Just In
- 11 min ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 1 hr ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
- 1 hr ago
சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 5 டோர் மாடல் விபரங்கள் கசிந்தன!
- 2 hrs ago
ஹோண்டா கார் வைத்துள்ளீர்களா? அப்போ நீங்கள் தான் முதலில் இதை தெரிந்து கொள்ள வேண்டும்!!
Don't Miss!
- News
நாடு முழுவதும் தீயாய் பரவும் கொரோனா - ஒரே நாளில் 2,34,692 பேர் பாதிப்பு - 1341 பேர் மரணம்
- Finance
சிறு தொழிற்சாலைகளை சூறையாடும் லாக்டவுன்.. கோவை நிறுவனத்தின் உண்மை நிலை..!
- Lifestyle
உங்க குழந்தை இந்த கலருல 'கக்கா' போகுதா? அப்ப இந்த பிரச்சனையா இருக்க வாய்ப்பிருக்கு...ஜாக்கிரதை...!
- Movies
பத்மஸ்ரீ முதல் எடிசன் அவார்டு வரை.. விருதுகளை குவித்த 'சின்னக் கலைவாணர்' விவேக்.. மொத்த லிஸ்ட்!
- Sports
நேராக சென்று.. "அவரின்" காலிலேயே விழுந்த சிஎஸ்கே வீரர்.. வைரலாகும் புகைப்படம்.. என்ன நடந்தது?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தேர்தல் களத்தை சூடாக்கிய நடிகர் விஜயின் கருப்பு - சிவப்பு சைக்கிள்... விலை எவ்வளவு தெரியுமா?
சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்ததுதான் தமிழகத்தின் இன்றைய ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறது. கோடீஸ்வர கார்களை பலவற்றை வீட்டில் வைத்துக் கொண்டு திடீரென சைக்கிளில் புறப்பட்டு வந்தது எல்லோரையும் வியக்க வைத்தது.

சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜயின் மாளிகை போன்ற வீட்டின் மிகப்பெரிய கேட்டை பணியாளர் முழு பலத்தையும் கொண்டு திறக்கிறார். அடுத்த வினாடி, கருப்பு - சிவப்பு சைக்கிளில் சீறிப் பாய்ந்து வீட்டிலிருந்து சைக்கிளை ஓட்டியபடி வெளியே வருகிறார் விஜய். இன்று காலையில் வெளியான இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களையும், அரசியல் களத்தையும் சூடாக்கி உள்ளது.

அதுவும் சினிமாவில் பார்க்கும் அதே துறுதுறுப்புடன் அதிவேகத்தில் சைக்கிளில் வாக்குச் சாவடி நோக்கி பறக்கிறார். இந்த காட்சிகளை படம்பிடித்த சில ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வைரலாக்கி உள்ளனர்.

இதனிடையே, ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என பல கோடீஸ்வர கார்களை வைத்திருக்கும் நடிகர் விஜய், சைக்கிளில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும் அவர் ஓட்டி வந்த சைக்கிளின் வண்ணம் கருப்பு - சிவப்பு என்பதால், ஓட்டுபோடுவதற்கு குறிப்பிட்ட கட்சியை மறைமுகமாக அவர் கை காட்டியதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் காரை தவிர்த்து சைக்கிளில் வந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பல கோடி மதிப்புடைய கார்களை வைத்திருக்கும் நடிகர் விஜய் ஓட்டி வந்தது மான்ட்ரா பிராண்டின் சைக்கிள்தான். 2019ம் ஆண்டு மான்ட்ரா நிறுவனம் வெளியிட்ட மெட்டல் என்ற மாடலையே நடிகர் விஜய் பயன்படுத்துகிறார்.

பெர்ஃபார்மென்ஸ் வகை சைக்கிள் மாடல்களை தயாரிக்கும் மான்ட்ரா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் இந்த மெட்டல் மாடலும் ஒன்று. இந்த சைக்கில் 16 கிலோ மட்டுமே எடை கொண்டது. எனவே, ஸ்லிம்மாக இருக்கும் விஜய்க்கு இந்த சைக்கிளின் எளிதான கையாளுமை மிகவும் பிடித்தமானதாக மாறி இருக்கிறது.

மேலும், அவரது சைக்கிள் கார்பன் பிளாக் மற்றும் நியான் ரெட் என இரட்டை வண்ணக் கலவை கொடுக்கப்பட்டுள்ளது. மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட இந்த வண்ணத் தேர்வு வாடிக்கையாளர்களை பார்த்தவுடனே காதல் கொள்ள செய்கிறது.

இந்த சைக்கிளை வேகமாக ஓட்டுவதற்கு இதன் கியர் அமைப்பும் காரணம். இந்த சைக்கிளில் 24 ஸ்பீடு கியர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், எளிதாக கியர் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லோகன் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சாதாரண சாலைகள் மட்டுமின்றி, மழை நேரத்திலும், தண்ணீர் படர்ந்த நிலப்பரப்பிலும் சிறப்பான நிறுத்துதல் திறனை இந்த பிரேக் சிஸ்டம் வழங்கும்.

இந்த பைக்கில் எக்ஸ்எம்ஆர் அலாய் ஹேண்டில்பார் சைக்கிளை ஓட்டுபவருக்கு சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தையும், கட்டுப்படுத்தும் திறனையும் வழங்குகிறது. இதன் கென்டா 29 * 2.1 அங்குல அளவுடைய எம்டிபி டயர்கள் கரடுமுரடான சாலைகளையும் எளிதாக எதிர்கொள்ள பயன்படுகிறது.

மவுன்டெயின் பைக் என்ற ரகத்தில் குறிப்பிடப்படும் இந்த மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிள் மாடலானது ரூ.22.500 விலையில் கிடைத்தது. பல கோடி மதிப்புடைய கார்களை வைத்திருக்கும் நடிகர் விஜய் சைக்கிளில் ஓட்டுப் போட வந்து குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதையடுத்து, அவரது பிஆர்ஓ ரியாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், வீட்டின் மிக அருகிலேயே வாக்குச் சாவடி இருந்ததாலும், நெருக்கடியான சாலையில் இருந்ததால், அந்த இடத்தில் காரை கொண்டு செல்ல முடியாது என்ற காரணத்தால்தான் சைக்கிளில் நடிகர் விஜய் ஓட்டுப் போட வந்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.