அணுகுண்டும் ஜுஜுபி... ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பல் - விஷயங்கள்!!

Written By:

அணுகுண்டு தாக்குதல் சூழ்நிலைகளிலும் இடர்பாடு இல்லாமல் செயல்படும் விசேஷ அம்சங்கள் கெண்ட அதிநவீன போர்க்கப்பல் ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய கடற்படையின் பலத்தை புதிய பரிமாணத்தில் கொண்டு செல்லும் வல்லமை கொண்ட இந்த அதிநவீன போர்க்கப்பலின் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.

திட்ட செலவு

திட்ட செலவு

ரூ.29,340 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த போர்க்கப்பல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய கடற்படை உருவாக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பல் இது.

இந்திய தொழில்நுட்பம்

இந்திய தொழில்நுட்பம்

இந்த கப்பல் 65 சதவீதம் அளவுக்கு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இடம்பெற்றிக்கும் ஆயுதங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை.மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உலோகக்கலவையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

புராஜெக்ட் 15 பி என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த அதிநவீன போர்க்கப்பல் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பலைவிட ஒரு விசேஷ வசதியை பெற்றிருக்கிறது. அது என்ன விசேஷம் என்று கேட்பவர்கள் அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

அணுகுண்டும் ஜுஜுபி

அணுகுண்டும் ஜுஜுபி

இந்த அதிநவீன போர்க்கப்பலில் விசேஷ காற்றுத் தடுப்பு வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது அணுகுண்டு தாக்குதல், ரசாயன தாக்குதல்கள் பாதிப்புக்கு இலக்கான இடங்களில் கூட இந்த போர்க்கப்பலை சர்வசாதாரணமாக இயக்க முடியும்.

விஷேச தடுப்பு

விஷேச தடுப்பு

எஞ்சின் அறையை தவிர்த்து, இந்த கப்பல் முழுவதும் விசேஷ காற்றுத் தடுப்பு வசதி கொண்டது. சுத்திகரிக்கப்பட்ட காற்றை மட்டுமே உள்ளே அனுப்பும். அசாதரண சூழல்களில் எஞ்சின் பகுதிக்கு செல்வதற்கு விசேஷ முகமூடிகளும் உள்ளது.

எம்எஃப் ரேடார்

எம்எஃப் ரேடார்

இந்த போர்க்கப்பலில் இஸ்ரேலிடமிருந்து பெறப்பட்ட அதிநவீன நிகழ்நேர கண்காணிப்பு கருவி மற்றும் எச்சரிக்கை கருவிகள் அடங்கிய எம்எஃப் ரேடார் சிஸ்டம் நிறுவப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

7,300 டன் எடைகொண்ட இந்த கப்பலில் உக்ரைன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 ஸோய்ரா கேஸ் டர்பைன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வேகம்

வேகம்

இந்த பிரம்மாண்ட போர்க்கப்பல் மணிக்கு 30 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

ஏவுகணைகள்

ஏவுகணைகள்

இந்த போர்க்கப்பலில் வான்தாக்குதல்களை முறியடிக்கும் திறன் கொண்ட பாரக்-8 ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து தயாரிக்கப்பட்டவை. வரும் அக்டோபர் மாதத்தில் கப்பலிலிருந்து இந்த ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்ய கடற்படை திட்டமிட்டுள்ளது.

 பிரம்மோஸ் ஏவுகணை

பிரம்மோஸ் ஏவுகணை

ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பலில் விரைவில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட 8 பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட உள்ளன.

நீர்மூழ்கி கப்பலும் தப்ப முடியாது

நீர்மூழ்கி கப்பலும் தப்ப முடியாது

நீர்மூழ்கி கப்பல்களையும் கண்டறிந்து தாக்கும் தொழில்நுட்பங்கள் இந்த போர்க்கப்பலில் இருக்கிறது.

 கடற்படையில்...

கடற்படையில்...

வரும் 2018ம் ஆண்டு ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போக்கப்பல் இந்திய கடற்படையில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளது.

 
மேலும்... #ராணுவம் #military
English summary
Here are given 12 Interesting facts about INS Visakhapatnam warship.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark