட்கள் எது என்பது உறுதி செய்து கொள்வது நல்லது. ஆட்டோமொபைல் டீலர்கள் வழங்கும் ஆலோசனைகளுக்கு ஏற்றவாறு, தகுந்த சுத்தம் செய்யும் பொருட்களை உபயோகிப்பது அனைத்து விதத்திலும் நன்மையானது.

3) ரிம்கள் மற்றும் சக்கரங்கள்;

3) ரிம்கள் மற்றும் சக்கரங்கள்;

கார் சக்கரங்களின் ரிம்களில் கிரீஸ் படிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதுவும் நீண்ட தூரம் மேற்கொண்ட பயணத்தின் பிறகு, பிரேக் பேட்களின் உபயோகத்தினால் ஏற்படும் படிமங்கள் ரிம்களின் மீது படிந்துவிடும்.

இதனை சுத்தம் செய்ய மிக சிறந்த வழி, டிஷ் வாஷ் சோப்பை உபயோகிப்பது தான். ஏனெனில், வழக்கமான கார் சுத்தம் செய்யும் பொருட்கள்,காரின் பெயிண்ட் மீது படிந்துள்ள மென்மையான அழுக்கை சுத்தம் செய்வதற்கு தான் பயன்படுகிறது.

வழக்கமான கார் சுத்தம் செய்யும் பொருட்களை காட்டிலும், டிஷ் வாஷ் சோப்புகளினால் ரிம்களில் படிந்துள்ள கிரீஸ் உள்ளிட்ட பொருட்கள் எளிதாக சுத்தம் செய்யபடுகிறது. டிஷ் வாஷ் சோப்புகளால் ரிம்கள் பாதிக்கபடுவதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

4) வண்டுகள்;

4) வண்டுகள்;

நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது, கார்களின் விண்ட்ஷீல்ட்களில் ஏராளமான அளவில், வண்டுகள் (இறந்த நிலையில்) படிந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

இதற்கு சிறந்த யோசனை, கண்ணாடியின் மீது கொஞ்சமாக கோலாவை பயன்படுத்தலாம். கண்ணாடி மீது கோலாவை பயன்படுத்தி, சிறிது நேரம் விட்டுவிட்டு, பின்னர் அதனை சுத்தம் செய்து விட வேண்டும்.

இப்படி செய்யும் போது, கோலா பெயிண்ட் வேலைப்பாடுகளின் மீது பட்டுவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஏனேன்றால், கோலா பெயிண்ட் மீது பட்டால், அது காரின் பெயிண்ட்டை பாழாக்கும் வாய்ய்புகள் உள்ளன.

5) தார் அடையாளங்கள்;

5) தார் அடையாளங்கள்;

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நடைபெற்று கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. இதனால், கார்கள் மீதும் தார் அடையாளங்கள் படிந்து விட வாய்ப்புகள் உள்ளது.

தார் படிமங்களை அகற்ற சிறந்த வழி, மேயனைஸ்-ஸை பயன்படுத்துவது தான். கார் மீது படிந்துள்ள தார் மீது மேயனைஸ்-ஸை வைத்து துடைத்துவிட்டு, சுமார் 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.

பின்னர் சுத்தமான துணியை கொண்டு, தார் பட்ட இடத்தை தேய்த்தால், தார் முழுவதுமாக நீங்கி அந்த இடம் சுத்தமாக மாறிவிடும். அதே நேரத்தில் பெயிண்ட்டும் பாதிப்படையாமல் இருக்கும்.

6) பறவைகளின் எச்சங்கள் (கழிவு);

6) பறவைகளின் எச்சங்கள் (கழிவு);

நமது கார்களின் மீது பறவைகளின் எச்சங்கள் (கழிவுகள்) இருப்பது மிக சர்வசாதாரணமான விஷயமாக உள்ளது.

பறவைகளின் எச்சங்களை சுத்தம் செய்ய, அவற்றின் மீது மட்டும் (விண்ட்ஷீல்ட்டின் மீது மட்டும்), கொஞ்சம் சோடாவை பயன்படுத்தவும்.

சில நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர், துடைத்துவிட்டால், கறைகள் துளி கூட இல்லாமல், முழுமையாக சுத்தமாகிவிடும்.

7) குரோம் பகுதிகள்;

7) குரோம் பகுதிகள்;

கார்களில் உள்ள குரோம் உபயோகிக்கபட்ட பகுதிகளில் கூட அழுக்குகள் படிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. அவற்றை சுத்தம் செய்ய, குரோம் பகுதிகள் மீது, சாம்பலை உபயோகபடுத்தலாம்.

