ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி சொகுசு எஸ்யூவி வாங்கிய நடிகர் அமிதாப்பச்சன்

Written By:

ரூ.4.5 கோடி விலையில் புதிய ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி எடிசன் சொகுசு எஸ்யூவியை வாங்கியிருக்கிறார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன். இதுதான் இன்றைய தேதியில் இந்தியாவின் விலையுயர்ந்த எஸ்யூவி மாடலும் கூட. கார் ஆர்வலரான அமிதாப் வசம் ஏராளமான சொகுசு கார்கள் உள்ள நிலையில், தற்போது ரேஞ்ச்ரோவர் ஆட்டோகிராஃபி எடிசனின் வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் கண்டு வியந்து ஆர்டர் செய்து டெலிவிரி பெற்றிருக்கிறார்.

ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிக்கு அமிதாப்பச்சன் வாடிக்கையாளரானதில் பெரு மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்வதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ரோஹித் சூரி தெரிவித்தார். ரேஞ்ச்ரோவர் ஆட்டோகிராஃபி எடிசன் எஸ்யூவியை அமிதாப்பச்சனிடம் டெலிவிரி வழங்குவதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றிற்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நேரில் வந்து தனது காரை டெலிவிரி பெற்றார் அமிதாப்பச்சன். ரோல்ஸ்ராய்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்களால் நிரம்பி வழியும் அமிதாப்பச்சன் கராஜில் புதிய வரவாக இணைந்திருக்கும் ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி எடிசன் மாடலின் வியக்க வைக்கும் சிறப்பம்சங்களையும், படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

மாடல் விபரம்

மாடல் விபரம்

லேண்ட்ரோவர் நிறுவனம் தயாரிக்கும் எஸ்யூவி மாடல்களிலேயே உயர் வகை மாடலான ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி Long Wheel Base[LWB] மாடலைத்தான் நடிகர் அமிதாப்பச்சன் வாங்கியிருக்கிறார். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்வதற்கு பல நூற்றுக்கணக்கான ஆப்ஷன்களுடன் இந்த எஸ்யூவி கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

இடவசதி

இடவசதி

சாதாரண ரேஞ்ச்ரோவரைவிட கூடுதல் நீளம் கொண்ட இந்த லாங் வீல் பேஸ் மாடலில், இரண்டாவது வரிசை இருக்கையின் கால் வைக்கும் பகுதியின் இடவசதி வெகுவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 186 மிமீ வரை கூடுதல் நீளம் கொண்ட இடவசதியை வழங்குகிறது. இதனால், ஒரு விசாலமான அறையில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை தரும்.

சாய்மான இருக்கை

சாய்மான இருக்கை

கால் வைக்கும் பகுதியின் இடவசதி அதிகரிக்கப்பட்டிருப்பதால், இதன் இரண்டாவது வரிசை இருக்கைகளை 17 டிகிரி கோணத்தில் சாய்த்துக் கொள்ள முடியும். அத்துடன், கால்களையும் ஓய்வாக வைத்து பயணிப்பதற்கான லெக் பேடு கொடுக்கப்பட்டுள்ளது.

லெதர் அலங்காரம்

லெதர் அலங்காரம்

மிக மிக சொகுசான லெதர் இருக்கைகள் மற்றும் லெதர் அலங்காரம் இன்டீரியரின் தரத்தை எடுத்தியம்புகின்றன.

கன்ட்ரோல் சுவிட்சுகள்

கன்ட்ரோல் சுவிட்சுகள்

பின்னால் இருக்கும் இரண்டு தனித்தனி இருக்கைகளுக்கு நடுவில் கைகளை ஓய்வாக வைத்துக் கொள்வதற்கான ஆர்ம் ரெஸ்ட் இருப்பதோடு, அதில் கன்ட்ரோல் பட்டன்களும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டேபிள்

டேபிள்

இரண்டாவது இருக்கையில் பயணிப்பவருக்காக மடக்கி விரிக்கும் வசதியுடைய சிறிய டேபிள்களும் உண்டு.

 ஆம்பியன்ட் லைட்டிங்

ஆம்பியன்ட் லைட்டிங்

ரம்மியமான பயண அனுபவத்தை வழங்கும் விதத்தில் மனதுக்கும், கண்களுக்கும் இதம் தரும் பல் வண்ணக்கலவையில் மெல்லிய வெளிச்சத்தை வழங்கும் ஆம்பியன்ட் லைட் செட்டிங்கும் உள்ளது.

