வாழ்க்கையில் ஒரு முறையேனும் பயணிக்க வேண்டிய அழகிய சாலைகள்..!

வாழ்வில் ஒருமுறையாவது பயணம் செய்ய ஏற்ற சாலைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

By Staff

நம் வாழ்வில் முக்கியமான பங்கை வகிப்பது பயணங்கள் தான். ஒவ்வொரு பயணமும் வாழ்க்கைக்கு தேவையான ஏதோ ஒன்றை நமக்கு கற்று கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன.

தொலைதூர பயணத்திற்கான சிறந்த சாலைகள்..!

ஒரு முறை நாம் மேற்கொள்ளும் பயணமானது நம் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாத நினைவுகளை நமக்கு அளிக்கிறது.

தொலைதூர பயணத்திற்கான சிறந்த சாலைகள்..!

நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ, காதலருடனோ அல்லது கணவன் - மனைவியாகவோ என இந்தப் பயணம் யாருடன் சேர்ந்து சென்றாலும் இனிதான நினைவுப் பொக்கிஷமாக மாறிவிடுகிறது.

தொலைதூர பயணத்திற்கான சிறந்த சாலைகள்..!

தற்போது விடுமுறை காலம் தொடங்கிவிட்டது, மாணவர்களுக்கும் தேர்வு முடிந்து எங்காவது செல்லலாம் என்ற ஆவலில் இருப்பர். பயணம் மேற்கொள்ள சிறந்த ஒரு சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தொலைதூர பயணத்திற்கான சிறந்த சாலைகள்..!

முன்பெல்லாம் ஒற்றைப்பாதையாக இருந்த சாலைகள் தற்போது நான்குவழிப்பாதைகளாக மாறிவிட்டன. இதன் காரணமாக சில ரம்மியமான காட்சிகளை நாம் இழக்க நேரிட்டுள்ளது.

தொலைதூர பயணத்திற்கான சிறந்த சாலைகள்..!

சிறு வயதில் சென்னை முதல் மதுரை வரை சென்றால் பார்க்கக்கூடிய பசுமை பரப்பு காட்சிகளை தற்போது காண இயலாது. பயணங்களே தற்போது இயந்திரத்தனமாக மாறிவிட்டது என்று கூட கூறலாம்.

தொலைதூர பயணத்திற்கான சிறந்த சாலைகள்..!

மாறிவிட்ட காலகட்டத்தில் வசித்துவரும் இக்காலத்தில் பசுமை நினைவுகளை அளிக்கும் வகையில் சில சாலைகள் குறித்து இந்த தொகுப்பில் நாம் காண இருக்கிறோம்.

தொலைதூர பயணத்திற்கான சிறந்த சாலைகள்..!

இந்த சாலைகளில் ஒன்றிலேனும் வாழ்வில் ஒருமுறையாவது நாம் பயணம் மேற்கொள்ளும் போது மனதிற்கு இதமான உணர்வை நிச்சயம் அனுபவிப்பீர்கள் என்று உறுதியாக கூறலாம்.

லே - மணாலி

லே - மணாலி

இந்தப் பட்டியலில் முதல் இடம் காஷ்மீரீல் உள்ள லே - மணாலி சாலைக்கே..! உலகின் மிக உயரமான சாலை என்று இதற்கு ஒரு தனி அடையாளமும் உண்டு.

லே - மணாலி

லே - மணாலி

குகை வழி சாலைகளிலும், இமயமலையின் மலை வழிப்பாதையிலும் செல்லும் வழித்தடம் காண்போரை ஆச்சரியம் கொள்ளச் செய்யும். இதன் உயரம் 13,000 அடி என்பது வியப்புக்குரிய ஒன்று.

லே - மணாலி

லே - மணாலி

இமயமலைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பயணம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழ்வில் ஒருமுறையாவது செல்லவேண்டும் என்ற பட்டியலில் இந்த சாலைக்கே முதல் இடம்..!

சிலிகுரி - டார்ஜீலிங்

சிலிகுரி - டார்ஜீலிங்

மேற்குவங்க மாநிலத்தில் அமைந்துள்ள இயற்கை எழில்கொஞ்சும் மலைவாசஸ்தலமான டார்ஜீலிங் இந்தியாவின் முக்கிய மலைவாசஸ்தலங்களுள் ஒன்றாகும்.

சிலிகுரி - டார்ஜீலிங்

சிலிகுரி - டார்ஜீலிங்

சிலிகுரி முதல் டார்ஜிலிங் வரை மலைப்பாதை பயணம் நம்மை பூரிப்பின் உச்சத்துக்கு இட்டுச்செல்லும். 60 கிமீ மலைப்பாதையில் பயணம் செய்ய 2 மணி நேரம் ஆகலாம்.

சிலிகுரி - டார்ஜீலிங்

சிலிகுரி - டார்ஜீலிங்

தேயிலை தோட்டங்கள், பசுமை பள்ளத்தாக்குகள், அடர்த்தியான மற்றும் உயரமான மரங்கள் உள்ளிட்டவற்றை பார்த்துக்கொண்டே பயணம் செய்வது அலாதி அனுவவம் ஆகும்.

சிலிகுரி - டார்ஜீலிங்

சிலிகுரி - டார்ஜீலிங்

மேலும் டார்ஜீலீங்கின் பிரபலமான மலை ரயிலும் இந்த சாலையிம் ஓரமாகவே செல்கிறது, இதனையும் பார்த்துக்கொண்டே பயணிப்பது அலாதி இன்பத்தை தரும்.

கொல்லி மலை

கொல்லி மலை

கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது.

கொல்லி மலை

கொல்லி மலை

எந்த ஒரு ஓட்டுநரும் இந்த சாலையில் வாகனம் ஓட்ட விரும்புவர் அது காராக இருந்தாலும் சரி பைக்காக இருந்தாலும் சரி.

கொல்லி மலை

கொல்லி மலை

15 கிமீ தொலைவுக்குள் 70 க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இது மிகவும் ஆபத்தான சாலைகளுள் ஒன்றாகும். (கொல்லி என்ற பெயர் இதன் காரணமாகக் கூட வந்திருக்கலாமோ..!)

சாலக்குடி - வால்பாறை

சாலக்குடி - வால்பாறை

இயற்கை எழில்கொஞ்சும் கேரளாவில் உள்ள சாலக்குடி முதல் தமிழ்நாட்டில் உள்ள வால்பாறை வரையிலான இந்த சாலை அடர்ந்த காடுகள் வழியே செல்கிறது.

சாலக்குடி - வால்பாறை

சாலக்குடி - வால்பாறை

மிகவும் குறுகிய சாலையான இதில் பயணிக்கும் போது குழுமையான சூழலை அனுபவித்தவாறே செல்லாலாம், யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மாலை 4 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

சாலக்குடி - வால்பாறை

சாலக்குடி - வால்பாறை

நீங்கள் இயற்கை ஆர்வலர் என்றால் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊடே பயணிப்பது உங்களுக்கு மனநிறைவை அளிக்கும். வழியில் வாலாச்சல் மற்றும் அதிரப்பள்ளி அருவிகளையும் அதிலிருந்து வழிந்தோடும் நீரையும் பயணத்தின் முழுவதும் காணலாம்.

சென்னை - தூத்துக்குடி ஈசிஆர்

சென்னை - தூத்துக்குடி ஈசிஆர்

மலைச்சாலை பிடிக்காது, ஆனால் நெடுந்தூரப் பயணம் செய்ய ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக பயணப்பட வேண்டியது இந்த சாலையில் தான்.

சென்னை - தூத்துக்குடி ஈசிஆர்

சென்னை - தூத்துக்குடி ஈசிஆர்

சென்னைக்கு புகலிடமாக இருப்பது ஈசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை, வங்கக் கடலில் அழகைக் கண்டவாறே, பயணம் செய்வது மிகவும் ரம்மியமான ஒன்று.

மூணார் - உடுமலைப்பேட்டை

மூணார் - உடுமலைப்பேட்டை

கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள மூணார், பச்சைக் கம்மளம் விரித்தார் போல காட்சியளிக்கக்கூடியது. இங்கு நிலவும் சீதோஷ்னம் எப்போதும் குளிர்சியானதாக இருக்கும்.

மூணார் - உடுமலைப்பேட்டை

மூணார் - உடுமலைப்பேட்டை

தமிழ்நாட்டில் இருந்து மூணார் செல்ல தேனி வழியே மற்றொரு பாதை இருந்தாலும், இது ஒரு வித்தியாசமான காட்சிகள் கொண்ட வழியாகும்.

மூணார் - உடுமலைப்பேட்டை

மூணார் - உடுமலைப்பேட்டை

இரவிகுளம் தேசிய பூங்கா, சின்னார் வனவிலங்கு சரணாலயம் போன்ற முக்கிய தலங்கள் இந்தப் பாதையில் உள்ளன. இந்த சாலையில் செல்லும் போது காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் அதிகம் கொண்ட உடுமலைப்பேட்டையை பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

Most Read Articles
English summary
Read in Tamil about 5 best roads to travel in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X