டிரையம்ஃப் போனிவில் பைக்கை கஸ்டமைஸ் செய்து வாங்கிய நடிகர் துல்கர் சல்மான்!

Written By:

மலையாள திரை உலகின் மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் டிரையம்ஃப் போனிவில் பைக்கை கஸ்டமைஸ் செய்து டெலிவிரி பெற்றிருக்கிறார். கடந்த மாதம் டெலிவிரி பெற்ற அந்த பைக்கை தனது விருப்பத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்து டெலிவிரி பெற்றிருக்கிறார்.

தனது புது பைக்கின் பிரத்யேக படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி, தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார். துல்கர் சல்மானின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட டிரையம்ஃப் போனிவில் பைக்கையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

ஷோரூமின் கைவண்ணம்

ஷோரூமின் கைவண்ணம்

கொச்சியை சேர்ந்த ஷியாமாடைனமிக் டிரையம்ஃப் ஷோரூம் இந்த பைக்கை கஸ்டமைஸ் செய்து கொடுத்துள்ளது.

முக்கிய மாறுதல்

முக்கிய மாறுதல்

துல்கரின் கருப்பு நிற ட்ரையம்ஃப் போனிவில் பைக்கின் பெட்ரோல் டேங் கடல்நீற நிறத்தின் உஊடாக மூன்று மஞ்சள் கோடுகள் கொண்டதாக மாற்றப்பட்டிருக்கிறது.

அர்ப்பணம்

அர்ப்பணம்

துல்கர் தனது பைக்கின் பெட்ரோல் டேங்கில் மெக்குயின் என்ற வார்த்தையை எழுதியிருக்கிறார். மறைந்த அமெரிக்க நடிகரின் பெயரை எழுதியிருக்கிறார். இந்த கஸ்டமைஸ் பைக்கை அவருக்கு அர்ப்பணம் செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

நம்பர்

நம்பர்

பக்கவாட்டில் சைடு பேனல்களில் 28 என்ற எண்களை பயன்படுத்தியிருக்கிறார்.

இதர மாறுதல்கள்

இதர மாறுதல்கள்

ஹேட்லைட்டுக்கு கீழே நம்பர் பிளேட் மாற்றப்பட்டிருப்பதுடன், சிறிய அளவிலான மட்கார்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நம்பர் பிளேட்

நம்பர் பிளேட்

பின்புறத்திலான முக்கிய நம்பர் பிளேட், இடது பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது. அதவும் நேராக இல்லாமல் மேல் நோக்கி இருப்பதாக அமைந்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

ட்ரையம்ஃப் போனிவில் மாடலில் 60 எச்பி பவரையும், 61 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 863சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது.

விலை

விலை

ரூ.6.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் கிடைக்கிறது.

பைக் பிரியர்

பைக் பிரியர்

துல்கர் சல்மானை வாகன பிரியர். அவரிடம் பிஎம்டபிள்யூ எம்3, எம்5, மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி கார்களும், பிஎம்டபிள்யூ கே1200 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட உயர்வகை வாகனங்கள் அவரது கராஜை அலங்கரிக்கின்றன. சமீபத்தில் துபாய் சென்றிருந்த அவர் பிஎம்டபிள்யூ ஐ8 காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தார் என்பதும் வாகனங்கள் மீதான அவரது ஆர்வத்தை புலப்பட வைக்கிறது.

 

Source

English summary
Actor Dulqeur Salmaan gets a customized Triumph Bonneville Bike recently.
Story first published: Friday, February 19, 2016, 16:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark