இந்த காருக்கு ஃபேஸ்புக்கில் ஒரு 'லைக்' போடுங்களேன்!!

By Saravana
Volkswagen Karmann Ghia
சமூக வலைதளங்களில் செயல்பாடுகளை பொறுத்து ஓடும் கார் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த எஞ்சினியர்கள் உருவாக்கியுள்ளனர்.

சமூக வலைதளங்களின் ஆதிக்கம் உலகின் மூலை முடுக்குளிலெல்லாம் நீக்கமற நிறைந்துவிட்டது. இதனை பயன்படுத்திக் கொண்டு, சமூக வலைதளங்களின் செயல்பாடுகளை எரிபொருள் போன்று பயன்படுத்தி ஓடும் வகையிலான பேட்டரி கார் ஒன்றை அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மைன்ட்டிரைவ் டிசைன் மற்றும் எஞ்சினியரிங் என்ற அமைப்பை சேர்ந்த நிபுணர் குழு வடிவமைத்துள்ளது.

ஃபேஸ்புக்கில் பெறும் விருப்பங்கள், பரிமாற்றங்களின் அளவுக்கு ஏற்றபடியும், டிவிட்டரில் ட்வீட் செய்யப்படும் எண்ணிக்கையை பொறுத்தும் இந்த கார் ஓடும். யாரும் ட்வீட் செய்யாவிட்டாலும், லைக் போடாவிட்டாலும் இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டார் இயங்காது. கார் அப்படியே நின்று கொள்ளும்.

இதற்காக, காரில் பிரத்யேக சாதனம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. 1967ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் கார்மன் கியா காரில்தான் இந்த சாதனத்தை பொருத்தி புதுமையான இந்த முயற்சிக்கு பயன்படுத்தியுள்ளனர். கான்சாஸ் நகரிலிருந்து, வாஷிங்டன் டிசி வரை இதேபோன்று, சமூக வலைதளங்களின் செயல்பாடுகளை பொறுத்தே இந்த கார் ஓடும்.

சோஷியல் ஃபியூவல் டூர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் மூலம், பிரச்னைகளுக்குரிய இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வேலைவாய்ப்பை எளிதாக பெறுவதற்கு உதவும் வகையிலும் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக இந்த காரை உருவாக்கியிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
English summary
The engineering and design team behind the project developed a device that monitors social media activity in order to keep the car running. 
Story first published: Friday, June 7, 2013, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X