1937-ல் வெளியான புகாட்டி டைப் 57எஸ்சி, 9.735 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது

Written By:

1937 ஆண்டில் வெளியான புகாட்டி டைப் 57எஸ்சி, சமீபத்தில் நடந்த ஏலத்தில், 9.7 மில்லியன் டாலர் விலைக்கு ஏலம் போனது.

இப்படி அசாதாரன விலைக்கு ஏலம் போன புகாட்டி டைப் 57எஸ்சி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

9.735 மில்லியன் டாலர்...

9.735 மில்லியன் டாலர்...

1937 ஆண்டில் வெளியான புகாட்டி டைப் 57எஸ்சி, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள அமேலியா தீவில் இருக்கும் பான்ஹேம்ஸ் ஆக்‌ஷன் நிறுவனத்தில் 9.735 மில்லியன் டாலர் மதிப்பில் ஏலத்தில் விற்கபட்டது.

இதன் பிரத்யேகமான கட்டுமானத்தை, இங்கிலாந்தை சேர்ந்த வேண்டன் ப்ளாஸ் என்ற கோச் கட்டுமான நிறுவனம் வடிவமைத்துள்ளனர்.

ஆரம்ப கால அமைப்பு;

ஆரம்ப கால அமைப்பு;

இந்த புகாட்டி டைப் 57எஸ்சி மாடலின் ஆரம்ப கால அமைப்பு, 57எஸ் என்ற முறையில், 57541 என்ற சேஸி எண் கொண்டு தான் துவங்கியது.

அதன் பின்னர், இந்த புகாட்டி டைப் 57எஸ் கார் வேண்டன் ப்ளாஸ் என்ற கோச் கட்டுமான நிறுவனத்திடம் மறுவடிவமைப்புக்கு அனுப்பபட்டது. இந்த வேண்டன் ப்ளாஸ் நிறுவனம், இந்த காருக்கு 3595 என்ற சேஸி எண் கொண்ட 4-ஸீட்கள் கொண்ட டூரிங் ரோட்ஸ்ர் பாடியை வழங்கினர்.

டிசைன்;

டிசைன்;

புகாட்டி டைப் 57எஸ்சி பிரட்டன் நாட்டின் வழக்கமான கிளாசிக் கார் ஸ்டைல் கொண்டுள்ளது. இது கட்-டவுன் ஸ்டைலில் ஆன கதவுகள் உடையதாக உள்ளது.

இந்த வகையில், இது தற்போது உள்ள பிற புகாட்டியின் 57 மாடல்களை காட்டிலும் வேறுபட்டு காணப்படுகிறது.

பரிமாற்றம்;

பரிமாற்றம்;

இந்த புகாட்டி டைப் 57எஸ்சி காருக்கு, 1985-ஆம் ஆண்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, 57எஸ் மாடலாக இருந்த இந்த காரை, 57எஸ்சி மாடலாக மாற்றும் வகையில், இதற்கு ஒரிஜினல் 57எஸ்சி மாடலில் காணப்பட்ட ரூட்ஸ் டைப் சூப்பர்சார்ஜர்கள் பொருத்தபட்டது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

1937 ஆண்டில் வெளியான புகாட்டி டைப் 57எஸ்சி, 3,257 சிசி சூப்பர்சார்ஜ்ட் ஸ்ட்ரெய்ட் எயிட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது 200 பிஹெச்பியை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

புகாட்டி டைப் 57எஸ்சி காரின் இஞ்ஜின், 4-ஸ்பீட் மேனுவல் டிரான்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

இதன் மூலம் தான், பின் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

பிரேக்;

பிரேக்;

புகாட்டி டைப் 57எஸ்சி காரின் 4 சக்கரங்களையும் நிறுத்துவதற்கு முழுமையான ஹைட்ராலிக் டிரம் பிரேக்குகள் உபயோகிக்கபடுகிறது.

சஸ்பென்ஷன்;

சஸ்பென்ஷன்;

புகாட்டி டைப் 57எஸ்சி காரின் சஸ்பென்ஷனுக்கு தாழ்ந்த ஸ்லங் லீஃப் ஸ்ப்ரிங்குகள் பயன்படுத்தபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

2014ம் ஆண்டில் 9 ஃபெராரி கார்கள் 900 கோடிக்கு ஏலம் விடப்பட்டு சாதனை!

பிரிட்டன் புதிய இளவரசி கேத் மிடில்டன் பழைய கார் ஏலம்

ஏலம் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
A Bugatti Type 57SC car made in 1937 was sold for whopping $9.735 Million at an Auction held by Bonhams auction at Amelia Island in Florida. This Bugatti Type 57SC has unique body work, which was done by British coach builders Vanden Plas. This Bugatti started its life as a Type 57S with chassis no. 57541. To know more about this Bugatti Type 57SC, check here...
Story first published: Thursday, March 17, 2016, 13:06 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark