இந்தியாவில் ஆம்ஃபிபியஸ் பஸ் சேவை விரைவில் அறிமுகம் - முழு தகவல்கள்

Written By:

இந்தியாவில் நீரிலும், நிலத்திலும் பயணிக்கும் ஆம்ஃபிபியஸ் பஸ் விரைவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

விரைவில் அறிமுகம் செய்யபட உள்ள இத்தகைய பஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஆம்ஃபிபியஸ் வாகனங்கள்;

ஆம்ஃபிபியஸ் வாகனங்கள்;

நாம் பல்வேறு விதமான வாகனங்களை பார்க்க வாய்ப்புகள் உண்டு. இதில் ஆம்ஃபிபியஸ் வாகணங்களும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய ஆம்ஃபிபியஸ் வாகனங்கள், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் தன்மை கொண்டுள்ளது.

நதிகள் மற்றும் ஏறிகளில் படகுகளை உபயோகிக்காமல் தூரத்தை சுறுக்குவது எப்போதாவது கற்பனை செயதது உண்டா?

இனி உங்கள் கனவு விரைவில் நினைவாக உள்ளது.

இந்தியாவிலும் ஆம்ஃபிபியஸ் வாகனங்கள்;

இந்தியாவிலும் ஆம்ஃபிபியஸ் வாகனங்கள்;

டைம்ஸ் ஆஃப் இதழ் வெளியிட்ட செய்தி படி, இந்தியாவில் ஆம்ஃபிபியஸ் வாகனங்கள் கொண்டு வரும் திட்டதிற்கு, கோவாவை சேர்ந்த ஒரு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம், சுற்றுலா பயணிகளின் போக்குவரத்திற்கு, 14 ஆம்ஃபிபியஸ் பஸ்களை தயார் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சாலை போக்குவரத்து அமைச்சகத்தை தொர்பு கொண்டு, இந்த ஆம்ஃபிபியஸ் பஸ்களை இயக்குவதற்கான வழிமுறைகளை வகுத்து கொடுக்க கேட்டு கொண்டுள்ளது.

அனுமதிக்கபட்ட வேகம்;

அனுமதிக்கபட்ட வேகம்;

அரசு விதிமுறைகளின் படி, இந்த ஆம்ஃபிபியஸ் பஸ்கள், உச்சபட்சமாக மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கபடும்.

அனுமதிக்கபட்ட நேரம்;

அனுமதிக்கபட்ட நேரம்;

இந்த ஆம்ஃபிபியஸ் பஸ்கள், பகல் நேரத்தில் மட்டுமே இயக்க அனுமதிக்கபடும். சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு இயக்க அனுமதிக்கபடமாட்டாது.

முதல் ஆம்ஃபிபியஸ் பஸ்;

முதல் ஆம்ஃபிபியஸ் பஸ்;

முதல் ஆம்ஃபிபியஸ் பஸ், ஜவஹர்லால் நேரு போர்ட் ட்ரஸ்ட் (ஜேஎன்பிடி) நிறுவனத்தால் வாங்கபட்டுள்ளது.

இந்த முதல் ஆம்ஃபிபியஸ் பஸ், அடுத்த 3 மாதங்களில் மும்பை மாநகரில் செயல்பட துவங்கும்.

பிற நாடுகளில் இயங்கும் சேவை;

பிற நாடுகளில் இயங்கும் சேவை;

ஆம்ஃபிபியஸ் பஸ் சேவை, உலகின் பிற நாடுகளில் சுற்றுலாவிற்காக பயன்படுத்தபடுகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக விளங்குவது, லண்டன் டக் டூர்ஸ் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம், மேற்குறிப்பிட்ட மற்றும் இந்த படங்களில் காட்டபட்ட மறுவடிவமைக்கபட்ட வேர்ல்ட் வார் 2 டியூகேடபுள்யூ (World War II DUKW) வாகனங்களை, சுற்றுலாவிற்காக பயன்படுத்துகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஆம்பிபியஸ் சொகுசு பஸ்சில் ஒரு ரவுண்டு!

தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஓர் அற்புதமான பைக்!

தரையிலும், தண்ணீரிலும் செல்லும் தனிநபர் பயன்பாட்டு ஆம்பிபியஸ் வாகனங்கள்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Amphibious Bus - Buses that travels on Water and Land are to be introduced in India Soon. According to report in the Times of India, A Goan company is building 14 amphibious buses to ferry tourists around approached the road transport ministry asking them to set a set of guidelines regarding amphibious buses. To know more about these amphibious buses, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more