Just In
- 15 min ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 1 hr ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 1 hr ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
- 2 hrs ago
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
Don't Miss!
- Movies
'சலிக்காம போட்டோ போஸ்ட் பண்றதுல நீங்க வேற லெவல்..' பிரபல நடிகையை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
- News
பரபரப்பு.. சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா பாதிப்பு.. சிறையிலிருந்து மருத்துவமனைக்கு ஷிப்ட்?
- Education
8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை!
- Lifestyle
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- Sports
ரவி சாஸ்திரி கிடக்காரு.. உங்க இஷ்டம் போல ஆடுங்க.. சிட்னி டெஸ்டில் தெறிக்கவிட்ட இளம் வீரர்!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசத்தலான தோற்றத்தில் அறிமுகமான மினி க்ளப்மேன் சம்மர் எடிசன் கார்- முதல்ஆளாக சொந்தமாக்கி கொண்ட நடிகர்
மினி நிறுவனத்தின் புதிய க்ளப்மேன் சம்மர் எடிசன் காரை மலையாள நடிகர் ஜெயசூர்யா சொந்தமாக்கியுள்ளார். இதுகுறித்த முழு விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த 2020ஆம் ஆண்டை இனி யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டீர்கள். ஏனெனில் கிட்டத்தட்ட இந்த வருடம் பார்க்காத பேரிடர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மக்களை பாடாய்படுத்தி வருகிறது.

ஆனால் மலையாள பட உலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் ஜெயசூர்யாவுக்கு அப்படி இல்லை போலும். திருவோணத்தையும், தனது பிறந்த நாளையும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் அவர் அதே மகிழ்ச்சியில் தற்போது மினி க்ளப்மேன் சம்மர் எடிசன் காருக்கு சொந்தகாரர் ஆகியுள்ளார்.

புதிய கார்களை வாங்கி குவிப்பதில் ஜெயசூர்யாவுக்கு சிறிய ஆர்வம் உண்டு. அந்த வகையில் அவரது குடும்பத்து உறுப்பினர்களுள் ஒருவராக மாறியுள்ள க்ளப்மேன் சம்மர் எடிசனை ஸ்பெஷல் எடிசனாக பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனமான மினி சமீபத்தில்தான் அறிமுகம் செய்திருந்தது.

வெறும் 15 மாதிரிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் இந்த ஸ்பெஷல் எடிசனில் ஒன்றை ஜெயசூர்யா சொந்தமாக்கியுள்ளார். கேரளாவில் இந்த காரை வாங்கும் முதல் ஆள் இவர் தான். தனக்கு சொந்தமான க்ளப்மேன் சம்மர் எடிசன் காரை அவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து பெற்று கொண்டுள்ளார்.

வழக்கமான க்ளப்மேன் மாடலில் இருந்து குறிப்பிடத்தக்க வகையிலான டிசைன் மற்றும் தொழிற்நுட்ப மாற்றங்களுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளதால், க்ளப்மேன்-ஐ காட்டிலும் மிகவும் ப்ரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது.

மெட்டாலிக் சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்படுகின்ற இந்த எடிசனில் புதிய டிசைனில் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஃபாக் விளக்குகள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்களை மினி நிறுவனம் பொருத்தியுள்ளது. அதேபோல் ஹெட்லேம்ப்களை சுற்றிலும் பியானோ கருப்பு நிறத்தை புதியதாக பார்க்கலாம்.

மாடிஃபை செய்யப்பட்ட க்ரில் உடன் இருக்கும் இந்த ஸ்பெஷல் எடிசனின் பின்புறத்தில் பிரிட்டிஷ் பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எல்இடி டெயில்லேம்ப்களில் பிரிட்டிஷ் நாட்டின் கொடியின் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் காரின் பின் கதவு திறப்பதையும் எளிமையாக்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் இதற்காக பின்புற பூட்டிற்கு கீழே ஒரு காலை நீண்டினாலே போதும் பின் கதவு திறந்துவிடும் சிஸ்டத்தை கொண்டுவந்துள்ளது.

வெளிப்புறத்தை போல் உட்புறத்திலும் சில மாற்றங்களை இந்த ஸ்பெஷல் எடிசன் ஏற்றுள்ளது. எல்இடி வளைவுடன் 6.5 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பனோராமிக் கண்ணாடி மேற்கூரை, பியானோ கருப்பு நிறத்தில் ஹைலைட்கள், சுற்றிலும் விளக்குகள், ப்ரோஜெக்ஷன் விளக்குகள் மற்றும் எலக்ட்ரிக் மூலமாக சரிசெய்யக்கூடிய இருக்கைகள் உள்ளிட்டவை இதன் கேபினில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களாகும்.

இவை எல்லாத்தையும் விட முக்கிய அம்சமாக கார்பன் கருப்பு நிற லெதரால் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் நினைவக செயல்பாட்டுடன் பொருத்தப்பட்டுள்ளன. டேஸ்போர்டு சரிப்பார்க்கப்பட்ட டிசைனிலும், ஸ்டேரிங் சக்கரம் லெதரால் மூடப்பட்டும் உள்ளன.

இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படுகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 228kmph ஆகும். ஸ்போர்ட் & க்ரீன் என்ற இரு விதமான ட்ரைவிங் மோட்கள் க்ளப்மேன் ஸ்பெஷல் எடிசன் காரில் வழங்கப்பட்டுள்ளன.
Image Courtesy: Justin Paul/Instagram