இந்திய மீடியாக்களின் ஹாட் டாப்பிக்காக மாறிய ஒபாமா கார் - சிறப்புத் தகவல்கள்!

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையில் மீடியாக்களின் அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் விஷயம், அவர் பயன்படுத்தும் விமானமும், காரும்தான். அதிபர் ஒபாமா கார் பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பே விரிவான தகவல்கள் மற்றும் படங்களுடன் ஒரு சிறப்பு செய்தித் தொகுப்பை நாம் வழங்யிருந்தோம்.

ராணுவ கவச வாகனங்களைவிட பன்மடங்கு பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட தி பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஒபாமாவின் கார் பற்றிய தகவல்களை மீண்டும் ஒருமுறை நினைவுகூறும் வகையில் இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம்.


மாடல்

மாடல்

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கேடில்லாக் நிறுவனத்தின் கேடில்லாக் ஒன் லிமோசின் ரக கார் மாடலைத்தான் அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்துகிறார்.

அதிபருடன் பணியை துவங்கிய தி பீஸ்ட்

அதிபருடன் பணியை துவங்கிய தி பீஸ்ட்

2009ம் ஆண்டு ஜனவரி 20ந் தேதி அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவியேற்றார். அவருடன் சேர்ந்த அன்றைய தினத்திலிருந்து, அதிபரின் அதிகாரப்பூர்வமான காராக பணியில் இணைந்தது தி பீஸ்ட் என்று ரகசியமாக அழைக்கப்படும் அமெரிக்க அதிபர் ஒபாமா கார்.

நடமாடும் அலுவலகம்

நடமாடும் அலுவலகம்

உலகின் எந்த மூலையில் இருந்தாலும், வெள்ளை மாளிகையை தொடர்பு கொள்ளவும், பணிகளை கவனிக்கவும் இயலும் வகையில் தகவல் தொடர்பு வசதிகளை கொண்டது.

 ஒபாமாவின் நிழலாக தொடரும் பயணம்

ஒபாமாவின் நிழலாக தொடரும் பயணம்

அமெரிக்காவில் பயணிக்கும்போது, வெளிநாடுகளுக்கு செல்லும்போது இந்த காரையே அதிபர் ஒபாமா பயன்படுத்துவார். அத்துனை சிறப்பு பாதுகாப்பு வசதிகள் கொண்டது. உள்நாட்டில் அதிபர் ஒபாமா இந்த காரில் செல்லும்போது அமெரிக்க கொடியும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் செய்யும்போது காரில் ஒரு பக்கத்தில் அமெரிக்க கொடியும், மறுபக்கத்தில் சுற்றுப் பயணம் சென்றுள்ள நாட்டு கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கும்.

ஒபாமாவுக்கு ரிசர்வ்டு இருக்கை

ஒபாமாவுக்கு ரிசர்வ்டு இருக்கை

முன்னோக்கிய பின் வரிசை இருக்கையில் வலது பக்க இருக்கையில்தான் அதிபர் ஒபாமா அமருவார். இந்த இருக்கையில் அவரை தவிர வேறு யாரும் அமர அனுமதி கிடையாது. ஒவ்வொரு முறையும் அவர் பயணிக்கும் முன்பாக காரை அமெரிக்க உளவுப்பிரிவினர் முழுமையாக சோதனை செய்த பின்னரே அதிபரை அழைத்து செல்வர்.

 கடல்தாண்டிய பயணம்

கடல்தாண்டிய பயணம்

அதிபர் ஒபாமா உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும்போது, அமெரிக்க வான்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தின் மூலம் இந்த கார் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக, அந்த விமானத்தில் சிறப்பு வசதிகளும் இருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

காரின் அனைத்து பக்கங்களிலும் இரவிலும் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்த நைட் விஷன் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கண்ணீர் புகை குண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள், தீத்தடுப்பு கருவி உள்ளிட்ட ஏராளமான தற்காப்பு பாதுகாப்பு சாதனங்களும் இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. நச்சுப் புகை மற்றும் ரசாயன தாக்குதல்களை சமாளிக்கும் வகையில், உட்புறத்தில் காற்றை சுத்திகரித்து வெளியில் அனுப்பும் விஷேச கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பஞ்சர் ஆகாத தன்மை கொண்ட குட்இயர் நிறுவனத்தின் ரன் ஃப்ளாட் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஓட்டுனர்

ஓட்டுனர்

அமெரிக்க சிஐஏ., உளவுப்பிரிவின் மூலம் பிரத்யேக பயிற்சிகள் கொடுக்கப்பட்ட ஓட்டுனரை காரை இயக்குகிறார். எந்தவொரு ஆபத்தான சூழ்நிலைகளையும் சமாளித்து காரை செலுத்தும் திறன் பெற்றவராக அவரை குறிப்பிடுகின்றனர். மேலும், ஓட்டுனரும் எந்நேரமும் உளவுப்பிரிவின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதும் ரகசியத் தகவல்.

விதிவிலக்கு

விதிவிலக்கு

ரன் பிளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், பஞ்சரானால் கூட காரை வேகமாக ஓட்டிச் செல்ல முடியும். இந்த கார் 5 டன் எடை கொண்டது. 100 கிமீ செல்வதற்கு 30 லிட்டர் வரை எரிபொருளை உறிஞ்சித் தள்ளும். மேலும், அமெரிக்க போக்குவரத்து துறையின் சுற்றுச் சூழல் மாசுபாடு விதிகளிலிருந்து இந்த காருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
U.S. President Barack Obama has a Cadillac limousine car, the world's most secure car will not be an exaggeration if asked. The U.S. Secret staff called this car "The Beast". Here we are giving full detail about Barak Obama's Cadillac Limousine.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X