ரோட்டில் மட்டுமல்ல கடலிலும் சீறும் கார் நிறுவனங்கள்!

அதிவேக படகுகள் சினிமாவில் சீறிப் பாய்வதை கண்டு சிலிர்த்த அனுபவம் பலருக்கு உண்டு. அதேபோல், கார் நிறுவனங்களும் அந்த காட்சிகளை பார்த்த உந்துதலில் ஸ்பீட் போட் எனப்படும் அதிவேக படகுகளின் மாதிரிகளை உருவாக்கியுள்ளன. பிரத்யே டிசைன், பவர்ஃபுல் எஞ்சின் பல முன்னணி சொகுசு கார் நிறுவனங்களின் கான்செப்ட் அதிவேக படகுகள் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றன.

பல நிறுவனங்கள் பிரபல படகு ரேஸிங் அணிகளுடன் இணைந்து இந்த கான்செப்ட் படகுகளை தயாரித்துள்ளன. அந்த வகையில், மெர்சிடிஸ் ஏஎம்ஜி, புகாட்டி, ஆடி, ஜாகுவார் மற்றும் போர்ஷே நிறுவனங்கள் உருவாக்கியிருக்கும் அதிவேக படகுகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

மெர்சிடிஸ் ஏஎம்ஜியின் அதிவேக படகு

மெர்சிடிஸ் ஏஎம்ஜியின் அதிவேக படகு

மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனம் சிகரெட் ரேஸிங் அணியுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் அதிவேக படகுதான் இது. ஹன்ட்ரட்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் 42 அடி நீளம் கொண்ட இந்த படகு மெர்சிடிஸ் நிறுவனத்தின் ஜி63 எஸ்யூவியின் டிசைனை அடிப்படையாக கொண்டு உருவாக்க்பபட்டிருக்கிறது.

ஹன்ட்ரட்ஸ் எஞ்சின்

ஹன்ட்ரட்ஸ் எஞ்சின்

இந்த படகில் பொருத்தப்பட்டிருக்கும் 350 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் எஞ்சின்கள் மொத்தமாக 1750 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும். அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

ஜாகுவார் படகு

ஜாகுவார் படகு

மெர்டிசிடிஸ் கூட்டணி போட்டு படகை தயாரித்த நிலையில், ஜாகுவார் நிறுவனம் தனியாக இந்த மாதிரி படகை எக்ஸ்எஃப் 1 ஸ்போர்ட் பிரேக் அடிப்படையில் உருவாக்கியிருக்கிறது. 20 அடி நீளம் கொண்ட இந்த படகு ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 கார்பன் ஃபைபர் பாடி

கார்பன் ஃபைபர் பாடி

ஜாகுவார் டி டைப் காரை போன்று முழுவதும் ஜெல் கோட்டிங் கொண்ட கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளது. சீரிஸ் 1 எக்ஸ்ஜே காரின் எஞ்சின் இந்த படகில் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆடி டிரைமரான்

ஆடி டிரைமரான்

ஜெர்மனியிலுள்ள போர்ஸிம் பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்டீபைன் பெரிங்கர் என்ற மாணவரின் கற்பனையில் உருவான டிசைன்தான் ஆடியின் டிரைமரான் கான்செப்ட் படகு. மூனிச் நகரிலுள்ள ஆடியின் டிசைன் ஸ்டூடியோவில்தான் இறுதி வடிவம் பெற்றது. 49 அடி நீளம் கொண்ட இந்த படகு மெர்சிடிஸ் ஹன்ட்ரட்ஸ் படகை விட அதிக நீளம் கொண்டது. இது ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்டது.

ஆடி டிரைமரான் எஞ்சின்

ஆடி டிரைமரான் எஞ்சின்

இந்த படகில் 500எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 100 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாரையும் கொண்டிருக்கிறது.

 புகாட்டி சாங் புளூ

புகாட்டி சாங் புளூ

பிரபல வாகனவியல் டிசைனர் பென் வால்ஷ் கற்பனையில் உருவான டிசைன்தான் இது. கேடில்லாக் கன்வெர்ஜ் காரின் இன்டியரை வடிவமைத்த இவர் இந்த படகை புகாட்டிக்கான வடிவமைத்துள்ளார். 30 அடி நீளம் கொண்ட இந்த படகில் புளூ எனாமல் மற்றும் பாலிஷ்டு அலுமினியம் வண்ணக் கலவையுடன் மனதை மயக்குகிறது.

 புகாட்டி படகின் எஞ்சின்

புகாட்டி படகின் எஞ்சின்

இந்த படகில் புகாட்டின் 1000 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் டபிள்யூ 16 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

போர்ஷே படகு

போர்ஷே படகு

புகாட்டி படகின் டிசைனை ஒத்ததாக இருக்கும் இந்த படகு 28 அடி நீளம் கொண்டது. இது 3.50 லட்சம் டாலர் விலை கொண்டது.

போர்ஷே படகின் எஞ்சின்

போர்ஷே படகின் எஞ்சின்

இந்த படகில் 525 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் 8.0 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மணிக்கு அதிகபட்சமாக 128 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X