சார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா?

குறைந்த விலை மின் வாகன சார்ஜிங் கருவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா?

இந்தியாவில் மின்சார வாகனங்களை விற்பனைச் செய்து வரும் நிறுவனங்களில் பேட்ஆர்இ (BattRE) நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனமே தற்போது விலைக் குறைந்த சார்ஜிங் கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இதனை சார்ஜிங் மையங்கள் மட்டுமின்றி தனியார் கடைகள் மற்றும் வீடுகளில் கூட நிறுவிக் கொள்ள முடியும். இதுவே இந்த மலிவு விலை சார்ஜிங் கருவியின் சிறப்பம்சம் ஆகும்.

சார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா?

பேட்ஆர்இ நிறுவனத்தின் இந்த செயல் ஜாம்பவான் நிறுவனங்களையே திக்குமுக்காட செய்துள்ளது. ஆமாங்க, பேட்ஆர்இ ஓர் ஆரம்பநிலை மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமே. இந்த நிறுவனம் தற்போதே இந்தியர்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கின்ற வகையிலும் புதிய விலைக்குறைந்த கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

சார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா?

புதிய சார்ஜிங் கருவியின் விலை ரூ. 3 ஆயிரம் மட்டுமே ஆகும். இந்த விலையில் இதுவரை எந்தவொரு நிறுவனமும் சார்ஜிங் கருவியை பொது பயன்பாட்டிற்கு ஏற்ப அறிமுகப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

சார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா?

இந்த நிறுவனம் விற்பனைச் செய்து வரும் மின்சார இருசக்கர வாகனங்களும் விலைக் குறைந்தவையாகவே காட்சியளிக்கின்றன. சிறிய கடை வைத்திருப்பவர்கள்கூட கூடுதல் வருமானத்தை ஈட்டும் வகையில் பேட்ஆர்இ நிறுவனத்தின் இந்த விலைக் குறைந்த சார்ஜிங் கருவியை நிறுவிக் கொள்ள முடியும்.

சார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா?

"இந்தியாவில் மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க எங்களின் விலைக் குறைந்த சார்ஜிங் கருவிகள் உதவும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சின் முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களுடனேயே இந்த மின்சார கருவிகள் நிறுவப்படுகின்றது" என பேட்ஆர்இ நிறுவனத்தின் நிறுவனர் நிஷ்சல் சவுத்ரி கூறியுள்ளார்.

சார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா?

வருகின்ற 2021ம் ஆண்டிற்குள் 500க்கும் அதிகமான சார்ஜிங் நிலையங்களைக் கட்டமைக்க பேட்ஆர்இ திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையிலேயே இந்த மலிவு விலை சார்ஜிங் கருவி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நிலையங்களில் க்யூஆர் கோட் வசதிக் கொடுக்கப்பட்டிருக்கும். சார்ஜிங் கருவியின் பயன்பாட்டிற்கான கட்டணத்தைச் செலுத்த இது உதவும்.

சார்ஜிங் நிலையத்தை வீட்டுக்கே கொண்டு வரலாம்... அதுவும் ரொம்ப மலிவு விலையில்... இவ்ளோ கம்மி விலையா?

இத்துடன், சிறப்பு ஆப் மூலம் சார்ஜிங் மையங்கள் எங்கெல்லாம் செயல்படுகின்றன என்ற தகவலை பேட்ஆர்இ வழங்க இருக்கின்றது. பேட்ஆர்இ எனும் பெயரிலேயே அந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றது. இதனைப் பயன்படுத்தி அருகில் எங்கு பேட்ஆர்இ-யின் சார்ஜிங் நிலையம் இருக்கின்றது என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.

Most Read Articles

English summary
BattRE Launches Most Low Budget EV Charger. Read In Tamil.
Story first published: Saturday, November 28, 2020, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X