ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம்!

வாகனங்களை ஓட்டும்போது பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம், உங்களது பாதுகாப்பு மட்டுமின்றி, சாலையில் செல்லும் பாதசாரிகள், பிற வாகன ஓட்டுனர்கள் மற்றும் பிரயாணிகள் உள்பட அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. பாதுகாப்பாக ஓட்டும் முறைகளை கடைபிடிக்கும் பழக்கத்தை பின்பற்றினால், விபத்தில் மரணிக்கும் அல்லது காயமடைவோரின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும்.

ஆனால், நெடுஞ்சாலைகளில் சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் பழக்கம் நம் நாட்டில் குறைந்து காணப்படுகிறது. ஹெட்லைட் போடாமல் ஓட்டி வரும் டிரக் ஓட்டுனர்களாகட்டும், பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல், தாறுமாறாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளாகட்டும், விபத்துக்களை விருந்து வைத்து அழைக்கும் ஓட்டுனர்கள் நம் நாட்டில் அதிகம்.

இந்த நிலையை மாற்றும் முயற்சியாக, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பெங்களூரை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர் குழுவினர் சமீபத்தில் சாலை விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டனர். பெங்களூரிலிருந்து கோல்ஹாப்பூர் வரை 1,300 கிமீ., தூரத்துக்கு இந்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயணம் நடந்தது.

பயணத்தின் கருப்பொருள்...

பயணத்தின் கருப்பொருள்...

"சாலை பாதுகாப்பு உங்களிடமிருந்துதான் துவங்குகிறது" என்பதை கருப்பொருளாக கொண்டு இந்த பயணத்தை ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர் குழுவினர் மேற்கொண்டனர். பெங்களூரிலிருந்து 30 ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்கள் தங்களது பைக்குகளுடன் இந்த விழிப்புணர்வு பயணத்தில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தொந்தரவு தராதீர்...

தொந்தரவு தராதீர்...

சாலையை பிறருக்கு தொந்தரவு தராமல், பங்கிட்டு செல்வதற்கும், சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தியும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், நம் நாட்டு நெடுஞ்சாலைகளில் வியாபித்து செல்லும் டிரக்குகளால் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, பயணத்தின்போது வழியில் டிரக் ஓட்டுனர்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு விஷயங்கள் எடுத்து கூறப்பட்டது.

விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு பிரச்சாரம்

டிரக்குகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் பிற வாகன ஓட்டிகளுக்கு கண்களுக்கு எளிதாக தெரியக்கூடிய வகையில், பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை பின்புறமும், பக்கவாட்டிலும் ஒட்டுவதற்கும் அறிவுறுத்தி சொல்லப்பட்டது. இதன்மூலம், விபத்துகளை வெகுவாக குறைக்க முடியும் என்றும் அவர்களுக்கு ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் விளக்கம் அளித்தனர்.

அதிர்ந்த கோஹ்காப்பூர்

அதிர்ந்த கோஹ்காப்பூர்

பெங்களூரிலிருந்து சென்ற ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர் குழுவினருடன் மும்பையை சேர்ந்த 30 ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர்களும், கோவாவை சேர்ந்த 20 ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர் குழுவினரும் இணைந்து கொண்டனர். பின்னர், ஹார்லி டேவிட்சன் பைக்குகளில் கோல்ஹாப்பூர் நகரச் சாலைகளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஊக்கமளித்த அரசியல் தலைவர்

ஊக்கமளித்த அரசியல் தலைவர்

கோல்ஹாப்பூரை சேர்ந்த இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும், பீகாரின் முன்னாள் கவர்னருமான டிஒய். பாட்டீல் அழைப்பின்பேரில், அவரது வீட்டிற்கு ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் குழுவினர் சென்றனர். அப்போது, ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர் குழுவினரின் சாலை விழிப்புணர்வு பயணத்தை வெகுவாக பாராட்டி, ஊக்கப்படுத்தினார்.

அனைவருக்கும் பொறுப்பு

அனைவருக்கும் பொறுப்பு

விபத்தை தவிர்க்கும் வழிமுறைகளும், விபத்தில்லா சாலைகள் மூலம் கிடைக்கும் பயன்களையும், இந்த பயணத்தின் மூலம் ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர் குழுவினர் நம் அனைவருக்கும் கூறுவதாகவே அமைந்தது. ஹார்லி டேவிட்சன் பைக் உரிமையாளர் குழுவினரின் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் போன்று அனைத்து பைக் மற்றும் கார் உரிமையாளர் குழுவினரும் இதேபோன்ற முயற்சிகளையும், பிரச்சாரங்களை தேசிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்று டிரைவ்ஸ்பார்க் தளம் கேட்டுக் கொள்கிறது.

Most Read Articles
English summary
The Tusker H.O.G. Chapter's latest initiative ‘Road Safety Starts With You’ was one such initiative that seeks to spread that basic awareness that we require more of. The chapter organised a ride from Bangalore to Kolhapur (to and fro 1300 km) to promote that very belief — safety on the road, begins and ends with you. The ride saw nearly 30 Harley riders from Bangalore roaring the highway with a singular thought — follow traffic rules, always, respect each other and ultimately, share the road.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X