விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் என்ற பகுதயில் இன்று அதிகாலை இன்னோவா கார் ஒன்றும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர்.

By Balasubramanian

இந்த விபத்தில் பலியான 7 பேரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள், இவர்கள் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தவர்கள். விபத்தில் சிக்கிய லாரி திருச்சியில் இருந்து தென்காசிக்கு சரக்கு ஏற்றி சென்று கொண்டிருந்தது.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

இந்த விபத்து அதிகாலை வேலையில் ஊருக்கு வெளியில் நடந்ததால் இந்த விபத்தை யாரும் நேரில் பார்க்கவில்லை, விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் அனைவரும் பலியாகிவிட்டனர். லாரி டிரைவர் என்ன ஆனார் என்ற தகவல்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்று யாருக்கும் தெரியாது.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

ஆனால் விபத்தில் சக்கிய வாகனங்களில் நிலையை வைத்து நாம் விபத்து எப்படிநிகழ்ந்தது என்று ஒரளவிற்கு கணிக்கலாம். விபத்து நிகழ்ந்தது அதிக பலம் வாய்ந்த லாரிக்கும் ,காருக்கும் என்பதால் காருக்கு தான் அதிக பாதிப்புள்ளது.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

விபத்திற்குளான லாரி மற்றும் காரின் போஷிஷன்களை பார்க்கும் போது கார் ரோட்டின் ராங் சைடில் உள்ளது. ஆக இந்த விபத்து இன்னோவா கார் ஏதேனும் ஒரு வாகனத்தை ஓவர் டேக் செய்யும் போது நிகழ்த்திருக்கலாம். அல்லது அதிகாலை நேரம் என்பதால் காரின் டிரைவர் சற்று அசதியில் ரோட்டின் ராங் சைடில் சென்று இருக்கலாம்.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

விபத்திற்குளான இனோவா காரில் முன் பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது காரின் வேகம் சுமார் 100-150 கி.மீ., வேகம் வரை இருக்கும் என கூறலாம். அதை விட அதிக வேகத்தில் சென்றிருந்தாலும் அச்சரிபயப்படுவதற்கில்லை.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

கார் லாரியுடன் மோதியதில் லாரியின் ரேடியேட்டர் பகுதி சேதமடைந்து லாரியில் இருந்த கூலண்ட் முழுவதும் வெளியேறியுள்ளது. மேலும் லாரியின் முன் பக்க இரண்டு டயர்களும் முற்றிலும் சேதமாகியுள்ளன.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

இந்த விபத்தை கார் ஓட்டுநரே தவிர்த்திருக்க முடியும், பொதுவாக இரவு நேரங்களில் வேகமாக ஓட்டுவது நல்லதல்ல, அதுவும் அதிகாலை நேரங்களில் தூக்கம் அதிகமாக இருக்கும் அந்த நேரங்களில் கார் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், அல்லது குறைந்த வேகத்தில் காரை ஓட்ட வேண்டும்.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

நடந்த இடம் நான்கு வழிச்சாலையில்லை அதே நேரத்தில் காரின் வேகமும் அதிகமாக இருந்துள்ளது. இந்த ரோட்டில் எதிரில் வாகனம் வரும் என்று தெரிந்தே வேகமாக செல்வது என்பது தவறான செயலாகும். இதை இந்த காரின் டிரைவர் கையாண்டது தான் விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

இனோவா கார்களின் என்ட்ரி லெவல் வேரியன்டில் கூட டிரைவருக்கான ஏர் பேக் இருக்கிறது. டாப் வேரின்டில் இரண்டு எஸ்ஆர்எஸ் ஏர் பேக்குகள் இருக்கிறது. இது எந்த வேரியண்டாக இருந்தாலும் ஏர் பேக் இருந்திருக்கும். ஆனால் காருக்கு பலத்த சேதம் இருப்பதால் ஏர்பேக்கும் வெடித்திருக்ககூடும். இதனால் எந்த பலனுமில்லை.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

இந்த விபத்தை வைத்து இனோவாவின் பாடிபில்டை நாம் கணிக்கிடமுடிகிறது. பலர் இனோவா மிக பாதுகாப்பானது என கருதுகின்றனர். அந்த காரின் டிசைனை பார்க்கும் போது அந்த எண்ணம் நமக்கு தோண்றுகிறது. ஆனால் இந்த விபத்தை பார்த்தவுடன் இனோவாவின் பாடிபில்டின் உண்மை நிலை நமக்கு தெரியும்.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

அதே போல் கடந்த வாரம் ஹரியானாவில் டாடா நெக்ஸான் கார் விபத்திற்குள்ளானது. இந்த கார் ரோட்டில் 2-3 முறை உருண்டும் காருக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. காரில் இருந்தவர் சிறு கீறல் கூட இல்லாமல் உயர்தப்பினார். இந்த வகையில் டாடா நெக்ஸானை விட இனோவா காரின் பாடிபில்ட் மோசம் தான்.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

இந்த விபத்து முழுக்க முழுக்க டிரைவரின் கவனக்குறைவாலயே நடந்துள்ளது. முதல் தவறு நான்கு வழிச்சாலை இல்லாத பகுதியில் அதிக வேகத்தில் சென்றது. இரண்டாவது உடலில் அசதி இருந்தாலும் ஓய்வு எடுக்காமல் கஷ்டப்பட்டு காரை ஓட்டியது. மூன்றாவது குறுகலான ரோட்டில் ஓவர் டேக் செய்ய முயற்சித்தது.

விருதுநகரில் 7 பேர் பலியான விபத்து; எப்படி தவிர்த்து இருக்கலாம்?

இனி நீங்கள் காரில் செல்லும் போது இந்த தவறை செய்யாதீர்கள், முக்கியமாக இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் அதிக வேகத்தில் காரில் செல்லுவது, நான்கு வழிச்சாலை இல்லாத பகுதியில் 100கி.மீ., வேகத்திற்கு அதிகமாக செல்லுவது, போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ளுங்கள், முடிந்தால் இரவு நேர பயணத்தையே தவிற்க்க பாருங்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

Most Read Articles
English summary
7 including 2 women killed in a road accident at devadanam near rajapalayam. Read in Tamil
Story first published: Saturday, April 7, 2018, 14:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X