பனிக்கட்டி ஏரியில் அனல் பரப்பிய பென்ட்லீ பென்டைகா!

By Saravana

பென்ட்லீயின் பென்டைகா எஸ்யூவி கார் பின்லாந்தின் பனி படர்ந்த ஏரிகளில் அனல் பறக்க ஓட்டப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

பிரிமியம் சொகுசு எஸ்யூவியான பென்ட்லீ நிறுவனத்தின் புதிய பென்டைகா அனைத்து திறமைகளையும் வெளிபடுத்தி, பனி மிகுந்த ஏரியில் இயக்கபடுவது போல் படமாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இது பார்ப்பவர்களை சிலிர்க்க வைக்கும் விதத்தில் உள்ளது. எஸ்யூவி செக்மன்ட்டில், பென்ட்லியின் சார்பாக அறிமுகம் செய்யபட உள்ள முதல் மாடல் பென்டைகா. இந்த காரில் 6.0 லிட்டர், டபுள்யூ12 பெரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின் 600 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 900 என்எம் டார்க்கை வெளிபடுத்த கூடிய திறன் கொண்டுள்ளது. பென்டைகாவின் இஞ்ஜினுடன் நிரந்தர ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பவர் ஆன் ஐஸ் ஈவன்ட் எனப்படும் நிகழ்ச்சியில், ஏராளமான விருந்தினர்களுக்கு, இந்த பென்டைகா காரை இயக்கி மகிழும் வாய்ப்புகள் கொடுக்கப்பட உள்ளது. 4 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, பின்லாந்தில் உள்ள ஷாலேட் பூகா மலையில் நிகழ உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், நான்கு முறை வேர்ல்ட் ராலி கார் பந்தய தொடரில் முன்னாள் சாம்பியனாக இருந்த ஜூஹா கன்கூன்னென் அவர்களுடன் இணைந்து, முதன் முதலாக பென்டைகா காரை ஓட்டி அல்லது பயணித்து மகிழ்பவர்களாக இருக்கலாம்.

இதோடு மட்டுமல்லாமல், பவர் ஆன் ஐஸ் ஈவன்ட் என்ற நிகழ்ச்சியின் போது, பென்ட்லீ நிறுவனம் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்கின்றது. ரெய்ண்டீர் எனப்படும் மான் தோட்டங்களுக்கு செல்லும் பயணமும் அதில் அடங்கும். ஏரி ஓரம் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள ஐஸ் பாரில் பொழுதை கழிக்கலாம், பின்லாந்தின் உணவு வகைகளை உண்டு மகிழலாம், அல்லது ஸ்மோக் சானா போன்ற பல்வேறு அனுபவங்களை பெறலாம்.

Most Read Articles
English summary
Video of Bentley Bentayga Driven On Frozen Lake In Finland released. Bentley's premium luxury SUV, the Bentayga was recently caught driving over frozen lakes in Finland. This video of Bentley's Bentayga showcases, its all-wheel drive technology in icy conditions of Finland.
Story first published: Sunday, November 1, 2015, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X