பெல்ஜியத்தில் ஃபோர்டு மஸ்டாங் காரின் பிரத்யேக மியூசியம்!

Posted By:

பெல்ஜியத்திலுள்ள ஹூஸ்டென்- ஸோல்டர் நகரத்தை சேர்ந்தவர் அடல்பெர்ட் எங்லர். இவர் ஃபோர்டு மஸ்டாங் காரின் படு தீவிரமான காதலர் என்று சொல்வதைவிட வெறியர் என்று கூறினால் மிகையில்லை. இதன் காரணமாக சிறு வயது முதல் ஃபோர்டு மஸ்டாங் காரை சேகரிக்கும் முயற்சியை துவங்கினார். தனது 8 வயதில் முதல் ஃபோர்டு மஸ்டாங் காரின் ஸ்கேல் மாடலை வாங்கினார். அன்றிலிருந்து ஸ்கேல் மாடல் என்றில்லாமல் ஒரிஜினல் கார்களையும் வாங்கி சேகரிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில், கார்களை சிறப்பாக பராமரிக்கும் விதமாக ஒரு மியூசியத்தை உருவாக்கி, அதில் அழகாக விதவிதமான ஃபோர்டு மஸ்டாங் கார்களை அழகாக பார்வைக்கு வைத்திருக்கிறார். இன்றைய தேதியில் உலகின் மிக பிரத்யேகமான ஃபோர்டு மஸ்டாங் கார் சேகரிப்பு நிலையமாக இதனை அவர் பெருமையுடன் குறிப்பிடுகிறார். தற்போது அந்த மியூசியத்தில், 5,500 ஃபோர்டு மஸ்டாங் கார்கள் மற்றும் ஸ்கேல் மாடல்கள் என்று அந்த சேகரிப்பு எண்ணிக்கை இன்று 5,500ஐ தொட்டிருக்கிறது.

உலகிலேயே அதிக ஃபோர்டு மஸ்டாங் மாடல்களை சேகரித்து வைத்திருக்கும் ஒரே நபர் எங்லர் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் சுவாரஸ்யமான விஷயம், ஃபோர்டு மஸ்டாங் காரின் அடிப்படையிலான மது பாட்டில்களும் இவரிடம் உள்ளன. வீடியோவில் எங்லர் கார் மியூசியத்தை பார்த்து ரசியுங்கள்.

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/ABw1FK4Pw58" frameborder="0" allowfullscreen></iframe></center> 

English summary
Bigger collections may well exist, but Mustang mad Adelbert Engler claims his is the largest viewable collection of scale model Ford Mustangs on the planet.&#13;

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark