வாழ்க்கையில் ஒருமுறையாவது பறந்து பார்க்க வேண்டிய விமானங்கள்!

Written By:

போக்குவரத்து சாதன வடிவமைப்பு வரலாற்றிலேயே மிக உன்னதமான தயாரிப்பாக விமானங்களை கூறுகிறோம். சில பேர்களுடன் பறக்க துவங்கிய விமானங்கள் இன்று 600 பேர் வரை சுமந்து பறக்கும் வல்லமையுடன் பறக்கின்றன.

விமானத் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி நினைத்து பார்க்க முடியாத, மிக அசாத்தியமான இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வாழ்வில் ஒருமுறையாவது பறந்து பார்த்துவிட வேண்டிய விமான மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

போயிங் 737

போயிங் 737

அடிக்கடி விமான பயணங்களை மேற்கொள்வோருக்கு இந்த விமான மாடல் பரிட்சயமானதாக இருக்கும். போயிங் நிறுவனத்தின் மிக வெற்றிகரமான தயாரிப்பாக கூறலாம். கடந்த 1967ம் ஆண்டு உற்பத்தி துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை 9,000 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் போன்று அவ்வப்போது புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் நவீன மாடல் மேக்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

 வாழ்க்கையில் ஒருமுறையாவது பறந்து பார்க்க வேண்டிய விமானங்கள்!

போயிங் 737 மேக்ஸ் மாடலில் இரண்டு சிஎஃப்எம் இன்டர்நேஷனல் லீப்-1பி எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 138 முதல் 180 பேர் வரை செல்லக்கூடிய இருக்கை வசதியுடன் கிடைக்கிறது. மணிக்கு 838 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 7,084 கிமீ தூரம் பறந்து செல்லும். நடுத்தர தூர வழித்தடங்களில் மிக அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. தொழில்நுட்ப அளவில் சிறந்த இந்த விமானத்தில் பறந்து செல்வது உன்னதமான அனுபவத்தை கொடுக்கும்.

ஏர்பஸ் ஏ320

ஏர்பஸ் ஏ320

போயிங் 737 விமானத்திற்கு நேரடி போட்டியாக கூறலாம். 1987ல் முதல்முறையாக பறக்கவிடப்பட்ட இந்த விமானமானது, போயிங் 737 மாடலைவிட மிக நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வந்தது. ஃப்ளை பை ஒயர் கட்டுப்பாட்டு அமைப்பு கொண்டதாக வந்ததும் இதன் மீதான ஈர்ப்பு மிக அதிகமாக இருந்தது. இந்த விமான வரிசையில் ஏ318, ஏ319 மற்றும் ஏ321 உள்ளிட்ட பல விமான மாடல்கள் இருக்கை வசதியை பொறுத்து விற்பனையில் உள்ளன. இதன் வரிசையி்ல ஏ320 நியோ என்ற நவீன மாடலுக்கான டெலிவிரி சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.

 வாழ்க்கையில் ஒருமுறையாவது பறந்து பார்க்க வேண்டிய விமானங்கள்!

நடுத்தர தூர வழித்தடங்களில் பயன்படுத்தப்படும் இந்த விமானமானது, பயணிகளுக்கு மிக சிறப்பான பயணத்தை வழங்குகிறது. மிக குறைவான சப்தம், சிறந்த காற்று சுத்திகரிப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. இன்டிகோ நிறுவனம் 150 நியோ மாடல்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது. இந்த விமானத்தின் செயல்பாட்டை பார்த்து தற்போது கூடுதலாக 30 விமானங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த விமானம் மணிக்கு 871 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 7,800 கிமீ தூரம் வரை பறந்து செல்லும்.

போயிங் 747

போயிங் 747

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பெரும் தலைவர்களுக்கான விசேஷ கட்டமைப்புடன் பயன்படுத்தப்படும் மாடலும் இதுவே. வணிக ரீதியில் பெரிய அளவிலான வெற்றியை பெறவில்லை இந்த விமானம். காரணம், 4 எஞ்சின்கள் கொண்ட இந்த விமானம் அதிக எரிபொருளை உறிஞ்சித் தள்ளுவதுதான். லூஃப்தான்ஸா, பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. மொத்தம் 1,968 விமானங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

 வாழ்க்கையில் ஒருமுறையாவது பறந்து பார்க்க வேண்டிய விமானங்கள்!

இந்த விமானத்தில் அதிகபட்சமாக 660 பேர் வரை பயணிக்கலாம். மணிக்கு 933 கிமீ வேகம் வரை பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 14,300 கிமீ தூரம் பறக்கும். மிக பிரம்மாண்டமான இந்த விமானத்தில் பறப்பது மிக சிறப்பான அனுபவத்தை வழங்கும். விபத்தில்லா பயணம் என்ற நிம்மதியுடன் அந்த அனுபவம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

ஏர்பஸ் ஏ340

ஏர்பஸ் ஏ340

விபத்தில்லா சேவையை வழங்கும் உலகின் மிக பாதுகாப்பான விமான மாடல்களில் ஒன்று. இந்த விமான மாடலானது 260 பேர் முதல் 350 பேர் வரை பயணிக்கும் வசதி கொண்டதாக கிடைக்கிறது. நீண்ட தூர வழித்தடங்களில் பயன்படுத்தப்படுவதோடு, மிக நீண்ட தூர வழித்தடங்களுக்காக விசேஷ மாடலும் தயாரிக்கப்படுகிறது. சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகரை எட்டிப்பிடிப்பதற்காக ஏர்பஸ் ஏ340-500 மாடல் பயன்படுத்தப்பட்டது.

 வாழ்க்கையில் ஒருமுறையாவது பறந்து பார்க்க வேண்டிய விமானங்கள்!

இந்த விமானத்தில் நான்கு எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அதிக எரிபொருள் உறிஞ்சும் விமானம் என்ற முத்திரையை பெற்றதால், தற்போது ஏர்பஸ் 330 மற்றும் போயிங் 777 விமானங்கள் அந்த இடத்தை பிடித்துக் கொண்டு விட்டன. இருப்பினும், இன்னமும் 200 விமானங்கள் உலக அளவில் பயன்பாட்டில் உள்ளன. பயணிகளுக்கு சொகுசான பயணத்தை இந்த விமானங்கள் வழங்கி வருகின்றன. மணிக்கு 914 கிமீ வேகத்தில் பறக்கும். அதிகபட்சமாக 14,400 கிமீ தூரம் பயணிக்கும். கடந்த 2011ம் ஆண்டில் இந்த விமானத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

பம்பார்டியர் சிஆர்ஜே

பம்பார்டியர் சிஆர்ஜே

பல வெளிநாடுகளில் பிராந்திய அளவிலான போக்குவரத்தில் இந்த விமானம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. 50 பேர் முதல் 100 பேர் வரை செல்லும் இருக்கை வசதி கொண்ட மாடல்களில் கிடைக்கிறது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரவலான பயன்பாட்டில் இருக்கின்றன.

 வாழ்க்கையில் ஒருமுறையாவது பறந்து பார்க்க வேண்டிய விமானங்கள்!

சொகுசான பயணத்தை வழங்குவதில் பம்பார்டியர் விமானங்கள் பெயர் பெற்றவை. அந்த வகையில், இந்த விமானம் குறைந்த தூர வழித்தடங்களுக்கு ஏற்ற சொகுசான வகை விமானமாக இருக்கிறது. ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பினால் 2,656 கிமீ தூரம் பறந்து செல்லும். மணிக்கு 876 கிமீ வேகம் வரை பறக்கும்.

போயிங் 777

போயிங் 777

உலகின் மிக பெரிய டர்போஃபேன் எஞ்சின்கள் பொருத்தப்பட்ட அகலமான உடல்கூடு வகையை சேர்ந்த விமான மாடல். நீண்ட தூர வழித்தடங்களில் இந்த விமானம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நீண்ட தூர வழித்தடங்களில் பயன்பாட்டில் இருந்த 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விமானங்களை ஓரங்கட்டி விற்பனையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. டெல்லியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இயக்கப்பட்ட உலகின் இடைநில்லா மிக நீண்ட தூர வழித்தடத்தில் இந்த விமானத்தையே ஏர் இந்தியா பயன்படுத்தியது.

 வாழ்க்கையில் ஒருமுறையாவது பறந்து பார்க்க வேண்டிய விமானங்கள்!

பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஏர் பிரான்ஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் இந்த விமானத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றன. இதன் நவீன வகை மாடலாக போயிங் 777எக்ஸ் என்ற மாடலும் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. முழுவதும் மின்னணு கட்டுப்பாட்டு அம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த விமானம் மணிக்கு 914 கிமீ வேகத்தில் பறந்து செல்லும் திறன் வாய்ந்தது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 15,840 கிமீ தூரம் வரை பறக்கும்.

ஏர்பஸ் ஏ380

ஏர்பஸ் ஏ380

விமான பொறியியல் துறையின் அதிசயங்களில் ஒன்றாக இந்த விமானத்தை கூறலாம். இரண்டடுக்கு தளங்களை கொண்ட இந்த விமானத்தை ஒரு பிரம்மாண்டமான திருமண மண்டப்பத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். அந்தளவு பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்த விமானத்தில் மூன்றாம் வகுப்பு இருக்கைகள் மட்டும் அமைக்கப்பட்டால், 800 பேர் வரை செல்ல முடியும். ஆனால், 450 முதல் 600 பேர் வரை பயணிப்பதற்கான இருக்கை வசதியுடன் கிடைக்கிறது.

 வாழ்க்கையில் ஒருமுறையாவது பறந்து பார்க்க வேண்டிய விமானங்கள்!

மிக நீண்ட தூர வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியில் இயக்கப்படும் விமானங்களில் மிக சொகுசான, பாதுகாப்பான விமான மாடலாக இருக்கிறது. ஆனாலும், விற்பனையில் வெற்றிகரமான மாடலாக கூற இயலாத நிலை இருக்கிறது. இந்த விமானத்தில் 4 எஞ்சின்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 15,200 கிமீ தூரம் வரை செல்லும். மணிக்கு 903 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் படங்கள்!

மிரட்டும் தோற்றத்துடன் அசத்தும் புதிய கேடிஎம் ட்யூக் 125 பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

English summary
Some Passenger Plane Models Every aviation Fan Should Fly

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark