உலகின் விந்தைகள் நிறைந்த சாலைகள் - சிறப்பு தொகுப்பு

சமதள சாலைகள், மலைப்பாங்கான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள் போன்றவை நமக்கு பரிட்சயம். ஆனால், உலகின் சில சாலைகள் வித்தியாசமும், விசித்திரமும் நிறைந்ததாக இருக்கின்றன. வண்டியை எடுத்தோமா, போக வேண்டிய இடத்துக்கு நேரத்துக்கு போய் சேர்ந்தோமா என்றிருக்கும் நமக்கு இந்த சாலைகள் நிச்சயம் புதுமையாகவே தோன்றும்.

அதிலும், படத்தில் காணும் சில சாலைகள் புதுமையான அனுபவத்தையும், சில சாலைகள் த்ரில்லை தரும் விதத்திலும் இருக்கின்றன. அதுபோன்று, ஆயுளில் ஒருமுறையாவது இந்த சாலையில் செல்ல வேண்டும் என்று தோன்ற வைக்கும் சில சாலைகளின் படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சாலையின் குறுக்கே விமான ஓடுதளம்

சாலையின் குறுக்கே விமான ஓடுதளம்

ரயில் வரும்போது கேட் போடுவது போல ஸ்பெயினில் இருக்கும் இந்த சாலையின் குறுக்கே விமான ஓடுதளம் இருக்கிறது. எனவே, விமானங்கள் ஏறும்போதும், இறங்கும்போதும் 10 நிமிடங்கள் கேட் போட்டு விடுகின்றனர். விமானம் ஒன்று கடக்கும்போது சிக்னலில் காத்து கிடக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

ஆளை விழுங்கும் சாலை

ஆளை விழுங்கும் சாலை

மழை நேரத்தில் சாலை ஓரத்தில் சேறு இருந்தாலே நாம் வண்டியை முன்கூட்டியே நிறுத்தி கடப்பது வழக்கம். ஆனால், ரஷ்யாவில் ஓடும் லேனா ஆற்றின் கிழக்கு கரை ஓரத்தை ஒட்டி செல்லும் இந்த நெடுஞ்சாலையில் மழை பெய்து விட்டால் அவ்வளவுதான். அந்த சாலையில் ஆளை விழுங்கும் அளவுக்கு சேறாக மாறிவிடும். . 800 மைல் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் ஒரு முறை சென்று வருவதே நரகத்துக்கு சென்று திரும்புவது போலத்தான். ஆனால், குளிர்காலத்தில் வெப்பநிலை -40 டிகிரியாக இருக்கும்போது இந்த சாலையில் மண் கெட்டியாகி பயன்பாட்டுக்கு சிறந்ததாக மாறிவிடும். மணிக்கு 70 கிமீ வேகத்தில் பயணம் செய்யலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். திடீரென வந்த மழையால் சேறாகி கிடக்கும் சாலையில் தத்தளிக்கும் வாகனங்களை படத்தில் காணலாம்.

பாகிஸ்தான்-சீனாவின் உறவுப் பாலம்

பாகிஸ்தான்-சீனாவின் உறவுப் பாலம்

தரைவழியாக இரு நாடுகளையும் இணைக்க ஒரு வழியை தேடின பாகிஸ்தானும், சீனாவும். அப்போது அவர்களுக்கு கிடைத்த வழிதான் காரகோரம் தொடர்ச்சி மலைகள். உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்த சர்வதேச சாலை இதுதான். 15,500 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த சாலையில் ஆக்சிஜன் அளவு மிக குறைவு என்பதுடன், தீவிரவாதிகளின் நடமாட்டமும் அதிகம். பனி சிறுத்தைகளின் அட்டகாசமும் அதிகம்.

குகைச் சாலை

குகைச் சாலை

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கிய குகை வழிச்சாலையைத்தான் படத்தில் காண்கிறீர்கள். 1977ம் ஆண்டு மலையை குடைந்து அருகிலுள்ள முக்கிய நகரத்துடன் தங்கள் கிராமத்தை இணைக்கும் வகையில் இந்த குகை வழிச்சாலையை அமைத்தனர். இந்த சாலையை அமைக்கும்போது ஏராளமான கிராமவாசிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உலகின் ஆபத்தான சாலைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

கட்டிடத்திற்குள் செல்லும் சாலை

கட்டிடத்திற்குள் செல்லும் சாலை

ஜப்பானிலுள்ள ஒசாகா நகரத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் சாலையைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். ஒசாகா நகர் வளர்ச்சி குழுமம் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிட்டபோது வழியில் இந்த பிரம்மாண்ட கட்டிடம் இருந்தது. கேட் டவர் இந்த கட்டிடத்தை இடிக்க அதன் உரிமையாளர் மறுத்துவிட்டார். எனவே, கட்டிடத்தின் உள் பகுதி வழியாக சாலையை அமைத்துவிட்டனர்.

 கடலுக்குள் புகுந்த பாலம்

கடலுக்குள் புகுந்த பாலம்

தரையில் அமைக்கப்பட்ட சாலைகளை இதுவரை பார்த்தீர்கள். இப்போது அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் இருக்கும் கடல்வழிப் பாலத்தைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா. 12 மைல் நீளத்திற்கு கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பாலத்தின் இடையில் 2 மைல் நீளம் கடலுக்குள் சுரங்கம் அமைத்து அமைக்கப்பட்டிருக்கிறது. ஏன் தெரியுமா?. கடலில் பாலம் கட்டுவதற்கு அமெரிக்க கடற்படை எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பாலத்தை அமைத்தால் தங்களது கடற்படை கப்பல்கள் செல்ல இயலாது என முட்டுக்கட்டை போட்டனர். இதையடுத்து, 2 மைல் நீளத்திற்கு கடலுக்குள் சுரங்கப் பாதையாக அமைக்கப்பட்டது.

Trending On DriveSpark Tamil:

முன்னணி ஹீரோ சூர்யாவின் மோட்டார் உலகம்!

வியக்க வைக்கும் சுரங்கப் பாதைகளும், சுவாரஸ்யங்களும்...!!

ஹார்லி டேவிட்சன்.. தெரிந்த பிராண்டு, தெரியாத உண்மைகள்!

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

சரி, வரிசையாக சொன்ன எல்லா சாலைகளும் அயல்நாடுகளில் இருப்பதால் செல்வது பெரும்பாலானோருக்கு சாத்தியம் இல்லைதான். நம்மூரில் இதுபோன்றே வித்தியாசமான பாலங்கள் மற்றும் த்ரில் நிறைந்த சாலைகள் இல்லையா என்று கேட்பது புரிகிறது. ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில் பாலமும், அதையொட்டி வாகனங்கள் செல்வதற்கான பிரம்மாண்ட பாலமும் நம்மூரின் ஒண்டர்தான். ஆம், பாக் நீரிணையில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் 2.3 கிமீ நீளம் கொண்டது. மொத்தம் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த ரயில் பாலம் 1914ல் திறக்கப்பட்டது. உலகிலேயே அதிக துரு பிடிக்கும் இரண்டாமிடமான ராமேஸ்வரத்த்தில் 100 ஆண்டுகளை நெருங்கியும் இந்தரயில் பாலம் காலத்தை வென்று நிற்கிறது. இதற்கு அருகே அமைந்திருக்கும் தரைவழி இணைப்புப் பாலம் 1988ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கப்பட்டது.

 மணாலி டூ லே

மணாலி டூ லே

உலகின் மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றுதான் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை. சவால் நிறைந்த பயண விரும்பிகளுக்கு ஏற்ற இந்த சாலை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மத்தியில் இருந்து அக்டோபர் மாதம் வரை குறிப்பிட்ட காலம் மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது இந்த சாலை.

கிரேட் ரான் கட்ச்

கிரேட் ரான் கட்ச்

முடிவில்லா தொலைவுடன் வெள்ளை மணலில் பரந்து விரிந்து கிடக்கும் கிரேட் ரான் கட்ச் பாலைவனத்தில் பைக் ரைடிங் செல்லும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தோலாவிராவிற்கு செல்லும்சாலையை பிடித்தால் புதுமையான அதேசமயம் திரில்லான அனுபவத்துக்கு கியாரண்டி. குறிப்பிட்ட தூரம் சென்று 360 கோணத்தில் பார்த்தால் வெறும் வெள்ளை மணலே தெரியும். திக்கு தெரியா தேசத்தில் ஓர் பயணம் என்ற தலைப்பில் ஒரு அனுபவத் தொடரை எழுதலாம். டிசம்பர்-ஜனவரியில் செல்வது சிறந்தது.

செலா கணவாய்

செலா கணவாய்

அருணாச்சல பிரதேச மாநிலம், செலா கணவாய் சாலை உலகின் இரண்டாவது மிகப்பெரிய உயரமான சாலை. கடல் மட்டத்திலிருந்து 13,800 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த சாலை தவாங் பகுதியை நாட்டின் பிற பகுதியுடன் இணைக்கிறது.

வயநாடு-ஊட்டி

வயநாடு-ஊட்டி

பச்சை கம்பளம் விரிக்கப்பட்ட பச்சை பசேலன இருக்கும் மலைகளுக்கு இடையில் பதுங்கி செல்லும் வயநாடு-ஊட்டி சாலையில் டிரைவிங் செய்வது ஒரு த்ரில்லான அனுபவமாக இருக்கும். அக்டோபர் முதல் மே வரையிலான காலத்தில் செல்வது சிறந்தது.

Trending On DriveSpark Tamil:

முன்னணி ஹீரோ சூர்யாவின் மோட்டார் உலகம்!

வியக்க வைக்கும் சுரங்கப் பாதைகளும், சுவாரஸ்யங்களும்...!!

ஹார்லி டேவிட்சன்.. தெரிந்த பிராண்டு, தெரியாத உண்மைகள்!

Most Read Articles

Tamil
English summary
Here are certain roads that are so extreme that any car or bike fan would miss not driving through them. While some are beautiful and fun to drive, some are outright dangerous. Buckle up your seat belts and get ready to witness six insane roads that you must drive before you die.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more