பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கான கடிகாரத்தின் விலை 'ஜஸ்ட்' ரூ.1.50 கோடி...!!!

Written By:

பென்ட்லீ பென்டைகா குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வெளியாகி ஆட்டோமொபைல் தளங்களுக்கும், வாசகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறது.

இங்கிலாந்து ராணிக்கு முதல் பென்ட்லீ பென்டைகா டெலிவிரி கொடுக்கப்பட உள்ளதாகவும், அதனை அவர் மான் வேட்டைக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்தநிலையில், அடுத்து ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கு ஆப்ஷனலாக வழங்கப்படும் கடிகாரத்தின் விலை ரூ.1.50 கோடி என்பதே இப்போதைய ஹாட் தகவல். அதாவது, பென்டைகாவுக்கு இணையான விலையில் இந்த கடிகாரம் விற்பனைக்கு கிடைக்கும் என்பதே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரத்யேக கடிகாரம்

பிரத்யேக கடிகாரம்

பென்டைகா எஸ்யூவியின் டேஷ்போர்டின் நடு நாயகமாக அமரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கடிகாரத்தை கடிகார தயாரிப்பில் பிரபலமான பிரெட்லிங் நிறுவனம் தயாரித்து கொடுக்கிறது.

பென்டைகாவுக்காக...

பென்டைகாவுக்காக...

இந்த பிரத்யேக கடிகாரம் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்காக மட்டுமே தயாரித்து வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் விருப்பத்தின்பேரில் இந்த கடிகாரத்தை வாங்கிக் கொள்ளலாம்.

என்ன ஸ்பெஷல்

என்ன ஸ்பெஷல்

இந்த கடிகாரம் தங்கத்தில் உருவாக்கப்படுகிறது. காரை ஆர்டர் செய்யும்போதே, ரோஸ் கோல்டு அல்லது ஒயிட் கோல்டு ஆகியவற்றில் ஏதெனும் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பையும் பெறலாம். மேலும், இந்த கடிகாரத்தில் மணியை காட்டுவதற்கான இடங்களில் 8 வைர கற்களும் பதிக்கப்பட்டிருக்கிறது.

துல்லியமான நேரம்

துல்லியமான நேரம்

இந்த கடிகாரம் இருக்கும் இடத்தை வைத்து துல்லியமாக நேரத்தை கணித்து இயங்கக்கூடிய பிரத்யேக தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மூன்றுமுறை சுழன்று துல்லியமான நேரத்தை காட்டும்.

காஸ்ட்லி ஆக்சஸெரீ...

காஸ்ட்லி ஆக்சஸெரீ...

பென்ட்லீ பென்டைகாவுக்கு மட்டுமின்றி, கார்களுக்கான உலகின் விலையுயர்ந்த ஆக்சஸெரீகளில் ஒன்றாக இந்த கடிகாரம் குறிப்பிடப்படுகிறது.

தனித்துவம்

தனித்துவம்

பென்ட்லீ நிறுவனம் தனது முதல் எஸ்யூவியான பென்டைகாவை மிகவும் தனித்துவமான மாடலாக நிலைநிறுத்த விரும்புகிறது. மேலும், பென்டைகா எஸ்யூவியின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் இந்த கடிகாரம் ஆப்ஷனலாக வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
English summary
Bentley To offer world’s most expensive in-car clock For Bentayga SUV.
Story first published: Saturday, September 19, 2015, 13:19 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark