விந்தையான இந்திய ரயில் நிலையங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!

Posted By: Staff

உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்களில் ஒன்றாக இந்திய ரயில்வே விளங்கி வருகிறது. விந்தையான இந்திய ரயில் நிலையங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் சில உங்கள் பார்வைக்கு.

ராயபுரம், சென்னை

ராயபுரம், சென்னை

ராயபுரம் ரயில்வே நிலையம்: தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம் தான். இங்கிருந்துதான் தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத் தொடங்கியது.

கும், மேற்குவங்கம்

கும், மேற்குவங்கம்

இமாலய மலைத்தொடர்சியில் அமைந்துள்ள டார்ஜிலிங் நகர் அருகே அமைந்துள்ளது கும் ரயில் நிலையம். இது இந்தியாவின் மிக உயரமான ரயில் நிலையம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இங்கு ரயில்வே மியூசியம் ஒன்றும் அமையப்பெற்றுள்ளது.

தூத்சாகர் , கோவா

தூத்சாகர் , கோவா

கோவா மற்றும் கர்நாடக மாநில எல்லைகளுக்கு இடையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமையப்பெற்றுள்ள ஒரு இயற்கை எழில்கொஞ்சும் ரயில் நிலையம் இது. இந்தியாவின் மிகச்சிறிய ரயில்நிலையங்களுள் ஒன்று தூத்சாகர் ரயில்நிலையம்.

தூத்சாகர் , கோவா

தூத்சாகர் , கோவா

மண்டோவி ஆற்றில் இருந்து உருவாகும் 100 அடி அகலமான தூத்சாகர் நீர்வீழ்ச்சி மற்றும் ஆற்றுப் பாலங்களுக்கு மத்தியில் இருக்கும் இந்த ரயில் நிலையத்தை ஷாருக் கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் கூட காணலாம்.

மன்வால், ஜம்மு காஷ்மீர்

மன்வால், ஜம்மு காஷ்மீர்

இந்தியாவின் முதல் பசுமை ரயில் நிலையம் என்ற சிறப்பை பெற்ற மன்வால் ரயில் நிலையம், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் மின்விளக்குகள், காற்றாடிகள் உட்பட அனைத்து மின்சாதனங்களுக்கும் சூரிய சக்தி ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.

சார்நாத், உத்தரப்பிரதேசம்

சார்நாத், உத்தரப்பிரதேசம்

இந்து மதம், புத்த மதம் மற்றும் ஜைனம் என மூன்று மதங்களின் புனிதத் தலங்களுக்கு செல்லும் வழியாக கருதப்படுகிறது இந்த சார்நாத் ரயில்நிலையம். புனிதத் தலங்களின் வழி என்பதால் இந்த ரயில் நிலையமும் புத்த மத அடையாளமான சாஞ்சி ஸ்டூபா வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து வாரணாசி மற்றும் ஜைனர்களின் குருவாக போற்றப்படும் ஷ்ரீயன்சானதா பிறப்பிடமான சிங்பூர் உள்ளிட்ட இடங்கள் இதன் அருகாமையில் உள்ளது.

கட்டாக், ஒடிசா

கட்டாக், ஒடிசா

நாட்டின் மிக முக்கிய ரயில் வழித்தடமான ஹவுரா - சென்னை வழித்தடத்தின் முக்கிய ரயில்நிலையம் கட்டாக். இந்திய ரயில்வேயில் அதிகமாக புக்கிங் செய்யப்படும் முதல் 100 ரயில் நிலையங்களுள் ஒன்றாகவும் இது விளங்கிவருகிறது. கோட்டை வடிவில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

வஷி, மகராஷ்டிரா

வஷி, மகராஷ்டிரா

மத்திய ரயில்வேயின் முக்கியமான ரயில்நிலையங்களுள் ஒன்றாக விளங்கி வரும் இது, மும்பையில் உள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவின் அடிப்பகுதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ரஷித்புரா கோரி, ராஜஸ்தான்

ரஷித்புரா கோரி, ராஜஸ்தான்

ராஜஸ்தானில் உள்ள ரஷித்புரா கோரி ரயில்நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டரோ, டிக்கெட் பரிசோதகரோ பணியில் இல்லை. இந்த ரயில்நிலையத்தை ரஷித்புரா கோரி கிராமத்தினரே நடத்தி வருகின்றனர். இதுவே பொதுமக்களால் நடத்தப்பட்டு வரும் நாட்டின் ஒரே ரயில்நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்கோடி, தமிழ்நாடு

தனுஷ்கோடி, தமிழ்நாடு

இந்தியாவின் தென்பகுதி மூலையில் அமைந்துள்ள தனுஷ்கோடி, ராமேஸ்வரத்தில் உள்ளது. 1964ல் ஏற்பட்ட புயலில் காரணமாக இந்நகரமே தண்ணீரில் முழ்கி சீரழிந்தது. அழிந்த ரயில் நிலையம் இன்னும் நினைவுச் சின்னமாக காட்சியளிக்கிறது.

பவானி மண்டி, (மத்திய பிரதேசம் - ராஜஸ்தான்)

பவானி மண்டி, (மத்திய பிரதேசம் - ராஜஸ்தான்)

இந்தியாவின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த ரயில்நிலையமாக பவானி மண்டி விளங்குகின்றது. இந்த ரயில்நிலையம் இரண்டு மாநிலங்களுக்கு பாத்தியப்பட்டதாக உள்ளது.

இந்த ரயில்நிலையத்தின் மேற்குப்பகுதி நடைமேடை மத்தியபிரதேச மாநில எல்லைக்குள்ளும், தெற்குப்பகுதி நடைமேடை ராஜஸ்தான் மாநில எல்லைக்குட்பட்டதாகவும் உள்ளது.

English summary
Read in Tamil about interesting facts about 10 indian railway stations.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark