கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க...

கொரோனா பிரச்னைக்கு மத்தியில் உச்ச நடிகர் சொகுசு கார் வாங்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க...

திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் விலை உயர்ந்த கார்களை சர்வ சாதாரணமாக வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல கோடி ரூபாய் சம்பளம் பெறுவதால், விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்குவதில் நடிகர், நடிகைகள் பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பாலிவுட் திரையுலகம் என்றால், சொல்லவே வேண்டாம்.

கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க...

பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகளிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருக்கின்றன. இதற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் விதிவிலக்கு கிடையாது. ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிதாக மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes-Benz S-Class) காரை அமிதாப் பச்சன் வாங்கியுள்ளார்.

கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க...

இதன் மூலம் அவரது கராஜிற்கு வந்த புதிய வாகனமாக மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் உருவெடுத்துள்ளது. மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீட்டில் வைத்து, மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அவருக்கு எஸ்-க்ளாஸ் காரை டெலிவரி செய்துள்ளது. வெள்ளை நிற மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரை அமிதாப் பச்சன் தேர்வு செய்துள்ளார்.

கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க...

அமிதாப் பச்சன் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் தீவிரமாக ரசிகர் ஆவார். அவரிடம் ஏற்கனவே இருந்த பழைய எஸ்-க்ளாஸ் காருக்கு மாற்றாக புதிய கார் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் காரின் 350d வேரியண்ட்டை (350d Variant) அமிதாப் பச்சன் தேர்வு செய்துள்ளார்.

கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க...

இந்தியாவில் இதன் விலை 1.38 கோடி ரூபாய் (எக்ஸ் ஷோரூம், இந்தியா) ஆகும். இந்த காரில் 3.0 லிட்டர், இன்லைன் 6-சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் அதிகபட்சமாக 282 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்க கூடியது. 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க...

பூஜ்ஜியத்தில் இருந்து மூன்று இலக்க வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய திறனை இந்த கார் பெற்றுள்ளது. புதிய எஸ்-க்ளாஸ் காரானது, 362 பிஎச்பி பவர் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வாரி வழங்க கூடிய வி6 பெட்ரோல் இன்ஜின் உடனும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கூறியபடி அமிதாப் பச்சனிடம் ஏற்கனவே பல்வேறு சொகுசு கார்கள் உள்ளன.

கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க...

புதிதாக வாங்கியுள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் தவிர, அமிதாப் பச்சனின் கராஜில், லெக்ஸஸ் எல்எக்ஸ் 570 (Lexus LX 570), ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls-Royce Phantom), மினி கூப்பர் எஸ் (Mini Cooper S), பென்ட்லீ கான்டினென்டல் ஜீடி (Bentley Continental GT) மற்றும் ரேஞ்ச் ரோவர் (Range Rover) ஆகிய கார்களும் உள்ளன.

கொரோனா பிரச்னைக்கு நடுவில் சொகுசு கார் வாங்கிய உச்ச நடிகர்... விலையை பாத்து மயக்கம் போட்றாதீங்க...

இதுதவிர போர்ஷே கேமேன் எஸ் (Porsche Cayman S) காரையும் அமிதாப் பச்சன் வைத்துள்ளார். இதன் மூலம் அவர் சொகுசு மற்றும் விலை உயர்ந்த கார்களுக்கு எவ்வளவு பெரிய ரசிகர் என்பதை புரிந்து கொள்ளலாம். அமிதாப் பச்சனின் மருமகளான ஐஸ்வர்யா ராய் பச்சன், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-க்ளாஸ் எஸ்500 (Mercedes-Benz S-Class S500) காரை சொந்தமாக வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Amitabh Bachchan Buys Mercedes-Benz S-Class Worth Rs 1.38 Crore. Read in Tamil
Story first published: Wednesday, September 2, 2020, 23:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X