டிரைவரில்லா கார்கள் வந்தால் மது விற்பனை உயரும் : அதிர்ச்சி தகவல்

Written By: Krishna

விண்ணுயர வளர்ந்து தொழில்நுட்பம் நின்றாலும், அதன் பக்க விளைவுகள் சில மாறாத வடுக்களை விட்டுச் சென்று விட வாய்ப்புள்ளது. அணு மின் நிலையம், நியூட்ரினோ திட்டம், கடலுக்குள் சுரங்கப் பாதை என வியப்பூட்டும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் வருகின்றன. ஆனால், மறுபுறம் இயற்கை வளங்கள் சிதைக்கப்படுகின்றன.

ஒன்றை இழக்காமல் மற்றொன்றைப் பெற முடியாது என்பது இயற்கையின் நியதியும் கூட. அதுபோலத்தான் டிரைவரே இல்லாமல் இயங்கும் ஆட்டோ மொபைல் கார்களின் நிலையும். அந்தக் கார்கள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தால், நாட்டில் மது விற்பனை கொடிகட்டிப் பறக்கும் என்கிறது ஓர் ஆய்வு. மோர்கன் ஸ்டான்லியின் ஆடம் ஜோன்ஸ் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில்தான் இந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

 autonomous-cars-to-benefit-alcohol-industry-01

இந்தியா உள்பட சீனா, ஸ்காட்லாந்து என பல உலக நாடுகளில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட அனுமதியில்லை. ஒருவேளை ஆட்டோமேட்டிக் டிரைவிங் கார்கள் வந்து விட்டால், அதில் பயணிப்பவர்கள் மது அருந்தலாம் என சட்டத் திருத்தம் வகுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறது அந்த ஆய்வு.

இதன் மூலம் மது உற்பத்தி நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,500 கோடி) கூடுதலாக வருவாய் ஈட்ட முடியுமாம். யோசித்துப் பாருங்கள், டிரைவரே இல்லாத காரில், அனைவரும் மது அருந்திவிட்டு பயணித்தால் என்னவாகும்?

 autonomous-cars-to-benefit-alcohol-industry-02

கடந்த 2014-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நேர்ந்த மொத்த விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 31 சதவீதம் மது அருந்தியதால் நேர்ந்துள்ளது. இந்தியாவிலும் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாக்குவதால், ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

அதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், இத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகள் மதுவின் தீவிரத்தை அதிகப்படுத்தக் கூடாது என்பதே இப்போதைய எதிர்பார்பபு.

 autonomous-cars-to-benefit-alcohol-industry-03

ஒருவேளை தானியங்கி கார்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்தாலும், மதுக் கொள்களைகளை பெரும்பாலான நாடுகள் மாற்றாது என நம்பலாம். தற்போதுள்ள விதிகளை மேலும் கடுமையாக்கக் கூட வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் அந்த ஆய்வில் அனுமானிக்கப்பட்டுள்ள சில தகவல்கள் நடக்காமல் இருந்தால் நல்லது தான்.

 autonomous-cars-to-benefit-alcohol-industry-04
English summary
According to Morgan Stanley researchers, Alcohol Industry could benefit by $100 Billion, due to Autonomous Cars. Presence of driverless cars will be more beyond 2025. Driving while intoxicated is significant problem across world. In 2014, nearly one-third (31%) of all traffic-related deaths in the United States was alcohol-related. To know more, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

X