கஷ்டப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசு... நடிகை சமந்தாவுக்கு எவ்வளவு பெரிய மனசு பார்த்தீங்களா?

நடிகை சமந்தா சத்தமில்லாமல் செய்துள்ள ஒரு நல்ல காரியம் அவரது ரசிகர்களை உருக வைத்துள்ளது. அவருக்கு எவ்வளவு பரந்த மனசு என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சத்தமில்லாமல் நடிகை சமந்தா செய்த காரியம்... எவ்வளவு பெரிய பரந்த மனசு பார்த்தீங்களா?

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா இருந்து வருகிறார். நடிப்பில் சிறந்த பெயரை பெற்றுவிட்ட நடிகை சமந்தா தனது குணத்தாலும் சிறந்தவர் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு நல்ல காரியத்தை செய்துள்ளார்.

சத்தமில்லாமல் நடிகை சமந்தா செய்த காரியம்... எவ்வளவு பெரிய பரந்த மனசு பார்த்தீங்களா?

ஆம், ஆந்திராவை சேர்ந்த கவிதா என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு புத்தம் புதிய மாருதி டிசையர் கார் ஒன்றை வாங்கி பரிசளித்துள்ளார். ஏழு சகோதரிகளுடன் ஏழ்மை நிலையில் இருந்த அந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தினரை காப்பாற்ற இரவு பகலாக உழைத்து சம்பாதித்து வருகிறார்.

சத்தமில்லாமல் நடிகை சமந்தா செய்த காரியம்... எவ்வளவு பெரிய பரந்த மனசு பார்த்தீங்களா?

ஆனால், வருவாய் போதிய அளவில் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். இதனை அறிந்து கொண்ட நடிகை சமந்தா அவருக்கு கார் பரிசளிப்பதாக உறுதியளித்திருந்தார். அதன்படி, இப்போது மாருதி டிசையர் டூர் கார் ஒன்றை வாங்கி அவருக்கு பரிசளித்துள்ளார்.

சத்தமில்லாமல் நடிகை சமந்தா செய்த காரியம்... எவ்வளவு பெரிய பரந்த மனசு பார்த்தீங்களா?

ஆட்டோ ஓட்டுனர் கவிதாவிற்கு வழங்கிய மாருதி டிசையர் டூர் கார் ரூ.7.50 லட்சம் ஆன்ரோடு விலை கொண்டது. தற்போதுள்ள புதிய தலைமுறை டிசையர் கார் வந்ததும், முந்தைய தலைமுறை டிசையர் கார் டூர் என்ற பெயரில் வாடகை கார் மார்க்கெட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

சத்தமில்லாமல் நடிகை சமந்தா செய்த காரியம்... எவ்வளவு பெரிய பரந்த மனசு பார்த்தீங்களா?

ஆட்டோ ஓட்டுனர் கவிதா சொந்தமாக வாடகை கார் தொழிலை துவங்குவதற்காக இந்த நல்ல காரியத்தை செய்துள்ளார். இந்த தகவல் பல மீடியாக்களில் வந்தாலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சத்தமில்லாமல் நடிகை சமந்தா செய்த காரியம்... எவ்வளவு பெரிய பரந்த மனசு பார்த்தீங்களா?

இந்த நிலையில், நாம் சம்பந்தப்பட்ட மாருதி டீலரிடம் பேசியபோது, அவர்கள் இது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினர். அத்துடன், ஆட்டோ ஓட்டுனர் கவிதாவுக்கு வழங்கப்பட்ட மாருதி டிசையர் டூர் கார் படத்தையும் எம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

சத்தமில்லாமல் நடிகை சமந்தா செய்த காரியம்... எவ்வளவு பெரிய பரந்த மனசு பார்த்தீங்களா?

பொதுவாக, இதுபோன்ற நல்ல காரியங்களை செய்யும் திரை நட்சத்திரங்கள் அடுத்தவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் வகையில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால், இது சம்பந்தமாக ஒரு சின்ன விஷயத்தை கூட அவர் கசியவிடவில்லை என்பதும் நடிகை சமந்தாவின் நற்குணத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது.

சத்தமில்லாமல் நடிகை சமந்தா செய்த காரியம்... எவ்வளவு பெரிய பரந்த மனசு பார்த்தீங்களா?

ஆட்டோ ஓட்டுனர் கவிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள மாருதி டிசையர் டூர் காரில் ஏசி சிஸ்டம், முன்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ரிமோட் கீலெஸ் என்ட்ரி வசதிகள் கொடுக்கப்படுகின்றன. ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஓட்டுனருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

சத்தமில்லாமல் நடிகை சமந்தா செய்த காரியம்... எவ்வளவு பெரிய பரந்த மனசு பார்த்தீங்களா?

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மட்டுமின்றி, சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் கிடைக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Familiar actress Samantha has gifted Maruti car to a woman auto driver and she helped her to run a cab service.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X