நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதகங்கள் என்னென்ன?

இந்திய விமானப்படையின் பயன்பாட்டில் உள்ள பழைய போர் விமானங்களின் ஆயுட்காலம் நெருங்கி வருவதால், இந்திய விமானப் படைக்கு உடனடியாக புதிய போர் விமானங்கள் தேவை ஏற்பட்டது. உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு தட்டிக் கழிக்கப்பட்டாலும், முதல் தேஜஸ் பிரிவு கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. எனினும், இந்திய விமானப்படை பலத்தை வலுவாக்கும் விதமாக, உடனடி தேவையை கருதி, ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதங்கள் என்னென்ன!!

இதற்காக, பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானத்தை மேம்படுத்தும் பணிகளில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதங்கள் என்னென்ன!!

அந்த வகையில், அண்மையில் தேஜஸ் போர் விமானத்தில் அதிசிறந்த வசதி ஒன்றை பெற்றுள்ளது. இது எதிராளிகளுக்கு கிலியை ஏற்படுத்தும் விஷயமாகவே பார்க்க முடியும். ஆம். நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியை தேஜஸ் போர் விமானம் பெற்றிருக்கிறது.

நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதங்கள் என்னென்ன!!

இதற்காக, அண்மையில் நடத்தப்பட்ட சோதனைகளும் துல்லியமாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது. இந்திய விமானப்படையின் IL-78 MKI டேங்கர் விமானத்திலிருந்து 1,900 லிட்டர் எரிபொருள் தேஜஸ் விமானத்திற்கு நிரப்பப்பட்டது.

நடுவானில் எரிபொருள் நிரப்புவதன் மூலமாக தேஜஸ் போர் விமானத்தின் திறன் பன்மடங்கு கூடி இருக்கிறது. இதுதான் எதிராளிக்கு அச்சம் தரும் விஷயமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதங்கள் என்னென்ன!!

ஏனெனில், தேஜஸ் போர் விமானத்தில் முழுமையாக நிரப்பி எடுத்துச் செல்லும்போது 850 கிமீ தூரம் மட்டுமே பறக்க முடியும். 500 கிமீ தூரத்திற்கு மட்டுமே போரின்போது பயன்படுத்த முடியும். ஆனால், தற்போது நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்றிருப்பதன் மூலமாக, இதன் பறக்கும் திறன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதங்கள் என்னென்ன!!

அதுமட்டுமல்லாமல், கீழே இறக்கி, ஏற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால், தொடர்ந்து போர் முனையில் வைக்க முடியும். தற்போதைய மாடல் 59 நிமிடங்கள் மட்டுமே வானில் பறக்கும் திறன் படைத்தது. நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி மூலமாக பறக்கும் நேரமும் அதிகரித்துள்ளது.

நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதங்கள் என்னென்ன!!

இந்த வசதி மூலமாக, தேஜஸ் போர் விமானத்தை எல்லையிலிருந்து எதிரி நாடுகளின் அதிக தூர இலக்குகளை கூட குறிவைக்கும் வாய்ப்பை பெற இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், போர் சமயங்களில் வான் எல்லையை கண்காணிக்கும் பணியில் இந்த வசதி அதிக பலன் தரும்.

நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதங்கள் என்னென்ன!!

இந்தியாவிலிருந்து மட்டுமே இயக்க முடியும் என்ற நிலை இனி இல்லை. உலகின் வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று போரிட முடியும். அவ்வாறான சமயங்களில், அந்த பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளின் உதவியுடன் எரிபொருள் பெறப்பட்டு, தேஜஸ் விமானத்தில் நிரப்பிக் கொண்டு போர் முனையில் செலுத்த முடியும்.

நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியை பெற்ற தேஜஸ்... சாதங்கள் என்னென்ன!!

டேக் ஆஃப் செய்யும்போது குறைவான எரிபொருளுடன் குறைந்த தூரத்திலேயே டேக் ஆஃப் செய்ய முடியும். போர் சமயங்களில் குறைந்த தூர ஓடுபாதைகளில் வைத்தும் தேஜஸ் போர் விமானத்தை டேக் ஆஃப் செய்து பின்னர் வானிலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்ள முடியும்.

Most Read Articles

மேலும்... #ராணுவம்
English summary
Advantages of mid-air refuelling facility in Tejas fighter jet.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X