350 பேர் பயணிக்கும் வசதி கொண்ட புதிய ஏர்பஸ் விமானம்

அமெரிக்க தயாரிப்பான போயிங் ட்ரீம்லைனர் விமானத்துக்கு நேரடி போட்டியை கொடுக்கும் அம்சங்கள் கொண்ட புதிய விமானத்தை இன்று பிரான்சை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனம் முதல்முறையாக பறக்கவிட உள்ளது A350 XWB என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விமானம் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரீம்லைனர் போன்றே அதிக எரிபொருள் சிக்கனம், நீண்ட தூரம் பறக்கும் வல்லமை கொண்ட இந்த விமானத்துக்கு ஏற்கனவே ஆர்டர் குவிந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய விமானம் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ட்ரீம்லைனருக்கு நெருக்கடி

ட்ரீம்லைனருக்கு நெருக்கடி

போயிங் ட்ரீம்லைனர் விமானங்களில் பேட்டரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல நாடுகளில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. பின்னர், புதிய பேட்டரி பொருத்தப்பட்டு ட்ரீம்லைனர் விமானங்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன. இருப்பினும், பேட்டரி கோளாறு ஏற்படுத்திய அச்சம் காரணமாக பல விமான நிறுவனங்களின் கவனம் தற்போது ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ350 எக்ஸ்டபிள்யூபி விமானத்தின் மீது திரும்பியுள்ளது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இதில், மூன்று வகுப்புகள் கொண்ட இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இதை பொறுத்து 270, 314 மற்றும் 350 பேர் பயணிக்கும் வகையில் கட்டித் தரப்படும். இருக்கை அமைப்பு மற்றும் இன்டிரியர் படங்கள் ஸ்லைடரின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளன.

 கேபின் வசதி

கேபின் வசதி

கேபினில் இருக்கும் காற்று 3 நிமிடத்துக்கு ஒருமுறை சுத்திகரிக்கப்படும். இதில், ஏழு இடத்தில் வெப்ப மேலாண்மை கருவிகள் உள்ளன. மேலும், கேபின் அதிர்வுகள் குறைந்ததாகவும், சுகமான பயணத்தை தரும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

இதில், ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனியாக 4ம் தலைமுறை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 12 இஞ்ச் டிவி திரைகள் மற்றும் ஹெட்போன்கள் ஆகியவை பயணிகளுக்கு புதிய பொழுதுபோக்கு அனுபவத்தை தரும் என்கிறது ஏர்பஸ்.

 'நான் ஸ்டாப்'...

'நான் ஸ்டாப்'...

இந்த விமானம் கிட்டத்தட்ட 16,000 கிமீ தூரம் வரை இடைநில்லாமல் பறக்கும் வல்லமை கொண்டது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த விமானத்தில் ரோல்ஸ்ராய்ஸ் டிரென்ட் எக்ஸ்டபிள்யூபி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் ரகத்தை ஒப்பிடும்போது 15 சதவீதம் எடை குறைந்தது என்பதுடன், 25 சதவீதம் அளவுக்கு எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இதனால், இயக்குதல் செலவு குறையும்.

 பாடி

பாடி

டைட்டானியம், ஸ்டீல், அலுமினியம் அலாய் மற்றும் இதர பொருட்களின் கலவையில் தயாரிக்கப்பட்ட பிரத்யேக உலோகம் மூலம் இதன் பாடி தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக உறுதியும், இலகு எடையும் கொண்டதாக இருக்கும்.

 இறக்கை டிசைன்

இறக்கை டிசைன்

இதன் 32 மீட்டர் நீளம் கொண்ட இறக்கைகள் பிரத்யேக ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் நிலைத்தன்மை அதிகரிப்பதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும்.

 குவியும் ஆர்டர்

குவியும் ஆர்டர்

இந்த புதிய விமானத்துக்கு ஏற்கனவே 600 ஆர்டர்களை ஏர்பஸ் வாங்கியுள்ளது. அதேவேளை, ட்ரீம்லைனர் விமானத்துக்கு 890 ஆர்டர்களை பெற்றிருக்கிறது. இருப்பினும், இன்று வெற்றிகரமாக தனது முதல் பயணத்தை ஏ350 நிறைவு செய்தால் ஆர்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பறக்கிறது

இன்று பறக்கிறது

பிரான்ஸ் நாட்டிலுள்ள தவுலஸி- பிளாக்நக் விமான நிலையத்திலிருந்து முதல்முதலாக இந்த விமானம் இன்று பறக்க இருப்பதாக ஏர்பஸ் தெரிவித்துள்ளது.

காக்பிட்

காக்பிட்

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர்

Most Read Articles

English summary
European plane maker Airbus has confirmed that the first flight of its long-awaited A350 XWB is set for the morning of June 14, 2013, weather permitting.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X