Just In
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 12 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வியக்கத்தக்க உலக செல்வந்தர்களின் எளிமை வாழ்க்கை: என்னவென்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்!
உலக முன்னனி செல்வந்தர்களில் பலர் தற்போதுவரை எளிமையான காரர்களையே பயப்படுத்தி வருகின்றனர். அவர்கள் யார்? எந்த கார்களை அவர்கள் பயன்படுத்திகிறார்கள் என இந்த செய்தியில் காணலாம்.

உலக முன்னனி செல்வந்தர்களில் பலர் தற்போதுவரை எளிமையான காரர்களையே பயப்படுத்தி வருகின்றனர். அவர்கள் யார்? எந்த கார்களை அவர்கள் பயன்படுத்திகிறார்கள் என இந்த செய்தியில் காணலாம்.

உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ் சமீபத்தில் போர்ஷே 911 சூப்பர்காரினை வாங்கி அதில் பயணித்து வருகிறார். இதுபோல விர்ஜின் நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் நவீன கிபன்ஸ் அக்வாடா காரினை வாங்கி அதனை பயன்படுத்தி வருகிறார். இவர்களை போன்று சொகுசு கார்களில் பயணம் செய்யும் செல்வந்தர்கள் மத்தியில் எளிமையான கார்களில் பயணம் செய்யும் செல்வந்தர்கள் சிலரும் உள்ளனர்.

ஆலிஸ் வால்டன்:
உலக சில்லறை வியாபார சந்தையின் ஜாம்பவானாக வால்மார்ட் நிறுவன தலைவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2017ம் ஆண்டு லா'ஓரியேல் நிறுவனத்தின் நிறுவனர் லில்லியன் பெட்டென்கூர் இறந்தபின்னர், உலகில் பணக்கார பெண் என்ற அந்தஸ்தினை ஆலிஸ் வால்டன் பெற்றார்.

இவர் 40,000 டாலர்கள் மதிப்பு கொண்ட போர்டு 2006ம் ஆண்டு மாடலான 2006 ஃபோர்டு F-150 கிங் ராஞ்ச் என்ற டிரக் காரினை பயன்படுத்தி வருகிறார். இவரது தந்தை மற்றும் வால்மார்ட் நிறுவனத்தின் நிறுவனருமான சாம் வால்டன் 1976ம் ஆண்டு மாடலான ஃபோர்டு F-150 காரினை அவர் இறக்கும் வரை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீவ் பால்மர்:
அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸ் க்ளிப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்தான் ஸ்டீவ் பால்மர். கடந்த 2014ம் ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓவாக இருந்தவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதல் பணியாளர் இவர் தான். பில்கேட்ஸ் இவரை பிஸ்னஸ் மேனஜராக நியமித்தார்.

இவரிடம் ஃபோர்டு நிறுவனத்தின் பியூஷன் என்ற கார் உள்ளது. நவீன இன்போடெயிண்மென்ட் உடன் வெளியாகும் 10 லட்சமாவது கார் என ஃபோர்டு நிறுவனம் இந்த காரினை ஸ்டீவ் பால்மருக்கு பரிசாக அளித்தது. ஸ்டீவ் பால்மரின் தந்தை ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக பதவியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கர் காம்ப்ரட்:
ஸ்விடன் நாட்டின் புகழ்பெற்ற ஐகேஇஎ என்ற ஃபர்னிட்ச்சர் நிறுவனத்தின் நிறுவனரான இங்கர் காம்ப்ரட் தேவையற்ற செலவுகளில் நாட்டம் இல்லாதவர். அவர் ஆடம்பர பொருட்களை எதையும் பயன்படுத்தாமல் எளிமையாக இருந்து வருகிறார். இவர் கடந்த 1992ம் ஆண்டின் மாடலான வால்வோ 240 ஜி.எல் காரினை பயன்படுத்தி வந்தார்.

91 வயதாக இங்கர் காம்ப்ரட் 26 வருடங்கள் பழையமான கார் பயன்படுத்துவது. ஆபத்து என பலர் கூறியதால் 22,000 டாலருக்கு வாங்கிய காரினை 1000 டாலருக்கு விற்பனை செய்துள்ளார். உலகின் சொகுசு கார்கள் அனைத்தையும் ஒன்றாக வாங்கும் அளவிற்கு வசதி கொண்ட இங்கர் காம்ப்ரட் 26 வருடங்களாக ஒரே காரினை ஒட்டியது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

மார்க் ஸூக்கர்பேர்க்:
உலக மக்களுக்கு அறிமுகமே தேவை இல்லாத சமூகவலைதள சக்கரவர்த்தி மார்க் ஸூக்கர்பேர்க். பேஸ்புக் என்ற ஒற்றை தயாரிப்பில் உலக மக்களை தான் வசம் கொண்டுவந்தார் ஸூக்கர்பேர்க். பேஸ்புக் மூலம் சமூகவலைதள நிறுவனங்களை கதிகலங்க வைத்த இவர் பின்னர் போட்டி நிறுவனங்களான வாட்ஸப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை வாங்கினார். இதன்மூலம் சமூகவலைதள சக்கரவர்த்தியாக உருவெடுத்துள்ளார்.

சமூகவலைதள சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வரும் 34 வயதானாக மார்க் ஸூக்கர்பேர்க் கோடி கோடியாக சொத்து மதிப்பு இருந்தும் எளிமையாக ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் காரில்தான் பயணம் செய்கிறார். ஆடம்பர உடையை கூட விரும்பாத மார்க் ஸூக்கர்பேர்க் எளிமையான காரிலும் பயணம் செய்வது அவர் மேல் கூடுதல் மரியாதையை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

வாரன் பஃப்பேட்:
அமெரிக்காவின் பிரிக்ஷிர் ஹாத்தவே என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் வாரன் பஃப்பேட். உலகின் மூன்றாவது பெரிய செல்வந்தர் பட்டியலில் இவர் 3வது இடத்தில் உள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள நடுத்தர குடும்பத்தினரிடையே பெரிதும் புகழ்பெற்ற காடிலாக் எக்ஸ்டிஎஸ் காரின் 2014ம் ஆண்டு மாடலினை பயன்படுத்தி வருகிறார்.

இவர் காடிலாக் எக்ஸ்டிஎஸ் காரின் 2004ம் ஆண்டு மாடலினை பயன்படுத்தி வந்தார் ஆனால் இவரது மகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக மேம்படுத்தப்பட்ட காடிலாக் எக்ஸ்டிஎஸ் காரினை வாங்கியுள்ளார். உலகின் 3வது பணக்காரர் நடுத்தர காரினை மாற்ற யோசித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.