குரோம் பகுதிகள் மீது சற்று சாம்பலை கொண்டு தேய்த்து துடைக்க வேண்டும். அல்லது, அதற்கு மாற்றாக பாலிஷை பயன்படுத்தலாம். இப்படி செய்வதினால், குரோம் பகுதிகள் பளபள என்று மாறிவிடும்.

மேற்குறிப்பிட்ட யோசனை, குரோம் பகுதிகளை சுத்தம் செய்வதற்கு மட்டும் தான் என்பது மிக முக்கியமான விஷயம். பெயிண்ட்டின் மீது, இப்படி செய்தால், பெயிண்ட் பாழாக கூடிய வாய்ப்புகள் உள்ளது.

8) மேட்களை சுத்தம் செய்தல்;

8) மேட்களை சுத்தம் செய்தல்;

நமது கார்களின் மேட்களை சுத்தம் செய்வது, மிக கடினமான விஷயம் என நினைத்திருக்கலாம். ஆனால், மேட்களை சுத்தம் செய்வது தான் மிக எளிதான விஷயமாகும்.

முதலில், மேட்களை வெளியில் எடுக்கவும். 1 அல்லது 2 முறை மேட்ட்டின் தூசிகளை நன்றாக தட்டி விடவும். அதன் பின்னர் பிரஷ் மற்றும் சோப்பை கொண்டு ஸ்க்ரப்பிங் (தேய்த்தல்) செய்யவும்.

இப்படி செய்வதன் மூலம், கார்களின் கார்பெட்கள், புதிது போல் மாறிவிடும்.

9) துர்நாற்றம் நீக்குதல் (டியோடரைஸ் செய்தல்) ;

9) துர்நாற்றம் நீக்குதல் (டியோடரைஸ் செய்தல்) ;

வெளியூர் பயணங்களுக்கு பிறகு நமது கார்களில் இருந்து துர்நாற்றம் வீசுவது வழக்கமான விஷயமாக இருக்கலாம். புகைபிடித்தல், காரிலேயே உணவுகள் சாப்பிடுவது, ஈரம் உள்ளிட்டவற்றால் துர்நாற்றம் வீசலாம்.

கரி (மரக்கரி / கரித்துண்டு) துர்நாற்றம் நீக்குவது தான், மிகச்சிறந்த வழியாகும். கொஞ்சம் கரியை ஒரு திறந்த பையில் போட்டு காரின் உள்ளே சில நாட்களுக்கு வைக்கவும். இது காரின் உள்ளே உள்ள அனைத்து துர்நாற்றங்களையும் நீக்கிவிடும்.

இதையடுத்து, உங்கள் கார் முன்பு போல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

10) கீச்சிடும் கதவுகள்;

10) கீச்சிடும் கதவுகள்;

கார்களின் கடுமையான உபயோகம் மற்றும் அதனை சுத்தம் செய்யும் நடைமுறைகள் மூலம், கார் கதவுகளில் இருந்து உராய்வுகளின் சத்தங்கள் வர வாய்ப்புகள் உள்ளது.

சுத்தம் செய்யும் போது, கார்களில் இருக்கும் லுப்ரிகேஷனும் (உராய்வுநீக்கி) சேர்ந்து மறைந்துவிடும்.

இதை போக்க சிறந்த வழி, ஆலிவ் எண்ணெய் உபயோகிப்பது மட்டுமே. சிறிய துணி அல்லது பஞ்சு எடுத்து ஆலிவ் எண்ணெயில் முக்கி கொண்டு, அதை கீல்களில் (ஹிஞ்ஜ்) இடவும். இப்படி செய்வதன் மூலம் அந்த கீச்சிடும் கதவு சத்தங்கள் முழுமையாக அடங்கிவிடும்.

இது போன்ற சில எளிமையான மற்றும் சுலபமான கார் சுத்தம் செய்யும் முறைகளை பின்பற்றலாம். இது போன்ற நடைமுறைகளை நாமே நமது காரை வீட்டிலேயே சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஒரு முறையாவது நமது காரை, நாமே சுத்தம் செய்து கிடைக்கும் மன நிறைவான அனுபவத்தை பெற முயற்சிக்கலாம்.

Most Read Articles
English summary
10 Car Cleaning Secrets To Try At Home are presented to you from the Experts. The biggest responsibility of owning a car, or any automobile for that matter is keeping it clean. Any enthusiast will say that, washing the car by yourself is the best possible moment. So, here are 10 car cleaning secrets that can be done by yourself at home!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X