இந்தியாவில் இருக்க வேண்டிய 10 மோட்டார்சைக்கிள்கள் - சிறப்புத் தொகுப்பு

Written By:

இந்தியாவின் இருசக்கர வாகன மார்க்கெட் மிக வலுவானதாகவும், மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பை கொண்டதாகவும் இருக்கிறது. இதன்காரணமாக, உலகின் பல முன்னணி இருசக்கர வாகன நிறுவங்கள் இந்தியாவில் சிறிய வகை பைக் மட்டுமின்றி, அதிசக்திவாய்ந்த சூப்பர் பைக்குகளையும் போட்டி போட்டு களமிறக்கி வருகின்றன.

சிறிய பைக்குகளுக்கான மார்க்கெட் என்ற முத்திரை மாறி வருகிறது. சக்திவாய்ந்த மற்றும் விலையுயர்ந்த பைக்குகளின் விற்பனையும் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில், இந்திய சாலைநிலைகளில் 1000சிசி மற்றும் அதற்கு கூடுதல் சக்திவாய்ந்த பைக்குகளை இயக்கும்போது ஓட்டுபவர் எப்போதுமே பரபரப்பாக இயங்க வேண்டியிருக்கும் என்பதுடன், பாதுகாப்பு பிரச்னைகளும் அதிகம்.

ஆனால், 250சிசி முதல் 650சிசி வரையிலான எஞ்சின் கொண்ட இடைநிலை ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகள் இந்திய சாலைகளுக்கு ஏற்றதாக இருக்கும். அதுவும், ஓட்டுபவர் அதன் முழு பலத்தையும் பார்ப்பதற்கும் ஏற்றதாக இருக்கும். அவ்வாறு, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் இந்தியாவிற்கு பொருத்தமான 10 பைக் மாடல்களை ஸ்லைடரில் காணலாம்.

01. ஹோண்டா CRF 250L:

01. ஹோண்டா CRF 250L:

இந்தியர்களிடம் ஆஃப்ரோடு பைக்குகளுக்கான ஆர்வம் அதிகமிருக்கிறது. அவர்களுக்கு ஏற்ற வகையிலான ஒரு பைக் மாடல் ஹோண்டா சிஆர்எஃப் 250எல். இந்த பைக்கில் 23 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் வழங்கும் 249.6 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. சாகச விரும்பிகளுக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

 02. அப்ரிலியா ஆர்எஸ்வி4 125 ரெப்லிகா

02. அப்ரிலியா ஆர்எஸ்வி4 125 ரெப்லிகா

அப்ரிலியாவின் ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்கின் சாயலில் அப்படியே வடிவமைக்கப்பட்ட 125சிசி மாடல். இந்த பைக்கில் 15 எச்பி பவரையும், 10.9 என்எம் டார்க்கையும் வழங்கும் 124.8சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. சூப்பர் பைக்கை போன்ற தோற்றத்தை கொண்டிருப்பதுடன், மிக குறைவான விலை கொண்டதாக இருக்கும் என்பதால் இந்தியர்களை நிச்சயம் கவரும்.

03 மேட்ஆஸ் [MadAss]

03 மேட்ஆஸ் [MadAss]

சீன தயாரிப்பு மாடலான இந்த மேட்ஆஸ் மொபட் மாடல்கள் இந்தியாவிற்கு ஏற்ற மாடல்களாக இருக்கும். தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருப்பதுடன், மிக ஸ்டைலான டிசைன் கொண்டிருப்பதால் நிச்சயம் இந்தியாவிற்கு பொருத்தமானதாக கூறலாம். 49சிசி எஞ்சின் முதல் 125சிசி எஞ்சின் வரையிலான மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் டேங்க்குடன் வடிவமைக்கப்பட்ட சேஸீ, டியூவல் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டம், 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. ஒரேயொரு பாதக விஷயம், இவை 2 ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்டவை. 4 ஸ்ட்ரோக் எஞ்சினுடன் வந்தால் நிச்சயம் இந்தியர்கள் வாரி அணைத்துக் கொள்வர்.

 04. யமஹா TMAX

04. யமஹா TMAX

மோட்டார்சைக்கிளையும், ஸ்கூட்டரையும் பார்த்து வெறுத்து போன நம் நாட்டினருக்கு, இந்த கலப்பு வகை இருசக்கர வாகனம் நிச்சயம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 45 பிஎச்பி சக்தியை அளிக்கும் பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின், சிவிடி கியர்பாக்ஸ் என ஓர் புதிய ஓட்டுதல் அனுபவத்தை வழங்கக்கூடியது. பிரிமியம் டிசைன், அதிக இடவசதி கொண்ட இந்த யமஹா இருசக்கர வாகனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் நிச்சயம் குறிப்பிட்ட வாடிக்கையாளர் வட்டத்தில் அதிக வரவேற்பை பெறும்.

