உலகின் மிக அதிக விலையுடைய போர் விமானம்: அமெரிக்கா களமிறக்குகிறது!

Written By:

உலகின் மிக அதிக விலை மதிப்புடைய போர் விமானத்தை அமெரிக்கா விரைவில் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. பரவலாக நான்காம் தலைமுறை விமானங்கள் பயன்பாட்டில் இருக்கும் நிலையில், ஐந்தாம் தலைமுறை அம்சங்களை கொண்ட அதிநவீன போர் விமானங்களை அமெரிக்கா ஏற்கனவே பயன்பாட்டில் வைத்திருக்கிறது.

இந்த நிலையில், ஐந்தாம் தலைமுறை விமானத்திலேயே மிக நவீனமான புதிய எஃப்-35 போர் விமானத்தை விரைவில் விமானப்படையில் சேர்க்க இருக்கிறது அமெரிக்கா. குப்பையான திட்டம் என்று வர்ணிக்கப்பட்ட இந்த விமானம் ஒருவழியாக அமெரிக்க விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது.

 பன்முக பயன்பாடு

பன்முக பயன்பாடு

தரை மற்றும் வான் இலக்குகள் மீது தாக்குதல், எதிரி விமானங்களை வழிமறித்தல், வான் எல்லையை கண்காணிப்பது என பல்வேறு விதங்களிலும் செயலாற்றக்கூடியதுதான் இந்த எஃப்-35 போர் விமானம். அமெரிக்காவின் புகழ்பெற்ற லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் தயாரிப்பு இது.

அதிக விலை

அதிக விலை

அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் செலவிட்டதில் அதிக விலை மதிப்புடைய ஆயுதமாக இது பார்க்கப்படுகிறது. இந்த புதிய விமானம் அமெரிக்க வான் படையின் பலத்தை புதிய கோணத்தில் எடுத்துச் செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பு

மதிப்பு

இந்த விமானத்தை 400 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தயாரித்துள்ளனர். இது உலக வரலாற்றிலேயே மிக அதிக தொகையில் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதமாக கூறப்படுகிறது. பல்வேறு நிதி சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்னைகளை கடந்து இந்த விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

அம்சங்கள்

அம்சங்கள்

ஒற்றை எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த விமானத்தை ஒரு பைலட் இயக்க முடியும். அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் இயக்குவதற்கான சிறப்பம்ங்களை கொண்டிருக்கிறது. எதிரிகளின் ரேடார்களின் சிக்காது வடிவமைப்பையும், தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கிறது.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இதன் ஹெல்மெட்டில் இருக்கும் கேமரா மூலமாக, அனைத்து கோணங்களிலும் வெளிப்புறத்தை கண்காணித்து ஓட்ட முடியும். தரை மற்றும் வான் இலக்குகளை துல்லியமாக அடிப்பதிலும் சிறப்பாக இருக்கிறதாம். எதிரிகளின் ரேடார்களில் எளிதாக தப்பிக்க முடியும் என்றும் ஒருபுறம் இதன் சிறப்பம்சங்களை அடுக்குகின்றனர்.

தாமதம்

தாமதம்

நிதி சிக்கல் மட்டுமில்லாமல், 20414ம் ஆண்டில் பறப்பதற்கு தயார் நிலையில் இருந்த எஃப்-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, அனைத்து எஃப்-35 போர் விமானங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது.

 குப்பை திட்டமா?

குப்பை திட்டமா?

இதுகுறித்து ஆய்வு நடத்திய பென்டகன் அதிகாரிகள், இந்த விமானத்தின் எரிபொருள் டேங்க்கிலிருந்து தீப்பிடிக்கும் அபாயம் இருப்பதாக அறிக்கை அளித்தனர். மேலும், இதன் வளைந்து நெளிந்து தப்பிக்கும் திறனும் குறைவாக இருப்பதாகவும், சென்சார்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த விமானத்திற்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

பென்டகன் கொடுத்த யோசனைப்படி, எரிபொருள் டேங்கில் தீப்பிடிக்காதவாறு மாற்றங்களை செய்து தற்போது மேம்படுத்தியிருக்கின்றனர். இதுதவிர, பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டன. தற்போது இந்த விமானத்தின் குறைகள் சரிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், திடீர் டிவிஸ்ட்டாக, இந்த விமானத்தை போரில் ஈடுபடுத்துவதற்கான அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

காத்திருங்கள்...

காத்திருங்கள்...

இதுஒருபுறம் இருக்க ரஷ்யாவுடன் இணைந்து ஐந்தாம் தலைமுறை விமானத்தை இந்தியா தயாரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த விமானம் தயாராகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானம் பயன்பாட்டிற்கு வந்தால், இந்திய விமானப்படையின் பலம் உலக அளவில் பேசப்படும் விஷயமாக மாறும்.

உலகின் டாப்-10 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்!

உலகின் டாப்-10 ஐந்தாம் தலைமுறை போர் விமானங்கள்!

 
மேலும்... #ராணுவம் #military
English summary
All you need to know about USS F-35 Fighter Jet.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark