கார் பிராண்டுகளும், ஆபரணமாகிய அதன் அடையாள சின்னங்களும்... ஓர் ப்ளாஷ் பேக்

கார்களின் பானட்டின் முன்புறத்தில் நடுநாயமாக வித்தியாசமான சிலை போன்ற உருவங்களை தங்களது அடையாளச் சின்னமாக கார் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தங்களது பிராண்டை பிரபலப்படுத்தவும், கார்களுக்கு தனி அடையாளம் கொடுக்கும் விதத்தில் இந்த பிராண்டு சின்னங்களை கார் நிறுவனங்கள் மிகுந்த சிரத்தையுடன் வடிவமைத்து கார்களில் பொருத்தி அழகு பார்த்தன.

பல ஆண்டுகள் பின்னோக்கி சென்று பார்த்தால், 1969ம் பென்ஸ் 190இ கார் அந்த வீட்டில் நுழைந்தவுடன் அந்த குடும்பத்தினர் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றனர். காரின் தோற்றம், அதிலிருந்த வசதிகள் மட்டுமின்றி, அந்த காரின் பானட்டின் முன்புறத்தில் கொடுக்கப்பட்டிருந்த பென்ஸ் நிறுவனத்தின் அடையாளமான அந்த நட்சத்திர சின்னம் கொண்ட வளையமும் குடும்பத்தினரை வெகுவாக கவர்ந்தது.

இவர்கள் மட்டுமில்லை, பல குடும்பத்தினர் பானட்டின் முன்னால் பொருத்தப்பட்டிருக்கும் ஆபரணத்தை தங்களது அதிர்ஷ்ட சிலையாக கருதியதுண்டு. காரின் ஆபரணமாக மாறிய அந்த அடையாளச் சின்னம் தோன்றிய கதையும் சுவாரஸ்யமானதுதான்.


ப்ளாஷ் பேக்

ப்ளாஷ் பேக்

ஆரம்ப கால வாகனங்களில் ரேடியேட்டர் மூடி மீது பொருத்தப்பட்ட வெப்பமானிகள் பறவையின் இறக்குகள், விலங்குகள் போன்ற உருவங்களுடன் டிசைன் செய்து பொருத்தப்பட்டன. பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆபரணம் வழக்கொழிய துவங்கியது. தற்போதைய காலக்கட்டத்தில் ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் ஜாகுவார் ஆகிய சில நிறுவனங்கள் மட்டும் தனியாக இந்த ஆபரணத்தை கார்களில் பொருத்தி விற்பனை செய்கின்றன.

 1. ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி - ரோல்ஸ்ராய்ஸ்

1. ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டசி - ரோல்ஸ்ராய்ஸ்

ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் பானட்டின் முன்பக்கத்தில் காணப்படும் ஆபரணச் சின்னத்தை Spirit of Ecstasy என்று அழைக்கின்றனர். மகிழ்ச்சியான பயணத்தையும், வேகத்தையும் ஒரு சேர அனுபவிப்பதை குறிக்கும் வகையில் இந்த ஆபரணத்தை 1911ல் சார்லஸ் ஸ்கை என்பவர் வடிவமைத்தார். ஆனால், இன்றைக்கு இந்த ஆபரணச் சின்னத்திற்கு புதிய அர்த்தங்கள் பல கற்பிக்கப்படுகின்றன. ஒருவேளை கார் விபத்தில் கார் மோதும்போது இந்த ஆபரணம் சட்டென உள்ளே இழுத்துக் கொள்ளும் என்கின்றனர்.

2. துப்பாக்கி பார்வை - லிங்கன்

2. துப்பாக்கி பார்வை - லிங்கன்

அமெரிக்காவை சேர்ந்த லிங்கன் சொகுசு கார் நிறுவனத்தின் Gun Sight என்ற ஆபரணச் சின்னமும் பிரபலமானது. குறி வைத்து சுடுவதற்கு உதவும் துப்பாக்கி பார்வை கண்ணாடியை குறிக்கும் வடிவிலான ஆபரணச் சின்னமும் பல லிங்கன் கார் மாடல்களில் கொடுக்கப்பட்டன. இதுதவிர, வேகத்தை குறிக்கும் விதத்தில் கிரேஹவுண்ட் என்ற நாய் வடிவ சிலையும் சில கார் மாடல்களில் இடம்பெற்றன.

3.வேகத்தின் தேவி- பேக்கார்டு

3.வேகத்தின் தேவி- பேக்கார்டு

1899 முதல் 1958 வரை அமெரிக்காவில் சேர்ந்த சொகுசு கார் தயாரித்து வந்த பேக்கார்டு நிறுவனத்தின் ஆபரணச் சின்னமும் பிரபலமானது. தனது தயாரிப்புகளின் பிரத்யேகத் தன்மையை உணர்த்தும் விதத்தில் Goddess of Speed மற்றும் பெலிக்கன் என்ற ஆபரணச்சின்னங்களை பயன்படுத்தியது. அதில், கையில் டயருடன் பறப்பது போன்ற பெண் சிலை ஆபரணச் சின்னம் வாடிக்கையாளர்களை கவர்ந்த ஒன்று.

4.பறக்கும் பென்ட்லீ - பென்ட்லீ

4.பறக்கும் பென்ட்லீ - பென்ட்லீ

இங்கிலாந்தை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பென்ட்லீ நிறுவனத்திந் Flying B என்ற ஆபரணச் சின்னமும் பிரபலமானது. B என்ற ஆங்கில எழுத்து பென்ட்லீ நிறுவனத்தையும், Flying என்பது காரின் வேகத்தையும் குறிப்பதாக அமைகிறது.

5.முப்பரிமாண நட்சத்திரம் - மெர்சிடிஸ் பென்ஸ்

5.முப்பரிமாண நட்சத்திரம் - மெர்சிடிஸ் பென்ஸ்

முப்பரிமாண நட்சத்திர சின்னம் பென்ஸ் கார்களின் அந்தஸ்தையும், அதன் மதிப்பையும் கூட்டியதில் பெரும் பங்கு வகித்தன. காட்லிப் டெய்ம்லர் தனது மனைவிக்கு அனுப்பிய கடிதத்தில் தனது வீட்டு அமைப்பை மூன்று முனை கொண்ட நட்சத்திர வடிவில் குறிப்பிட்டு அனுப்பினார். மேலும், அந்த நட்சத்திர சின்னம் ஒரு நாள் தனது ஆலைகளில் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று, அவரது மகன்களின் முயற்சியில் அந்த சின்னத்தை டெய்ம்லர் மோட்டாரென் ஜெசல்சாஃப்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1921ம் ஆண்டு இந்த நட்சத்திரி சின்னம் பதிவு செய்யப்பட்டது.

Picture Credit:Flickr

Ehisforadam

 6.பறக்கும் பாவை - ப்ளைமோத்

6.பறக்கும் பாவை - ப்ளைமோத்

1940கள் முதல் நம் நாட்டு மார்க்கெட்டில் பிரிமியர் மூலம் ப்ளைமோத் கார்கள் விற்பனைக்கு கிடைத்தன. பருந்து இறக்கையை நினைவூட்டும் வகையிலான இந்த ஆபரணச் சின்னதத்தை Flying Lady என்று அழைத்தனர். அவார்டு ஃபேர்பேங்க்ஸ் என்ற அமெரிக்காவின் பிரல சிற்ப கலைஞரின் கைவண்ணத்தில் 8 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சினை குறிப்பிடும் வகையில் இந்த சின்னம் வடிவமைக்கப்பட்டது.

 7.அதிர்ஷ்ட தேவதை - புயிக்

7.அதிர்ஷ்ட தேவதை - புயிக்

1930களில் புயிக் ரிவிரா மற்றும் மாடல்40 ஆகிய கார்கள் மிக பிரபலமானவை. அதிர்ஷ்ட தேவதையை குறிக்கும் விதத்தில் இந்த கார்களின் ஆபரணச் சின்னம் இருந்தது. 1927ம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்த பிரபல நாட்டிய மங்கை இசதோரா துங்கனை நினைவுகூறும் வகையில் அந்த சின்னம் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

Picture credit: Flickr

Flythebirdpath

8.பாயும் சிறுத்தை - ஜாகுவார்

8.பாயும் சிறுத்தை - ஜாகுவார்

டாடா மோட்டார்ஸ் தலைமையில் செயல்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜாகுவார் நிறுவனத்தை சொன்னவுடன் நினைவுக்கு வருவது அதன் பாயும் சிறுத்தை சின்னம்தான். தற்போதும் இந்த ஆபரணச் சின்னத்தை ஜாகுவார் தனது கார்களில் வழங்கி வருகிறது.

 9.ஆர்ப்பரிக்கும் ஆட்டுக் கிடா - டாட்ஜ்

9.ஆர்ப்பரிக்கும் ஆட்டுக் கிடா - டாட்ஜ்

டோட்ஜ் காருக்கான ஆபரண சின்னத்தை அமெரிக்காவின் பிரபல சிற்ப வல்லுனர் அவார்ட் ஃபேர்பேங்க்ஸ்தான் வடிவமைத்தார். காரின் உறுதியை பிரதிபலிக்கும் வகையில் ஆட்டுக் கிடா பாய்வது போன்ற சின்னத்தை வடிவமைத்து கொடுத்தார்.

 10. போர் படை தளபதி போன்டியாக்!

10. போர் படை தளபதி போன்டியாக்!

உலகின் மிக கவர்ச்சிகரமான ஆபரணச் சின்னங்களில் போன்டியாக் கார் நிறுவனத்தின் சின்னமும் மிக பிரபலமானது. போன்டியாக் போரின்போது ஒட்டாவாவின் தளபதியாக இருந்த போன்டியாக்கின் முக அமைப்புடன் கூடிய ஆபரணச்சின்னம் பயன்படுத்தப்ட்டது. பின்னர் அது போர் விமானத்தின் சாயலுக்கு மாற்றப்பட்டது.

Picture Credit: Flickr

Exfordy

அபாயம்

அபாயம்

ஆட்டோமொபைல் துறையின் அழகிய வரலாற்றை சிறப்பு செய்வதில் ஆபரணங்களாக விளங்கிய அடையாளச் சின்னங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அழகின் பின்னால் ஆபத்து உண்டு சொல்வது போன்று, அந்த ஆபரணச் சின்னங்களால் விபத்துக்கள் நேரும் அபாயமும் இருப்பதாக கூறுகின்றனர். அந்த காலத்தில் சொற்ப எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தன. ஆனால், இன்று கோடிகளில் புரள்கின்றன அதன் எண்ணிக்கை. இதனாலேயே, பல நிறுவனங்கள் ஆபரணச் சின்னங்களை தவிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், ரோல்ஸ்ராய்ஸ், ஜாகுவார் போன்ற நிறுவனங்கள் தங்களது பாரம்பரிய சின்னத்தை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த ஆபரணச் சின்னங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

Most Read Articles
English summary
Read our classic car hood ornaments & emblems story with history of famous old car mascots & hood ornaments from America, Britain & other countries
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X