மசாஜ் இருக்கை

மசாஜ் இருக்கை

இருக்கைகளில் கால்கள் மற்றும் தொடை திசுக்களை இலகுவாக்கி புத்துணர்ச்சி தரும் மசாஜ் ஃபங்ஷன் வசதியும் உள்ளது.

வசதிகள்

வசதிகள்

அடாப்டிவ் ஸினான் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், மெரிடியன் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, பொழுதுபோக்கு வசதிகள், டிவி திரை, கை அசைவை உணர்ந்து திறக்கும் பின்புற கதவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வாடிக்கையாளர்களுக்கு புது விதமான பயண அனுபவத்தையும், பரவசத்தையும் வழங்கும்.

கண்ணாடி கூரை

கண்ணாடி கூரை

மேல்புறத்தில் எலக்ட்ரிக்கல் முறையில் மூடி திறக்கக்கூடிய அமைப்புடன் கண்ணாடி கூரை கொடுக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிததத்தில் பிரேக் பவரை பிரித்து செலுத்தும் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பயணிகளுக்கு அதீத பாதுகாப்பு வழங்கும் 8 ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பின்னால் சேர்க்கப்படும் ட்ரெயிலரை நிலைதடுமாறி கவிழாமல் இழுத்து செல்வதற்கான வசதி, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் டிராக்ஷன் கன்ட்ரோல், கார் கவிழாமல் நிலைத்தன்மையுடன் செலுத்துவதற்கான ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் உள்பட பல உயர் வகை பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த எஸ்யூவி 295.5 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 எஞ்சின்

எஞ்சின்

ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி மாடலில் 4.4 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 750 என்எம் டார்க்கையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. மணிக்கு 218 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்ட எஸ்யூவி ரக மாடல். பேடில் ஷிஃப்ட் வசதியும் உள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

இந்த எஸ்யூவி லிட்டருக்கு 7.81 கிமீ மைலேஜ் தரும் என்று லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவிக்கிறது. நடைமுறையில் சராசரியாக லிட்டருக்கு 6 கிமீ மைலேஜை எதிர்பார்க்கலாம். இந்த எஸ்யூவியில் 105 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது.

விலை

விலை

ரூ.3.75 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் மும்பையில் கிடைக்கிறது. வரி உள்ளிட்டவை சேர்த்து ரூ.4.50 கோடியை கொடுத்து இந்த காரை வாங்கியிருக்கிறார் அமிதாப்பச்சன். இன்றைய தேதியில் இந்தியாவின் மிகவும் உயர் வகை சொகுசு எஸ்யூவி மாடலாக இதனை கூறலாம்.

அமிதாப் கார்கள்

அமிதாப் கார்கள்

அமிதாப் தற்போது வாங்கியிருக்கும் புதிய ரேஞ்ச்ரோவர் ஆட்டோபயோகிராஃபி மாடல் தவிர்த்து, அவரிடம் ஏற்கனவே இருக்கும் விலையுயர்ந்த கார்களின் விபரத்தை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

 பென்ட்லீ கான்டினென்ட்டல் ஜிடி

பென்ட்லீ கான்டினென்ட்டல் ஜிடி

ரூ.1.65 கோடி விலை மதிப்பு கொண்டது. இந்த காரில் 552 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 4.4 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் வல்லமை கொண்ட இந்த காரின் டாப் ஸ்பீட் மணிக்கு 198 கிமீ.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600

ரூ.1 கோடி விலை மதிப்பு கொண்டது. 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கார் 517 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

போர்ஷே கேமேன்

போர்ஷே கேமேன்

ஒரு கோடி விலையை நெருங்கும் இந்த காரில் 3.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.இந்த எஞ்சின் 320 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். 5.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கும்.

பிஎம்டபிள்யூ 760எல்ஐ

பிஎம்டபிள்யூ 760எல்ஐ

ஒண்ணேகால் கோடி விலை கொண்ட இந்த காரில் 535பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு 250கிமீ வேகம் வரை பறக்கக்கூடியது.

 லேண்ட்ரோவர் வோக்

லேண்ட்ரோவர் வோக்

ஏற்கனவே ஒரு லேண்ட்ரோவர் எஸ்யூவி அமிதாப்பிடம் உள்ளது. அது லேண்ட்ரோவர் வோக் எஸ்யூவி மாடலாகும். இந்த எஸ்யூவியில் 4197சிசி வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 402 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் இந்த எஞ்சின் பெர்ஃபார்மென்சில் பின்னும். ரூ.1.05 கோடி ஆரம்ப விலை கொண்டது.

 
English summary
Land Rover on Monday announced the delivery of its flagship SUV, the Range Rover Autobiography LWB to Bollywood superstar Amitabh Bachchan.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark