அண்ணன் முகேஷுக்கு சளைக்காத அனில் அம்பானியின் கார் கலெக்ஷன்!

Written By:

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி போன்றே, அவரது சகோதரர் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் அதிபர் அனில் அம்பானியும் கார் காதலர்தான். முகேஷ் அம்பானியிடம் நூற்றுக்கணக்கான கார்கள் இருக்கும் நிலையில், அவரது சகோதரர் அனில் அம்பானியிடமும் ஏராளமான கார்கள் இருக்கின்றன. அதில், அவர் அடிக்கடி விரும்பி பயன்படுத்தும் முக்கிய கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

உலகின் மிகச் சிறந்த சொகுசு கார் மாடல் என போற்றப்படும் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ். அனில் அம்பானி தனது மனைவியுடன் செல்லும்போது இந்த காரை பயன்படுத்துகிறார். அலுவலகத்தின் முக்கிய கூட்டங்களுக்கு இந்த காரில் வந்து இறங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Picture credit: IndiaTimes

அண்ணன் முகேஷுக்கு சளைக்காத அனில் அம்பானியின் கார் கலெக்ஷன்!

மிக மிக வசதியான இருக்கைகள், உயர் வகை தொழில்நுட்ப வசதிகள், சொகுசான இருக்கை அமைப்பு என்று இந்த காரை அனில் அம்பானி விரும்புவதற்கு பல காரணங்களை கூற முடியும். அவர் பயன்படுத்தும் கார் 200ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த மாடல். சக்திவாய்ந்த எஞ்சின், சொகுசு வசதிகளுடன் இந்த கார் அனில் அம்பானியை வசீகரித்து விட்டது. இந்த காரை தானே ஓட்டுவதில் அனில் அம்பானி ஆர்வம் காட்டுவதும் வழக்கம்.

ரேஞ்ச்ரோவர் வோக்

ரேஞ்ச்ரோவர் வோக்

எஸ்யூவி ரகத்தில் உலகின் மிக சொகுசான உயர் வகை எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது ரேஞ்ச்ரோவர் வோக். இந்த காரும் அனில் அம்பானி வீட்டு கராஜை அலங்கரித்து வருகிறது. சிறந்த ஆஃப்ரோடு கார் மாடலாகவும் இருக்கிறது. இந்த காரில் இறுக்கும் 3.6 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 275 எச்பி பவரையும், 640 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

அண்ணன் முகேஷுக்கு சளைக்காத அனில் அம்பானியின் கார் கலெக்ஷன்!

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் மும்பை சாலைகளை கடந்து செல்கையில் இந்த காரையே அவர் பயன்படுத்துகிறார். மிக சொகுசான இருக்கைகள், தொழில்நுட்ப வசதிகளுடன் கூட சிறந்த பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருப்பதே இதற்கு காரணம்.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

உலக கோடீஸ்வரர்களின் கனவு கார் மாடலாக விளங்குகிறது ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம். பெரும் கோடீஸ்வரர்களின் ஆஸ்தான கார் மாடலாக விளங்கும் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் அனில் அம்பானியிடம் உள்ளது. இந்த காரில் இருக்கும் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 460 பிஎஸ் பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

அண்ணன் முகேஷுக்கு சளைக்காத அனில் அம்பானியின் கார் கலெக்ஷன்!

அலுவலகத்திற்கு செல்வது உள்ளிட்ட தினசரி அதிகம் பயன்படுத்தும் மாடல்களில் ஒன்றாக வைத்திருக்கிறார். வசதியான இருக்கைகள், சக்திவாய்ந்த எஞ்சின் போன்றவற்றுடன் இந்த கார் அனில் அம்பானியின் மிக விருப்பமான மாடலாக விளங்குகிறது.

Picture credit: TheHinduBusinesLine

டொயோட்டா ஃபார்ச்சூனர்

டொயோட்டா ஃபார்ச்சூனர்

இந்தியாவின் மிகவும் கம்பீரமான எஸ்யூவி மாடல்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர். மிடுக்கானதாகவும், மிரட்டாலாகவும் இருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் தோற்றம் அனில் அம்பானியை வெகுவாக கவர்ந்துவிட்டது. இந்த காரில் இருக்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் 170 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

அண்ணன் முகேஷுக்கு சளைக்காத அனில் அம்பானியின் கார் கலெக்ஷன்!

நடை ஓட்டப் பயிற்சியில் ஆர்வம் காட்டுகிறார் அனில் அம்பானி. தினசரி நடை ஓட்டப் பயிற்சிக்கு செல்வதற்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியை பயன்படுத்துகிறார். தனது சகாக்களுடன் செல்வதற்கு இந்த எஸ்யூவியை அதிகம் பயன்படுத்துகிறார்.

Picture credit: IndiaToday

 லம்போர்கினி கல்லார்டோ

லம்போர்கினி கல்லார்டோ

அனில் அம்பானியிடம் லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் இருக்கிறது. ஓய்வு நேரங்களில் இந்த காரில் மும்பையை வலம் வருவது அவருக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று. லம்போர்கினி கல்லார்டோ காரில் இருக்கும் சக்திவாய்ந்த வி10 எஞ்சின் அதிகபட்சமாக 550 பிஎஸ் பவரையும், 540 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய திறன் வாய்ந்தது.

அண்ணன் முகேஷுக்கு சளைக்காத அனில் அம்பானியின் கார் கலெக்ஷன்!

மொத்தமாகவே இந்தியாவில் வெறும் 6 கார்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது. ஒரு காரின் விலை மதிப்பு ரூ.3.50 கோடி என்ற விலையில் விற்கப்பட்டது. தற்போது இந்த காருக்கு மாற்றாக லம்போர்கினி ஹூராகென் விற்பனைக்கு வந்துவிட்டது. லம்போர்கினி கல்லார்டோவின் மிரட்டலான தோற்றம் அனில் அம்பானியை கவர்ந்துவிட்டது. இந்த காரை அதிகம் பயன்படுத்துவதில்லை என்றாலும், தனது கராஜில் இருக்கும் மாடல்களில் அதிகம் விரும்பி பார்த்து, பாரமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மாடல் லம்போர்கினி கல்லார்டோ கார்.

புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் படங்கள்!

புதிய ஃபோர்டு ஜிடி சூப்பர் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் கண்டு ரசிக்கலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Anil Ambani and his Costly Cars.
Story first published: Monday, January 30, 2017, 12:56 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos