பேன்ஸி நம்பருக்கு ரூ.55 கோடி ஆஃபர்... உதறித் தள்ளிய டிசைனர் அப்சல் கான்

By Saravana

பெரும் பணக்காரர்கள் தங்களது கார்களுக்கு பல லட்சம் மதிப்பில் பேன்ஸி நம்பர்களை வாங்குவதை பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறோம். இதுவே, வெளிநாடுகளில் மதிப்பு கோடிகளில் இருக்கிறது.

இங்கிலாந்தை சேர்ந்த அப்சல் கான் கார் கஸ்டமைஸ் நிறுவனம் பற்றி நமது வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த நிறுவனத்தின் கைவண்ணத்தில் உருவான கார்கள் குறித்து அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறோம்.

பேன்ஸி நம்பர் கலெக்ஷன்

பேன்ஸி நம்பர் கலெக்ஷன்

இங்கிலாந்து அரசிக்கான மேபேக் கார் முதல் ஆடம்பர கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் அந்த நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், ஏ கான் கஸ்டமைஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அப்சல் கான் தனது விலையுயர்ந்த கார்களுக்கு பல கோடி மதிப்புடைய பேன்ஸி நம்பர்களை வாங்கி வைத்திருக்கிறார்.

புகாட்டியை தாண்டிய விலை

புகாட்டியை தாண்டிய விலை

கானின் புகாட்டி வேரோன் கார் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் பயன்படுத்தும் எஃப்- 1(F1) என்ற பேன்ஸி நம்பரை இங்கிலாந்தை சேர்ந்த பெரும் பணக்காரர் ஒருவர் 9.35 மில்லியன் டாலரை கொடுத்து விலைக்கு கேட்டாராம். ஆனால், அந்த நம்பரை விற்க விருப்பமில்லை என்று அப்சல் கான் தெரிவித்துவிட்டாராம்.

பதிவெண் வரலாறு

பதிவெண் வரலாறு

எஃப்- 1 நம்பர் பிளேட்டுக்கு அப்சல் கான் முதல் உரிமையாளர் இல்லை. 109 ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த நம்பர் பிளேட்டை அவர் கடந்த 2008ம் ஆண்டுதான் 4.40 லட்சம் பவுன்ட் விலையில் எஸ்ஸெக்ஸ் கவுன்ட்டி கவுன்சில் தலைவரிடம் இருந்து வாங்கியிருக்கிறார்.

விருப்பமான எண்

விருப்பமான எண்

அப்சல் கான் வைத்திருக்கும் பேன்ஸி நம்பர்களில் அவருக்கு மிகவும் பிடித்த நம்பரும் எஃப்- 1 என்று அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். எஃப்- 1 நம்பர் தவிர 4எச்ஆர்எச் மற்றும் என்ஓ1(No1) ஆகியவையும் இருக்கின்றன.

உலகின் விலையுயர்ந்த எண்

உலகின் விலையுயர்ந்த எண்

உலகின் மிகவும் அதிக விலைக்கு போன பதிவு எண் ஒன்று (1) ஆகும். அபுதாபியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இந்த நம்பர் பிளேட்டை 11 மில்லியன் டாலர் விலையில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Kahn is also know, to a lesser extent, for his collection of expensive cars and a few extremely valuable, not to mention, highly coveted, novelty licence plates which he has acquired over the years. One such licence plate owned by him is the ‘F1', which is said to be his favourite. Kahn was reportedly approached by an unknown wealthy person recently who offered to pay £6 Million ($ 9.35 million) for ‘F1', but had to leave empty handed. 
Story first published: Saturday, August 24, 2013, 10:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X