ஆடி லூனார் க்வாட்ரோ விண்வெளி வாகனம் பற்றிய தகவல்கள்!

By Saravana

இளம் தலைமுறை விண்வெளி விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் விதத்தில், கூகுள் நிறுவனம் லூனார் எக்ஸ் - ப்ரைஸ் என்ற பரிசுத் திட்டத்தை அறிவித்தது. அதன்படி, குறைவான செலவில் விண்வெளி ஆய்வு வாகனத்தை வடிவமைக்கும் பணிகளை ஊக்குவித்து வருகிஙறது.

மேலும், குறைவான செலவில் விண்வெளி வாகனத்தை வெற்றிகரமாக உருவாக்கும் பொறியாளர் குழுவுக்கு பெரும் பரிசுத் தொகையையும் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் இருந்து 25 பொறியாளர் குழுவினர் பங்கேற்றனர். அதில், இறுதியாக 15 அணிகள் தாக்குபிடித்துள்ளன. இந்த பரிசுப் போட்டி யுத்தத்தில் ஆடி பிராண்டில் ஒரு விண்வெளி வாகனம் உருவாகியுள்ளது.

01. ஆடி லூனார் குவாட்ரோ

01. ஆடி லூனார் குவாட்ரோ

கூகுள் லூனார் போட்டிக்காக ஆடி லூனார் க்வாட்ரோ என்ற பெயரில் ஒரு விண்வெளி வாகனம் தயாராகியுள்ளது. ஓபன் மைன்டட் ஃபிலாஸபி என்ற பெயரில் இயங்கி வரும் பொறியாளர் குழுவினர்தான் இந்த விண்வெளி வாகனத்தை உருவாக்கி வருகின்றனர்.

02. ஆடி உதவி

02. ஆடி உதவி

ஆடி லூனார் க்வாட்ரோ விண்வெளி வாகனத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை ஆடி கார் நிறுவனம் செய்து வருகிறது. மேலும், தனது க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் தொழில்நுட்பத்தையும் அக்குழுவினருக்கு வழங்கியிருக்கிறது.

03. கலப்பு உலோகம்

03. கலப்பு உலோகம்

மிக அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய வகையில், ஆடி லூனார் க்வாட்ரோ விண்வெளி ஆய்வு வாகனம் மெக்னீசியம் மற்றும் அலுமினிய பாகங்களுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. வெறும் 35 கிலோ எடை கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 3.6 கிமீ வேகத்தில் செல்லும்.

 04. சோதனைகள்

04. சோதனைகள்

தற்போது ஆடி லூனார் க்வாட்ரோ விண்வெளி வாகனம் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் வைத்து சோதனை செ்யப்படுகிறது. சூரிய மின்சக்தியில் இயங்கும் இந்த வாகனத்தில் மின்சாரத்தை சேமிப்பதற்கு லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

 05. கேமராக்கள்

05. கேமராக்கள்

ஆடி லூனார் க்வாட்ரோ வாகனத்தில் இரண்டு ஸ்டீயரியோஸ்கோப்பிக் கேமராக்கள் உள்ளன. இதில், இருக்கும் சக்கரங்கள் 360 டிகிரி கோணத்தில் திரும்பும். 2017ல்

06. நிபந்தனைகள்

06. நிபந்தனைகள்

இந்த பரிசுப் போட்டிக்காக வடிவமைக்கபடும் விண்வெளி வாகனம், நிலவுக்கு அனுப்பும்போது குறைந்தது 500 மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். உயர் துல்லியத்திலான வீடியோ மற்றும் படங்களை பூமிக்கு அனுப்ப வேண்டும் என்று கூகுள் நிபந்தனைகளை கொடுத்துள்ளது. இதில் முதல் இடம் பிடிக்கும் பொறியாளர் குழுவுக்கு 20 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும். இரண்டாவது இடம்பிடிக்கும் அணிக்கு 5 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும். இதுதவிர, பல்வேறு பிரிவுகளில் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Fast forwarding to the present, German luxury carmaker Audi is aiming for the moon, quite figuratively with the Audi Lunar Quattro.
Story first published: Wednesday, August 19, 2015, 16:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X