5ஜி நெட், 3500 kWh பேட்டரி: இதுதான் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

உலகின் முதல் மின்சார கப்பல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இவை, சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவொரு பாதிப்பை விளைவிக்காது என்கிற காரணத்தால் உலக நாடுகள் பல மின் வாகன பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. மேலும், விற்பனை அதிகரிக்கச் செய்வதற்காக இந்தியா போன்ற ஒரு சில நாடுகள் மானியம் போன்ற சிறப்பு திட்டங்களையும் அறிவித்து வருகின்றன.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

தேவை அதிகரித்து வரும் அதே நேரத்தில் மின் வாகனங்களுக்கான கட்டமைப்பு குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இதன் விற்பனை இன்றளவும் ஆரம்பநிலையிலேயேக் காணப்படுகின்றது. எனவே, மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அரசு தரப்பில் மின் வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் நிலையம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

எனவே, எதிர்காலத்தில் உலகின் முக்கிய நாடுகள் பலவற்றின் சாலையை மின்சார வாகனங்களே ஆளவிருக்கின்றன என்பது உறுதியாகியுள்ளது.

அதேசமயம் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, சாலைகளை மட்டுமில்லாமல் கடல் போன்ற நீர் வழிப் போக்குவரத்து பாதைகளையும் விரைவில் மின்சார வாகனங்கள் ஆளவிருப்பது தெரியவந்துள்ளது.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

ஆம், கப்பல்களிலும் மின்சர ரகங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை ஜப்பானைச் சேர்ந்த ஆசாஹி டேங்கர் என்ற நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டே உறுதி செய்துவிட்டது.

அது, இ5 எனப்படும் ஆயில் தாங்கி கப்பலின் உருவாக்கம் பற்றி ஆராய்ச்சி செய்து வருவதாக அப்போது தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது மின்சார ஆயில் டேங்கர் கப்பல் பற்றிய வீடியோ ஒன்றை இ5 ப்ராஜெக்ட் என்ற யுடியூப் தளம் வாயிலாக வெளியிட்டுள்ளது.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

இந்த வீடியோவில் கப்பல் பற்றிய பல்வேறு ஆச்சரிய தகவலை அது வெளியிட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுப்புறச் சுகாதாரத்திற்கு எந்தவொரு பாதிப்பையும் விளைவிக்காத இந்த மின்சார கப்பல் 2021ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருப்பதாக அது அறிவித்திருப்பது உலக மின்வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

ஏனென்றால், மின்சார ரகத்தில் அறிமுகமாகும் உலகின் முதல் எலெக்ட்ரிக் கப்பல் இதுவே ஆகும். இந்த கப்பலில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியைச் சார்ஜ் செய்வதற்கென தனி இயற்கை மின் நிலையத்தை அந்நிறுவனம் உருவாக்கியிருப்பது கூடுதல் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

ஆம், இந்த கப்பலை சார்ஜ் செய்வதற்காக தனி சோலார் பிளாணட் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி மையங்களை அந்த நிறுவனம் அமைத்து வருவதாக அந்த வீடியோவில் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆசாஹி டேங்கர் நிறுவனம் இந்த தனிச் சிறப்பு வாய்ந்த மின்சார கப்பலை தயாரிப்பதற்காக எக்ஸெனோ யமாமிசு என்ற மற்றுமொரு ஜப்பானிய நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருக்கின்றது.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

இவ்விரு நிறுவனங்களும் கடல்சார் வாகனம் மற்றும் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகும். இந்த கூட்டணியுடன் மிட்சுபிஷி நிறுவனத்திற்கு சொந்தமான எம்ஓஎல் குழுமமும் இணைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதில், மிட்சுபிஷி நிறுவனம் அதன் மின்சார கார்களில் பயன்படுத்தும் குறிப்பிட்ட தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்காக இந்த கூட்டணியில் இணைந்திருக்கின்றது.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

இந்த கூட்டணியில்தான் உலகின் முதல் மின்சார டேங்கர் கப்பல் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இரு யூனிட்களாக தயாராகி வரும் இவ்விரு கப்பல்களுமே ஆயில்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளை மட்டுமே மேற்கொள்ள இருக்கின்றது. இந்த பணியில் 2023ம் ஆண்டிற்குள் அவை களமிறங்கலாம் என கூறப்பட்டுகின்றது.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

இந்தநிலையில், நம்மில் பலருக்கு இந்த கப்பலில் எத்தைகய திறன் கொண்ட மின்பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழும்பியிருக்கலாம். வாருங்கள் அதையும் பார்த்துவிடலாம். இந்த மின்சார கப்பலில் 3,500 kWh திறனுடைய பேட்டரிகள் இணைக்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய திறனுடைய பேட்டரியை சார்ஜ் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதை நம்மால் கணிக்க முடியவில்லை.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

வழக்கமாக, தற்போது பயன்பாட்டில் வரும் மின்சார கார்களின் பேட்டரியைச் சார்ஜ் செய்யவே பல மணி நேரங்கள் பிடிப்பது குறிப்பிடத்தகுந்தது. அதனடிப்படையில் வைத்து பார்க்கையில் இந்த கப்பலை சார்ஜ் செய்ய நாட்கள் கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளும் யூகிக்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்படவில்லை.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

அதேசமயம், கார்களை வேகமாக சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் முறையைக் கையாள்வதைப் போல் இந்த கப்பலைச் சார்ஜ் செய்யவும் ஏதேனும் தொழில்நுட்பத்தை ஆசாஹி பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, தற்போது பயன்பாட்டில் இருக்கும் டேங்கர் கப்பல்களுக்கே போட்டியளிக்கும் வகையில் அதிக தொழில்நுட்பம், திறனுடைய கப்பலாக இது உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்த கப்பலில் 5ஜி ஸ்பீடு இணையம். நேரடியாக சேட்டிலைட்டுடன் இணைந்து துறைமுகத்தைத் தொடர்புகொள்ளுதல் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் இது பயன்பாட்டிற்கு வரவிருக்கின்றது.

இதேபோன்று, மின்சார கப்பலின் அதிவேக உந்துவிசைக்காக 360 டிகிரி வளைந்து சுழலும் த்ரஸ்டுகள் பின் பக்கத்தில் நிறுவப்பட்டிருக்கின்றன.

இவைதான் கப்பலை முன்னோக்கி அல்லது பின்னோக்கி செல்ல பயன்படும். இது 300கிலோவாட் திறனைக் கொண்டதாகும். இதேபோன்று கப்பலின் முன்புறத்தில் வலது மற்றும் இடது பக்கங்களுக்கு திருப்புவதற்கு ஏதுவாக 68kW திறனுடைய இரு த்ரஸ்டர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

5ஜி இணைப்பு, 3500kWh பேட்டரி: பிரம்மிக்க வைக்கும் உலகின் முதல் மின்சார கப்பல்... இதை எப்படிங்க சார்ஜ் செய்வாங்க!

இவையனைத்தும் இணைந்து மணிக்கு 20.3 கிமீ என்ற வேகத்தை கப்பலுக்கு வழங்குகின்றன. அதுமட்டுமின்றி, இந்த டேங்கரில் 499 டன் வரையிலான சரக்குகளைக் ஏற்றிச் செல்ல முடியும் எனவும் ஆசாஹி தெரிவித்துள்ளது. இவையனைத்தையும் பூஜ்ஜிய கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு மற்றும் புகை ஆகிய வெளியேற்றத்தில் வழங்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Asahi Tanker Works On Electric Oil Tanker. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X