பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

சென்னையில் 16 வயது மகனை பைக் விபத்தில் இழந்த தாய்க்கு, மகனை பைக் ஓட்ட அனுமதித்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By Balasubramanian

சென்னையில் 16 வயது மகனை பைக் விபத்தில் இழந்த தாய்க்கு, மகனை பைக் ஓட்ட அனுமதித்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் மீனா (40), இவரது மகன் ரோஹித் (16), +1 படித்து வருகிறார். ரோஹித் அடம்பிடித்தன் காரணமாக மீனா ரோஹித்திற்கு பல்சர் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

16 வயதே நிரம்பிய ரோஹித் இந்த ரக பைக்கை ஓட்ட தகுதியில்லாதவர். இவருக்கு லைசன்ஸ் கூட எடுக்க வயது தகுதி கிடையாது. இந்த நிலையிலேயே ரோஹித் தனது பல்சரில் வலம் வந்துள்ளார்.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

இந்நிலையில் கடந்த 4ம் தேதி பள்ளிக்கு சென்ற ரோஹித் மாலை தனது பள்ளி தோழி ஒருவரை தனது பைக்கில் வைத்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்துள்ளார்.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

பைக் அம்பத்தூர் எஸ்டேட் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது அங்கு ரோட்டை கடந்து கொண்டிருந்த திருமங்கலத்தை சேர்ந்த பாபு (30) என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

இதில் சம்பவ இடத்திலேயே பாபு துடிதுடித்து பலியானார். ரோஹித்தும், அவரது பள்ளி தோழியும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஹித்தும் பலியானார்.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் விபத்திற்குள்ளான பல்சர் பைக் ரோஹித்தின் தாய் மீனா பெயரில் பதிவு செய்ப்பட்டிருந்தது. இதையடுத்து தனது 16 வயதே நிரம்பிபய மகனை பைக் ஒட்ட அனுமதித்தற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

மீனாவின் மீது 279, 304 (A),338,337 IPC & alter at 279,304 (A) 2counts, 337 Ipc. Sec 4 r/w 181 MV Act, sec 5 r/w 180 MV Act. ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக போலீசார் கடந்த மார்ச் 21ம் தேதி 18க்கு வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு தான் தண்டனை வழக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

இந்நிலையில் மீனா மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிற்காக மீனாவிற்கு போலீசார் ஏற்கனவே கூறியது படி சுமார் 3 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மகனை இழந்து தவிக்கும் தாய்க்கு தற்போது இந்த பிரச்னை வேறு இருக்கிறது.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

இந்தியாவில் சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்திற்குள்ளாவது அடிக்கடி நடக்கும் சம்பவமாக இருக்கிறது. இதற்காக போலீசார் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் விபத்தின் எண்ணிக்கை குறையவில்லை, அதனால் போலீசார் தண்டனையை அதிகரித்துள்ளனர்.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

இது போல் கோல்கட்டாவில் கடந்த வாரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது உரிமம் இல்லாமல் பைக் ஓட்டிய சிறுவர்களை பிடித்தனர். அவர்களது பெற்றோர்களுக்கு கோர்ட்டில் ஆஜர் ஆக கோரி நோட்டீஸ் அனுப்பி தலா ரூ 1,000 அபராதமாக விதிக்கப்பட்டது.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

இதன் மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு பைக்/ஸ்கூட்டர் ஓட்ட தகுதியான வயதும், உரிமமும் பெறதாத மகன்/மகளை பைக்/ஸ்கூட்டர் ஒட்ட அனுமதிக்ககூடாது என போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

மகன் மீது கண்மூடிதனமாக பாசம் வைத்த மீனா அதன் விளைவாக தன் மகனையும் இழந்து வழக்கையையும் சந்திக்கவிருக்கிறார். இது பைக்/ ஸ்கூட்டர் ஓட்ட தகுதியில்லாத தனது மகன்/மகளுக்கு வாகனம் வாங்கி தரும் பெற்றோர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

வீட்டில் குழந்தைகள் மீது வைக்கும் பாசம், அவர்கள் எதை கேட்டாலும் வாங்கி தருவது, நல்ல மார்க் எடுத்தால் அவர்கள் தகுதிக்கு மீறிய பொருட்களை வாங்கி தருவது என நவீன கால பெற்றோர்களின் இது போன்ற செயல்தான் அவர்களை மேலும் துயரத்தில் தள்ளுகிறது.

பைக் விபத்தில் 16 வயது சிறுவன் பலி; பைக் ஓட்ட அனுமதித்த தாய் மீது வழக்கு

18 வயதை கடக்காத உங்கள் மகன்/ மகள், பைக்/ஸ்கூட்டர் கேட்டால் தற்போது மீனாவிற்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். விலை மதிப்பற்ற உயிரை வீணாக விபத்தில் இழக்க வேண்டாம்.

image credit : தி இந்து

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
English summary
son died in accident, mother got punishment. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X