இந்திய சாலைகள் மற்றும் பாலங்கள் பற்றிய சுவாரஸ்யங்கள்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் சாலை கட்டமைப்பில் இந்தியா மிகவும் வலுவானதாகவே இருக்கிறது. அதேசமயம், அபாயகரமானதாக முத்திரையையும் பெற்றுவிட்ட இந்திய சாலைகள்தான் உலகின் இரண்டாவது மிக நீளமான சாலை கட்டமைப்பு கொண்டது.

தற்போது வெகுவேகமாக சர்வதேச தரத்திற்கு பல்வேறு கட்டமைப்பு வசதிகளை பெற்று வரும் இந்திய சாலைக் கட்டமைப்பில் இருக்கும் 10 சுவாரஸ்யமான விஷயங்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.


இந்திய சாலை கட்டமைப்பு - ஒரு பார்வை

இந்திய சாலை கட்டமைப்பு - ஒரு பார்வை

மொத்தமுள்ள 43,20,000 கிலோமீட்டர் நீளத்துக்கான இந்திய சாலை கட்டமைப்பில் 92,851 கிமீ தூரம் தேசிய நெடுஞ்சாலைகளாகவும், 1,63,898 கிமீ தூரம் மாநில நெடுஞ்சாலைகளாகவும் இருக்கின்றன. மேலும், மாவட்ட அளவிலான முக்கிய சாலைகளின் நீளம் 17,05,706 கிமீ தூரமாகவும், ஊரகச் சாலைகள் 27,49,805 கிமீ தூரமாகவும் இருக்கின்றன. இந்திய சாலைகள் மற்றும் அதில் அமைக்கப்பட்டிருக்கும் பாலங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

1. நீளமான ஆற்றுப்பாலம்

1. நீளமான ஆற்றுப்பாலம்

பீகாரில், கங்கை நதியில் அமைக்கப்பட்டிருக்கும் மஹாத்மா காந்தி சேது ஆற்றுப் பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப்பாலமாக குறிப்பிடப்படுகிறது. பீகார் தலைநகர் பாட்னாவையும், ஹாஜிப்பூரையும் இணைக்கும் இந்த பாலம் 5.5 கிமீ நீளம் கொண்டது என்பதுடன், இது 4 தடங்கள் கொண்ட சாலையாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

2.கோதாவரி பாலம்

2.கோதாவரி பாலம்

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் கோவூர் - ராஜமுந்திரி இடையில் அமைக்கப்பட்டிருக்கும் கோதாவரி ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாலம் 2.7 கிமீ நீளம் கொண்டது. ஆசியாவின் இரண்டாவது ரயில் மற்றும் சாலை பாலமாக இது குறிப்பிடப்படுகிறது. கீழே ரயில் பாலமும், மேலே ரயில் பாலமுமாக அமைக்கப்பட்டுள்ளது.

3. பெரிய சுங்கச் சாவடி

3. பெரிய சுங்கச் சாவடி

டெல்லி- குர்கான் விரைவு சாலையில் உள்ள 32 வழித்தட சுங்கச்சாவடிதான் இந்தியாவின் மிகப்பெரிய சுங்கச் சாவடியாக குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி, ஆசியாவிலேயே மிகப்பெரிய சுங்கச் சாவடி என்ற பெருமையும் இதற்கு உண்டு.

4.நீளமான கடல் பாலம்

4.நீளமான கடல் பாலம்

மும்பையின் பந்த்ரா- வோர்லி இடையில் கடலில் அமைக்கப்பட்டிருக்கும் விரைவு சாலைதான் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாக குறிப்பிடப்படுகிறது. இது 22 கிமீ நீளம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சுரங்கப் பாதை

சுரங்கப் பாதை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்திலுள்ள செனானி என்ற இடத்தில் இந்தியாவின் மிக நீளமான சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இது 9.2 கிமீ தூரத்துக்கு மலையைக் குடைந்து அமைக்கப்படுகிறது.

6.நீளமான தேசிய நெடுஞ்சாலை

6.நீளமான தேசிய நெடுஞ்சாலை

இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH-7. கன்னியாகுமரியிலிருந்து வாரணாசியை இணைக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலை 4,572 கிமீ தூரத்துக்கு நீள்கிறது. ஆனால், புதிய திட்டத்தின்படி, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ நகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை NH- 44 என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலை என்ற பெருமையை பெற இருக்கிறது.

7.மதுரவாயல் பறக்கும் சாலை

7.மதுரவாயல் பறக்கும் சாலை

சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையிலான 19 கிமீ நீளத்துக்கான பறக்கும் சாலை திட்டம்தான் இந்தியாவின் மிக நீளமான பறக்கும் சாலை திட்டமாக குறிப்பிடப்படுகிறது.

8. இரட்டை அடுக்கு பல்தள சாலை

8. இரட்டை அடுக்கு பல்தள சாலை

இந்தியாவின் சிறந்த இரட்டை அடுக்கு பல்தளச் சாலை என்ற பெருமையை கத்திப்பாரா சந்திப்பு மேம்பாலம் பெற்றிருக்கிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய இரட்டை அடுக்கு பல்தளச் சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

9.சிறந்த மேம்பாலம்

9.சிறந்த மேம்பாலம்

பெங்களூர் நகரின் ஹெப்பால் சந்திப்பில் அமைக்கப்பட்டிருக்கும் மேம்பாலம் இந்தியாவின் சிறந்த தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட மேம்பாலம் என்ற பெருமைக்குரியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சுற்றுச் சந்தியின் மேம்பாலம் 5.23 கிமீ நீளம் கொண்டது.

Most Read Articles
English summary
The Road network of India is second largest road network in The World with total length of around 4,320,000 Km. Here are compiled some interesting things about Indian roads and bridges. Have a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X