உலகின் பிரபலமான குண்டு துளைக்காத கார்கள்: சிறப்பு தொகுப்பு

முக்கிய தலைவர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் என சமுதாயத்தில் எந்தளவுக்கு பிரபலமாக இருக்கின்றனரோ அந்தளவு பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் அதிகமிருக்கிறது. இதனால், பலர் தங்களது பாதுகாப்பை கருத்தில்கொண்டு அதி நவீன பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த குண்டு துளைக்காத சொகுசு கார்களை தேர்வு செய்து வாங்குகின்றனர்.

மேலும், அதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களை சில சொகுசு கார் நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. கண்ணி வெடி தாக்குதல், துப்பாக்கி சூடு போன்ற தாக்குதல்களிலிருந்து காரில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த கார்களின் கட்டமைத்து கொடுக்கப்படுகின்றன. அதுபோன்று, முன்னணி நிறுவனங்களின் சில பாதுகாப்பு கார் மாடல்களை இங்கே வரிசைப்படுத்தி கொடுத்துள்ளோம்.


பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த கார்கள் பிற கார் மாடல்கள் போன்று வசதிகளையும், கூடுதலாக நிறைந்த பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டவை. காரின் பாடி, சஸ்பென்ஷன், கண்ணாடிகள், அடிப்பாகம் என அனைத்தும் மிக வலுவானதாகவும், தீப்பிடிக்காத எரிபொருள் டேங்க் கொண்டவை. ஒவ்வொரு கார் மாடலின் விபரமும் தலா இரண்டு ஸ்லைடுகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

1.மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் புல்மமேன் கார்டு

1.மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் புல்மமேன் கார்டு

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் அடிப்படையிலான எஸ் புல்மேன் கார்டு 600 கார் மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது. குறைந்த தூரத்திலிருந்து வரும் துப்பாக்கித் தோட்டாக்கள், எறிகணை தாக்குதல்கள், கண்ணி வெடி தாக்குதல்களில் கூட அதிக சேதமைடையாத சிறப்பம்சங்களை கொண்டது. மிச்செலின் டயர் நிறுவனம் தயாரித்து கொடுக்கும் ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், பஞ்சர் பிரச்னையும் இருக்காது. இது 4315 மிமீ வீல் பேஸ் கொண்ட கார் என்பதால் மிக மிக தாராளமான இடவசதியை அளிக்கும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த காரில் 517 எச்பி பவரை அளிக்கும் 5.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 100 கிமீ வேகத்தை சில வினாடிகளில் எட்டிவிடும் திறன்கொண்டது. எனவே, அவசர சமயங்களில் விரைவாக அந்த இடத்தை விட்டு செல்ல முடியும். உலகின் எந்த இடத்தில் உள்ள பென்ஸ் சர்வீஸ் மையங்களில் இந்த காரை சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

 2. ஆடி ஏ8 செக்யூரிட்டி

2. ஆடி ஏ8 செக்யூரிட்டி

ஆடி ஏ8 காரின் அடிப்படையில் கட்டமைத்து தரப்படும் கார் மாடல். ஸ்டீல், டைட்டானியம், கெவ்லர் போன்ற உலோகங்களை பயன்படுத்தி பாடி கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிசக்திவாய்த துப்பாக்கி தாக்குதல் மற்றும் ரசாயன தாக்குதல்களிலிருந்து பயணிப்போரை காக்கும் வசதி கொண்டது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த காரில் 450 பிஎச்பி பவரை அளிக்கும் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0 - 100 கிமீ வேகத்தை 5 வினாடிகளுக்குள் அடைந்துவிடும்.

 3. பென்ட்லீ முல்லினெர்

3. பென்ட்லீ முல்லினெர்

பென்ட்லீ முல்சான் அடிப்படையில் கட்டமைத்து தரப்படும் மாடல். குண்டு வெடிப்பு, ரசாயன தாக்குதல், துப்பாக்கி சூடு போன்றவற்றை தாங்கும் வல்லமை கொண்டது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த காரில் 505 எச்பி பவரை அளிக்கும் 6.7 லிட்டர் ட்வின்டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 60 கிமீ வேகத்தை சில வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது.

 4. மேபேக் 62எஸ்

4. மேபேக் 62எஸ்

கடந்த ஆண்டு மேபேக் கார் பிராண்டை மெர்சிடிஸ் பென்ஸ் மூடுவிழா நடத்திவிட்டது. ஆனால், பிரபலமான பாதுகாப்பு கார்களின் டாப் -10 லிஸ்ட்டில் இந்த காருக்கும் இடமுண்டு. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரிஜிக் என்ற கவச வாகன தயாரிப்பு நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த கார் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டமைத்து தரப்பட்டது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த காரில் 620 எச்பி பவரை வாரி வழங்கும் ஏஎம்ஜியின் 6.5 லிட்டர் எஞ்சின் பொருத்தி டெலிவிரி கொடுக்கப்பட்டு வந்தது. மேலும், இந்த காரின் தோற்றத்திலும் சில நகாசு வேலைகளை பார்த்து கொடுத்ததால் பலரின் விருப்பமாக இருந்தது. மேபேக் பிராண்டு மூடுவிழா நடத்தப்பட்டாலும், அதனை வேறு வடிவில் சந்தைக்கு கொண்டு வருவதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

5. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி

5. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி

பொதுவாக பாதுகாப்பு அம்சங்களுக்காக மாற்றங்கள் செய்யப்படும்போது காரின் எடை வெகுவாக அதிகரிக்கும். ஆனால், இந்த பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் ஹை செக்யூரிட்டி கார் எடை அதிகரித்த போதிலும், கையாளுமை மற்றும் ஆக்சிலரேசன் மிக சிறப்பாக இருக்கும் என்று மார் தட்டுகிறது பிஎம்டபிள்யூ.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

அதிசக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுவெடிப்பிலும் கூட சேதாரம் இல்லாமல் தப்பிவிடும். துப்பாக்கி குண்டு இதன் பெட்ரோல் டேங்கின் மீது பட்டுவிட்டால், உடனடியாக கூடுதல் உறை ஒன்று சூழ்ந்து தீப்பிடிக்காது. இந்த காரில் 535 எச்பி பவரை அளிக்கும் 6.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 0- 60 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும்.

 6. போப் ஆண்டவர் கார்

6. போப் ஆண்டவர் கார்

போப் ஆண்டவருக்காக பல முன்னணி நிறுவனங்கள் போப் மொபைல் என்ற பெயரில் கவச வாகனத்தை வடிவமைத்து கொடுத்து வருகின்றன. கார்களில் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு கொடுக்ககப்படும் இந்த போப் மொபைல் வாகனங்கள் குண்டு துளைக்காத வசதி கொண்டவை.

 இப்போது பென்ஸ்

இப்போது பென்ஸ்

தற்போது போப் ஆண்டவர் பயன்படுத்தும் கவச வாகனத்தை மெர்சிடிஸ் பென்ஸ் கட்டமைத்து கொடுத்துள்ளது. இந்த போப் மொபைலில் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறுது. 0 - 97 கிமீ வேகத்தை 6 வினாடிகளில் எட்டிவிடும்.

 7.கான்கொஸ்ட் நைட் எக்ஸ்வி

7.கான்கொஸ்ட் நைட் எக்ஸ்வி

ஹம்மரை நினைவூட்டினாலும், அதைவிட கரடு முரடான தோற்றத்துடன் அச்சமூட்டும் இந்த எஸ்யூவியின் பாடி கெவ்லர் மற்றும் ஃபைபர்கிளாஸ் போன்ற பாகங்களால் கட்டமைக்கப்ப்டடுள்ளது. இதன் வீல்கள் கூட பிரத்யேக அலுமினியத்தில் தயாரிக்கப்பட்டது. எனவே, எந்தவொரு தாக்குதலிலும் சோடை போகாது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த முரட்டு எஸ்யூவியில் 325 எச்பி பவரை அளிக்கும் 6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 6.7 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது. மணிக்கு 246 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

8. கேடில்லாக் ஒன்

8. கேடில்லாக் ஒன்

அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்துவது இந்த மாடல்தான். வாடிக்கையாளர்களின் வசதி, விருப்பம், அச்சுறுத்தல்களை பொறுத்து கட்டமைத்து கொடுக்கப்படுகிறது. இதில் செய்து கொடுக்கப்படும் வசதிகளும், சொகுசும் மிக சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த காரில் 300 எச்பி பவரை அளிக்கும் 6.6 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மிக விரைவான ஆக்சிலரேசன் கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

 தி டார்ட்ஸ் கொம்பட் டி98 எஸ்யூவி

தி டார்ட்ஸ் கொம்பட் டி98 எஸ்யூவி

முழு கவச வாகனமாகவே தோற்றமளிக்கும் இந்த எஸ்யூவி ரஷ்ய தயாரிப்பு. இதன் பாடி 7 செமீ தடிமன் கொண்டது. ஏகே-47 எந்திர துப்பாக்கி, ஏவுகணை தாக்குதல்களில் கூட சேதமடையாத விசேஷ அம்சங்கள் கொண்டது

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த எஸ்யூவியில் 8.1 லிட்டர் வோர்டெக் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 180 கிமீ வரை சீறிப் பாய்ந்து செல்லும் திறன் கொண்டது. முதலாம் உலகப் போரிலிருந்து நீண்ட வரலாறு கொண்டது இந்த எஸ்யூவி.

10. தி டம்ப்ளர்

10. தி டம்ப்ளர்

பேட்மேன் சினிமாவில் வந்த வாகனத்தை அப்படியே நிஜமாக்கியுள்ளனர். தி டம்ப்ளர் என்று பெயரிடப்பட்ட இந்த வாகனம் நிச்சயம் இளைய கோடீஸ்வரர்களை கவரும்.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ஜெட் பூஸ்ட்டர்கள் கொண்ட 5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து பாதுகாப்பு சோதனைகளிலும் வெற்றி பெற்றதாக கூற முடியாது. ஆனால், இதில் ஒரு பேட்பேட் போன்ற மோட்டார்சைக்கிள் கொடுக்கப்பட்டுள்ளது.

சோதனை மற்றும் சான்று

சோதனை மற்றும் சான்று

பாதுகாப்பு கார்களை வாங்கும்போது அந்த கார்கள் குறிப்பிட்ட தர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சான்று அளிக்கப்பட்டவைதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்கான பிரத்யேக விதிமுறைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றி முன்னணி நிறுவனங்கள் கட்டமைக்கின்றன. இந்த கார்களை சோதனை செய்து தருவதற்கென்றே பிரத்யேக அமைப்புகளும், நிறுவனங்களும் செயல்படுகின்றன.

Most Read Articles
English summary
10 Most Famous Armoured Cars In The World Be it Barack Obama or the Indian President, one of them dare not say they don't need protection! Have you ever wondered how a Head of State travels or what kind of security cars they move around in? Let's find out. 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X