ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிக்கபட்ட அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார் ஏலம்

By Ravichandran

அஸ்டன் மார்ட்டின் நிறுவனம், ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு உருவாக்கபட்ட டிபி10 காரை ஏலம் விட உள்ளது.

ஏலம் விடப்பட உள்ள அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

ஏலத்திற்கு வரும் டிபி10;

ஏலத்திற்கு வரும் டிபி10;

ஏலத்திற்கு வரும் இந்த டிபி10 கார், ஸ்பெக்டர் என்ற ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் வெளியாகும் ஹாலிவுட் படத்திற்காக உருவாக்கபட்டது.

எலம் விடப்படும் நாள்;

எலம் விடப்படும் நாள்;

இந்த அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார், ஃபிப்ரவரி 18-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

காருடன் கிடைக்கும் பொருட்கள்;

காருடன் கிடைக்கும் பொருட்கள்;

இந்த காருடன் 23 இதர பொருட்களும் வழங்கப்பட உள்ளது. அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் விதமாக இந்த கார் ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார், 4.7 லிட்டர், வி8 பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதில் ஒரு மணி நேரத்திற்கு, 190 மைல் என்ற உச்சபட்ச வேகத்தை எட்ட முடியும்.

சாலைகளில் இயக்க முடியாது!

சாலைகளில் இயக்க முடியாது!

ஏலம் விடப்பட உள்ள இந்த அஸ்டன் மார்ட்டின் டிபி10 காரை, சாலைகளில் இயக்க முடியாது என்பது குறிப்பிடதக்கது. இதற்கு காரணம், இது சாலை விதிகளுக்கு உட்பட்ட வாறு தயாரிக்கபடவில்லை.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுடனான பினைப்பு;

ஜேம்ஸ் பாண்ட் படங்களுடனான பினைப்பு;

1964-ஆம் ஆண்டில், வெளியான கோல்ட்ஃபிங்கர் என்ற படத்தில் இருந்து, ஜேம்ஸ் பாண்ட் படங்களுடன் அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் பினைப்பு கொண்டுள்ளது.

இந்த படத்தில் அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரை கொண்டு பல காட்சிகள் படமாக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது.

மாற்றங்கள் செய்யபடாத கார்;

மாற்றங்கள் செய்யபடாத கார்;

ஸ்பெக்டர் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்காக, இந்த டிபி10 கார்கள் பெரிய அளவில் மறுவடிவமைக்கபட்டது.

ஸ்பெக்டர் படத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கபட்டாலும், தற்போது ஏலத்திற்கு விடப்படும் காரானது எந்த விதமான மாற்றங்களும் செய்யபடாமல் காட்சிபடத்துவதற்காக மட்டுமே தயாரிக்கபட்டதாகும்.

36 மில்லியன் டாலர் கார்கள் அழிப்பு;

36 மில்லியன் டாலர் கார்கள் அழிப்பு;

ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டர் ஷூட்டிங்கின் போது, 36 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான கார்கள் அழிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டேனியல் க்ரெய்க் வழங்கும் ஆட்டோகிராஃப்;

டேனியல் க்ரெய்க் வழங்கும் ஆட்டோகிராஃப்;

ஏலத்திற்கு விடப்படும் இந்த அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார் வாங்கும் நபருக்கு, ஸ்பெக்டர் படத்தின் நாயகன் டேனியல் க்ரெய்க் ஆட்டோகிராஃப் இட்டு வழங்க உள்ளார் என்பது சிறப்பு செய்தியாகும்.

விலை;

விலை;

ஸ்பெக்டர் படத்திற்காக தயாரிக்கபட்ட இந்த அஸ்டன் மார்ட்டின் டிபி10 கார், குறைந்தபட்சம் 1 மில்லியன் யூரோ என்ற விலையில் ஏலம் விடப்பட உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஜேம்ஸ் பாண்ட் உபயோகித்த கார் ஏலத்திற்கு வருகிறது?

புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக பிரத்யேக மாடலை வெளியிட்ட அஸ்டன் மார்ட்டின்!

Most Read Articles
English summary
Aston Martin is auctioning one of 10 DB10 Cars, which were made for the latest James Bond film Spectre. This car comes with 23 other Bond-related goodies for a charity fundraiser. This Car is to be auctioned on February 18th 2016. The car sold in auction would be autographed by James Bond actor Daniel Craig.
Story first published: Monday, January 25, 2016, 21:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X