 05. யமஹா YZF - R6

05. யமஹா YZF - R6

ஸ்போர்ட்ஸ் ரகத்தை இந்த மோட்டார்சைக்கிள் ரேஸ் டிராக்கில் ஓட்டி மகிழ விரும்புபவர்களுக்கு சிறந்த சாய்ஸ். இந்த பைக்கில் இருக்கும் 599சிசி 4 சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சின் 133 பிஎச்பி பவரை வழங்கும். தோற்றம், செயல்திறன் என அனைத்து விதத்திலும் இந்தியர்களை சுண்டியிழுக்கும் என்பதில் ஐயமில்லை.

 06. ஹோண்டா சிபிஆர் 600ஆர்ஆர்

06. ஹோண்டா சிபிஆர் 600ஆர்ஆர்

முந்தைய ஸ்லைடில் பார்த்த யமஹா ஆர்6 பைக்கிற்கு நேரடி போட்டியான ஹோண்டா மாடல் இது. இந்த பைக்கில் இருக்கும் 599சிசி 4 சிலிண்டர் எஞ்சின் 99.61 எச்பி பவரை வழங்கும். ஹோண்டாவின் எஞ்சினை ருசித்து பார்க்க விரும்பும் இந்தியர்களு்ககு சிறந்த சாய்ஸ்.

 07. எம்வி அகஸ்ட்டா F3

07. எம்வி அகஸ்ட்டா F3

இந்திய சாலைகளில் நாம் பார்க்க விரும்பும் மற்றொரு மாடல் எம்வி அகஸ்ட்டாவின் எஃப்3 பைக் மாடல். இடைநிலை ரகத்திலான இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் 148 எச்பி பவரை வழங்கும் 798சிசி லிக்யூடு கூல்டு 3 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இதன் தோற்றமும், செயல்திறனும் அனைவரையும் வெகுவாக கவரும்.

 08. கவாஸாகி KLR650

08. கவாஸாகி KLR650

கடந்த ஆண்டு சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட நின்ஜா எச்2 பைக் வரை இந்தியாவில் சரமாரியாக சூப்பர் பைக்குகளை கவாஸாகி இறக்கி வருகிறது. இந்த நிலையில், கவாஸாகியிடம் கைவசம் உள்ள சக்திவாய்ந்த இடைநிலை மாடல்களில் கேஎல்ஆர்650 பைக் இந்தியாவிற்கு ஏற்றதாக இருக்கும். ஆஃப்ரோடு மற்றும் சாகச பயணங்கள் செல்வோருக்கு ஏற்ற இந்த பைக் மாடலில் இருக்கும் 651சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் 36 பிஎச்பி சக்தியை வழங்கும்.

 09. கேடிஎம் டியூக் 690

09. கேடிஎம் டியூக் 690

மார்க்கெட்டில் இருக்கும் பல சூப்பர் பைக்குகளைவிட மிகச்சிறந்த செயல்திறனை வழங்கும் பைக் மாடல் இது. இந்த பைக்கில் இருக்கும் 690சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் 69.1 எச்பி சக்தியை வழங்கும். வித்தியாசமான ஸ்டைல், சிறந்த கையாளுமை போன்றவை இந்த பைக்கிற்கு நிச்சயம் சிறப்பான வரவேற்பை பெற்று தரலாம்.

 10. ராயல் என்ஃபீல்டு டிரையல்ஸ் பைக்

10. ராயல் என்ஃபீல்டு டிரையல்ஸ் பைக்

வெளிநாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட இந்த பைக் மாடலின் அடிப்படையிலான மாடல் ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் விற்பனை செய்தால் நிச்சயம் சிறப்பான வரவேற்பை பெறும். தோற்றம், ராயல் என்ஃபீல்டு மீதான ஈர்ப்பு ஆகியவை இந்த பைக் மாடலுக்கும் வெற்றியை பெற்றுத் தரலாம். ராயல் என்ஃபீல்டு டிரையல்ஸ் பைக்கின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட மாடலின் படத்தை ஸ்லைடில் காண்கிறீர்கள்.

பட உதவி: Iain Crockart

 
English summary
In this list, we are going to take a look at 10 motorcycles that would suit India well:
Story first published: Thursday, April 9, 2015, 10:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark